திருச்சந்தவிருத்தம் - பூவிருந்தவல்லி (அதான் தமிள்ல பூந்தமல்லி) அருகே வாழ்ந்த "திருமழிசையாழ்வார்" இயற்றியருளியது.
மிகச்செறிந்த கருத்துக்களை உள்ளடக்கிய பாசுரங்கள் சந்த நடைச்சொற்களைக்கொண்டு இனிமையாய் ஒலிக்கின்றன.
அதில் ஒருவரி இப்படி
"வண்டுகிண்டு தண்டுழாயலங்கலாய்"
வண்டு கிண்டும் தண் + துழாய் + அலங்கல்
தண் - குளுமை - தண்ணீர் (சுடுதண்ணீர்னு ஒண்ணு செவ்வாய் கிரகத்துல கூட கிடைக்காது)
துழாய் - துளசி
அலங்கல் - மாலை
வண்டுகள் சுற்றி ரீங்காரமிடும் குளிர்ந்த துளசி மாலை அணிந்தவனே என்று பெருமாளை வாஞ்சையோடழைக்கிறார்.
இவ்வரிகளைப் படிக்கும்போதெல்லாம் துளசியை மென்று தின்றவுடன் தண்ணீர் அருந்தினால் ஒரு குளுமையை தொண்டையில் உணருவோமே.. அப்படி உள்ளத்தில் குளிர்ந்து போனேன்.
மொழியைச் சகட்டுமேனிக்கு "உள்ள பூந்து வெளிய வூடு கட்டியடிக்கும்" என்போன்றோரிடமிருந்து தமிழைக் காப்பாற்றி வாழவைப்பது இத்தகைய இன்தமிழ் வரிகள்தான்.
அவையடக்கம்லாம் இல்லை. என்னுளம் சுடும் உண்மை.
புணர்ச்சி விதிகளில் இது என்ன வகை?
தண்+துழாய்=தண்டுழாய்
இத்தகைய சொற்கள் இன்னும் நிறைய பயன்படுத்தியிருக்கிறார் ஆழ்வார்.
No comments:
Post a Comment