ஆரோக்கியமான அரசியலுக்கு நல்லவர்கள், வல்லவர்கள் இருத்தல் வேண்டும். அப்போதுதான் நல்லாட்சி அமையும். அரசியலுக்கு அச்சாணி தேர்தல். தற்போதைய தேர்தலில் பணபலமும், குண்டர் பலமும் முக்கியமான அங்கங்களாக இருக்கின்றன. இவை ஒழிய வேண்டும். உச்சநீதிமன்றத்தில் கடந்த 30 ஆண்டுகளுக்கு மேலாக நிலுவையில் உள்ள தேர்தல் சீர்திருத்தங்களை நடைமுறைக்கு கொண்டுவரவேண்டும் என்றும், 1998ல் இந்திரஜித் குப்தா தலைமையில் அமைந்த குழு பரிந்துரைத்த வேட்பாளர்களின் செலவை அரசே ஏற்கவேண்டும் போன்ற சீர்திருத்தங்களை செயல்படுத்த வழக்கு தொடுத்துள்ளேன். இந்த வழக்கு ஆவணங்களை படித்துக்கொண்டிருக்கும்போது இதுவரை இந்தியாவில் தேர்தல் சீர்திருத்தத்திற்காக பல குழுக்கள் அமைத்துள்ளன.
அவை
1. கூட்டு நாடாமன்ற குழுவில் தேர்தல் சீர்திருத்த அறிக்கை - 1971 (இது ஜெகநாத ராவ் தலைமையில் இயங்கியது). இந்த அறிக்கை 18.1.72ல் வழங்கப்பட்டது.
2. தார்குண்டே கமிட்டி
3. தினேஷ் கோஸ்சாமி கமிட்டி - 1990
4. ஓரா கமிட்டி - 1993
5. இந்திரஜித் குப்தா கமிட்டி - 1998
6. லா கமிஷன் அளித்த தேர்தல் சீர்திருத்த சட்டங்கள் குறித்த அறிக்கை - 1999
7. அரசியலமைப்புச் சட்ட திருத்த தேசியக் குழு - 2000
8. தேர்தல் ஆணையத்தின் தேர்தல் சீர்திருத்தம் குறித்த அறிக்கை - 2004
9. இரண்டாவது நிர்வாக சீர்திருத்த அறிக்கை - 2008
மற்றும் உச்சநீதிமன்ற ஆணைகள்

ஒரு கட்டத்தில் நல்லவர்கள், நேர்மையாளர்கள் அரசியலில் களம் இல்லை என்ற நிலை சிறுக சிறுக வந்துகொண்டிருக்கும். இந்த கேடுகெட்ட பரிணாமம் எதில் போய் முடியுமோ?
No comments:
Post a Comment