"யானை வரும் பின்னே மணியோசை வரும் முன்னே" என்ற நிலையில் தேர்தல் களை கட்டிவிட்டாலே கருத்துக் கணிப்புகளும் தேர்தலுக்கு முன்னால் வரத் துவங்கிவிடும். தற்போதைய கருத்துக்கணிப்புகள் யாவும் தவறாகிவிட்டன. 1996, 1998, 1999க்கு பின் வந்த எந்த கருத்துக் கணிப்பும் தேர்தல் முடிவுக்கு பொருத்தமாக வரவில்லை. வெறும் யூகங்கள்
அடிப்படையிலேயே 1999க்கு பின் நடந்த கருத்துக் கணிப்புகள் வெளியிடப்பட்டன. 7 மாதங்களுக்கு முன்னால் பீகார் தேர்தலில் வெளியிடப்பட்ட 13 கருத்துக் கணிப்புகளும் பாரதிய ஜனதா கூட்டணி வெற்றி பெறும் என்று கூறின. ஆனால் தேர்தல் முடிவில் பாரதிய ஜனதா கூட்டணிக்கு வெறும் 58 இடங்களே கிடைத்தன. 2015 டெல்லி சட்டமன்ற தேர்தலில் 10 கருத்துக் கணிப்புகளில் 6 கருத்துக் கணிப்புகள் பாரதிய ஜனதா 31 இடங்கள் அதிகமாக பெற்று ஆட்சி அமைக்கும் என்று கூறியது. ஆனால் பாரதிய ஜனதா பெற்றதோ வெறும் 3 இடங்கள். 2009 நாடாளுமன்றத் தேர்தலில் 274 இடங்களை தேசிய ஜனநாயகக் கூட்டணி பெற்று மக்களவையில் உறுப்பினர்களை கொண்டு ஆட்சி அமைக்கும் என்ற Outlook கருத்துக் கணிப்பும் பொய்த்துவிட்டது. அதே Outlook இது தவறாகிப் போய்விட்டதால், இனிமேல் தேர்தல் காலங்களில் கருத்துக் கணிப்பில் இறங்கமாட்டோம் என்று கூறிவிட்டது.
தற்போது நடக்கும் கருத்துக் கணிப்புகள் அறிவியல் ரீதியாகவும், சமூக ரீதியாகவும் இல்லாமல் ஒரு இயந்திரப் போக்கில் நடக்கின்றது. கருத்துக்கணிப்பு நடத்துபவர்களுக்கும், வாக்காளர்களுக்கும், இடைவெளியான தொடர்பில் புள்ளி விவரங்களும் சேகரிக்கப்படுகின்றன. அவை யதார்த்தமாக இருப்பதில்லை. இந்த இடைவெளி கருத்துக்கணிப்பின் நம்பகத்தன்மையை தகர்த்திவிடுகிறது. கருத்துக்கணிப்பு நடத்தும் சில நிறுவனங்கள் தங்களின் கருத்துக்களை கருத்துக்கணிப்பில் திணிப்பதும் இன்றைக்கு இருக்கின்றது. அப்படியான நிலையில் இந்தக் கருத்துக்கணிப்புகள் எப்படி மெய்யாக இருக்க முடியும்?
கருத்துக்கணிப்புகள் விஞ்ஞான முறையிலும், (psephology - தேர்தல் பற்றிய அறிவியல் ஆய்வு) மக்களினுடைய உண்மையான மனநிலையை எடைபோட்டு அறியவேண்டும். கிராமங்களுக்கு செல்லும் கருத்துக்கணிப்பாளர்களுடைய வினாக்களை கூட கிராம மக்கள் புரிந்துகொள்ள முடியவில்லை. அந்த மக்கள் அளிக்கின்ற விடைகளும் பொருந்தாமலும் உள்ளன. இந்த விடைகளைக் கொண்டு கருத்துக்கணிப்பு செய்யும்போது சரியாக இருப்பதில்லை. நகரங்களில் ஒரே இடத்தில் பெட்டியை வைத்துக்கொண்டு கருத்துக்கணிப்பாளர்கள் சோம்பேறித்தனமாக கருத்துக்களை சேகரிப்பதும் உண்டு. இப்படி சேகரித்த கருத்துக்கள் மக்களின் முழுமையான முடிவுகளாக எப்படி இருக்க முடியும்.
