Wednesday, April 13, 2016

பனாமா கோப்புகள் விவகாரம்

இதைப் பற்றி முகநூல் நண்பர்கள் தமிழில் சுருக்கமாக வேண்டும் என்று கோரினார்கள். ஏற்கனவே இது குறித்த ஆங்கில பதிவையும், அதன் இணைப்பையும் சில நாட்களுக்கு முன்னால் பதிவு செய்திருந்தேன்.

பனாமா நாட்டைச் சேர்ந்த மொஸ்ஸாக் ஃபொன்ஸெகா (MOSSACK FONSECA) என்ற நிறுவனம் 3 லட்சத்துக்கும் மேலான போலியான வாடிக்கையாளர்களைக் கொண்ட நிறுவனத்தின் ஆவணங்களிலிருந்து பல முறைகேடுகள் வெளியாகியுள்ளன. வரி ஏய்ப்புகள், கருப்புப் பணம் பதுக்குதல் போன்றவர்களுக்கு உதவியாக இருந்த ஆவணங்கள் வெளிப்பட்டுள்ளன. இந்தப் பட்டியலில் 500 இந்தியர்களும் உள்ளனர். இதில் சட்டத்தை மீறி கருப்பு பணத்தை முதலீடு மற்றும் பதுக்கி வைத்துள்ள விவரங்கள் யாவும் இந்த ஆவணங்களில் உள்ளன.

உலக அளவில் 12 நாடுகளின் ஆட்சியாளர்கள், 143 அரசியல் தலைவர்கள், மற்றும் அவர்களது குடும்பத்தார் சம்பந்தப்பட்ட சொத்து விவரங்கள் எல்லாம் இந்த ரகசிய கோப்புகளில் இருப்பதாக தெரிகிறது.

ரஷ்ய அதிபர் புதின், சீன கம்யூனிஸ்ட் தலைவர்கள், அவர்களது குடும்பங்கள், வளைகுடா நாட்டைச் சேர்ந்த தலைவர்கள் என பல சங்கதிகள் சங்கிலி கோர்வையான மர்மங்கள் இந்த கோப்பில் உள்ளன. ஐஸ்லாந்து பிரதமர் இதனால் பதவி விலகியுள்ளார். சீனாவிலும் இது குறித்தான தகவல்கள் வெளியிட தடை விதிக்கப்பட்டுள்ளது.  ரஷ்யா இது அமெரிக்காவின் சதி என்று சொல்கிறது. இந்தியாவில் சம்பந்தப்பட்ட சிலரே சம்பந்தம் இல்லை என மறுக்கின்றனர்.

இந்த நிறுவனத்தின் கிளைகள் உலகம் முழுவதும் பரவியுள்ளன. இதில் எத்தனை போலி நிறுவனங்கள் என தெரியவில்லை. வெளிநாட்டில் மறைக்கப்பட்டுள்ள கருப்பு பணத்தை மீட்போம் என்று தேர்தல் காலங்களில் வெறும் கோஷங்களாகவே உள்ளன. சுவிஸ் வங்கிகளிலும், மற்றும் பல வங்கிகளிலும் முடக்கப்பட்ட பணத்தை மத்திய அரசால் மீட்க முடியவில்லை. அதே பிரச்சினைதான் இந்த பனாமா பிரச்சினையிலும்.

https://panamapapers.icij.org/

No comments:

Post a Comment

#விவசாயிகள் சங்க நிறுவன தலைவர் சி.நாராயணசாமிநாயுடு 40வது நினைவு நாள்.

———————————————————- தமிழக விவசாயிகள் சங்க நிறுவன தலைவர் சி.நாராயணசாமி நாயுடு (டிசம்பர் 6, 1925 - டிசம்பர் 20, 1984) தமிழக விவசாயிகள் சங்க ந...