Monday, April 11, 2016

எட்டயபுரம்

சமீபத்தில் தூத்துக்குடிக்கு சென்றுவிட்டு கோவில்பட்டிக்கு திரும்பும் வழியில் எட்டயப்புரத்தில் பாரதி நூற்றாண்டு விழாவை ஒட்டி துவக்கப்பட்ட பாலிடெக்னிக் சுற்றுச் சுவர்களில் பாரதியாருடைய வரிகள் கண்ணை கவர்ந்தன. அவற்றை அங்கு பயிலும் மாணவிகளே எழுதியது என்று கேள்விப்பட்டேன். 1982ல் பாரதி நூற்றாண்டு விழாவில் எட்டயபுரத்தில் பல்தொழில்நுட்ப கல்லூரியும், நூற்பாலையும் தொடங்கப்பட்டது. வரலாற்றில் பெயர்பெற்ற எட்டயபுரத்திற்கு சிறப்பு செய்கின்ற வகையில் இந்த இரண்டும் அடையாளங்களாக உள்ளன. பாரதியை தேசிய கவிஞராக அறிவிக்கவேண்டும் என்ற கோரிக்கை இருந்தும் மத்திய அரசு பாரா முகமாக இருக்கின்றது. இது கவனிக்கப்படவேண்டிய செய்தியாகும்.  எட்டயபுரத்தைப் பற்றியும், எட்டப்பனைப் பற்றியும், நாவலர் சோமசுந்தர பாரதியை பற்றியும், புலவர் சீதக்காதியைப் பற்றியும், அங்கு வளர்ந்த கலைகள், இசை, ஆகியவற்றைப் பற்றி பல பதிவுகள் செய்துள்ளேன். இருப்பினும் பல்தொழில்நுட்பக் கல்லூரியின் மாணவிகளின் இந்த பணியை பாராட்டவேண்டும்.

   
  
  




No comments:

Post a Comment

சுதந்திர போராட்ட வீரர்

  #வறுமையி்ல்வாழ்ந்தமுன்னாள்அமைச்சர் #இராமையா —————————————————————————- சுதந்திர போராட்ட வீரர் முன்னாள் இந்திய அரசியல் நிர்ணய சபை உறுப்ப...