கருத்துக்கணிப்புகளில் கிடைக்கும் தரவுகள், விடைகள், விளக்கங்கள் ஆகியவற்றை இறுதிப்படுத்தி அதை முடிவுக்கு கொண்டுவர Cube Law மூலம் முடிவுகள் அறியப்படுகிறது.
Cube Law
============
The cube rule or cube law is an empirical observation regarding democratic elections under the first-past-the-post system. The rule suggests that the party getting the most votes is over-represented (and conversely, the party getting the least votes is under-represented). It was first formulated in a report on British elections in 1909, then extended to elections in other countries. Both in theory and in practice, the cube rule is only applicable in a two-party system. In a multi-party democracy operating under the first-past-the-post system, the cube law invariably fails, often leading to capricious results.
Suppose we have two parties which receive A and B percent of the vote. According to the cube rule, the ratio of A seats-won to B seats-won should be proportional to A3/B3. So if A wins 60% and B wins 40%, the ratio of votes A/B = 60/40 = 1.5, but the ratio of seats is 603:403 = 3.375:1. That works out to a ratio of seats of 77:23. In a close election where the popular vote is A=52 and B=48, the seats break 56:44. In other words, the winner gets many extra seats. If there are three parties the ratio of seats will also be proportional to the cube of their votes. Mathematically the cube law works because it is an approximation to the law of large numbers.
The approximation can work well; it matched the 2002 U.S. House elections to within one seat.
In New Zealand, the rule predicted the distribution of seats between the two largest parties for most elections prior to election reform. From the 1940s onwards until 1993, after which the rule was irrelevant because of the introduction of mixed member proportional representation, many elections were predicted either exactly or within one seat, with most fluctuations from this in elections where there was a strong third-party showing.
However, in the UK, the cube law has operated erratically. Between 1950 and 1970, elections broadly followed the cube rule, but since 1974 the relationship has broken down, almost entirely to the benefit of the British Labour Party.
Reasons for the recent failure of the cube law in the UK include differential turnout, the rise of the Liberal Democrats mostly at the expense of the Conservatives, tactical voting and inefficiencies in the Boundary Commission.
In elections for the United States House of Representatives in 1942, 1996, and 2012, the party that won a plurality of the votes actually won fewer seats in the House of Representatives.
Thanks to: Wikipedia
(https://en.wikipedia.org/wiki/Cube_rule)
இரண்டு கட்சிகள் நடைமுறையில் உள்ள நாடுகளில் அமெரிக்கா போன்ற நாடுகளில் கருத்துக்கணிப்புகள் ஓரளவு சரியாக இருக்கும். இந்தியா போன்ற பல கட்சிகள் குறிப்பாக மாநில கட்சிகள் இருக்கின்ற நாட்டில் கருத்துக்கணிப்புகள் துல்லியமாக ஆய்வு செய்து முடிவுக்கு வரமுடியாது. குறிப்பாக, ஆளும் கட்சிக்கு எதிராக கூட்டணி அமைக்கும் கட்சிகளுடைய ஒத்துழைப்பும், ஒன்றையொன்றை அனைத்து செல்வதிலும் மாறுபடுவதால் எதிர்கட்சிகளுடைய வாக்குகள் எப்படி அமையும் என்ற துல்லியமும் கேள்விக்குறியாகி உள்ளது. இந்தியாவில் ஒவ்வொரு தேர்தலிலும் கட்சிகள் நிரந்தரமாக ஒரு அணியில் இல்லாமல் மாறுபடுவதும் கருத்துக்கணிப்பில் வாக்காளருடைய உண்மையான நிலையை அறியமுடியவில்லை. முதன்முதலாக தொலைக்காட்சியில் 1996, 1998 கட்டங்களில்தான் இந்தக் கருத்துக்கணிப்புகள் அரங்கேறின. இந்த அரங்கேற்றத்துக்கு முழுமையான கருத்துக்கணிப்புகள் இல்லாமல் அங்கொன்றும், இங்கொன்றுமாக Random முறையில் கருத்துக்கணிப்பு மாதிரிகள் சேகரிக்கப்படுகின்றன. கோடிக்கணக்கான மக்கள் தொகையில் இப்படியான Random முறை எப்படி வெற்றிபெற முடியும். இங்கு தேர்தல்கள் ஆரோக்கியமற்ற வகையில் ஜாதி, மதம் என பிரிந்து கிடக்கின்றது. இந்த நிலைப்பாடு 1966 தேர்தலுக்குப் பின் காண நேரிட்டது.
திருச்செந்தூருக்கு சம்பந்தமில்லாத டி.டி. கிருஷ்ணமாச்சாரி, திருச்செந்தூர் நாடாளுமன்ற இடைத்தேர்தலில் போட்டியிட்டார். தினமணி எக்ஸ்பிரஸ் அதிபர் ராம்நாத் கோயங்கா, திண்டிவனத்தில் நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட்டார். சென்னைப் பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் ஜி.ஆர். தாமோதரன் அப்போது பொள்ளாச்சி நாடாளுமன்றத் தொகுதியில் போட்டியிட்டார். தி.மு.க. போட்டியிட்ட முதல் தேர்தல் களத்தில் குளித்தலையில் கலைஞர் அவர்கள் போட்டியிட்டார். இப்படி பலர் 60க்கு முன்னே வாக்காளர்களை நம்பி தங்கள் தகுதியை வைத்து தேர்தலில் போட்டியிட்ட காலங்கள் எல்லாம் தமிழகத்தில் உண்டு. இப்போது எதை எடுத்தாலும் ஜாதி, மதம் என்று ஆன பிறகு நல்லவர்களுக்கோ, தகுதியானவர்களுக்கோ இடமில்லை என்ற சூழல். இப்படின புரையோடிய ஜாதி, மத அரசியலில் கருத்துக்கணிப்புகளும் எப்படி துல்லியமாக இருக்கும்.
இப்போது நடப்பதெல்லாம் கருத்துக் கணிப்புகள் அல்ல. கருத்துத் திணிப்புகள்.
கருத்துக் கணிப்பு முறை (Methodology) Random ஆக மாதிரிகளை வெறும் 2000க்கு கீழ் வைத்துக்கொண்டு கணிக்கப்படுவதெல்லாம் உண்மை என்று நம்ப முடியாது. இன்றைக்கு சராசரியாக ஒரு சட்டமன்றத் தொகுதிக்கு 2 லட்சம் வாக்குகளுக்கு மேல் உள்ளன.
இந்த நிலையில் நம்பகத்தன்மை, முரண்பாடின்மை (consistency) ஆகியைவை முக்கியமான காரணிகளாகும். இப்படியெல்லாம் பல கோணங்களில் ஆய்ந்து முடிக்கவேண்டிய கருத்துக்கணிப்புகளை ஊடகங்கள் தங்கள் விருப்பத்துக்கு ஏற்ப முக்கியமான அணுகுமுறைகளை கடைப்பிடிக்காமல் செய்கின்ற சூழலால்தான் கருத்துக்கணிப்புகள் பொய்யாகிவிடுகின்றன. எந்த கருத்துக்கணிப்பும் இனிமேல் உண்மையோ அல்லது துல்லியமோ என்று உறுதியாக சொல்ல முடியும். இந்தியா போன்ற பல்வேறு தேசிய இனங்கள், மொழிகள், கலாச்சாரங்கள், பழக்கவழக்கங்கள் என்ற நிலையில் கருத்துக்கணிப்புகள் யாவும் உறுதியாக உண்மையாகிவிடாது என்பதுதான் என்னுடைய தனிப்பட்ட கருத்து.

No comments:
Post a Comment