Saturday, April 16, 2016

Farmers suicide

மேட்டுப்பாளையம் ராமசாமி என்ற விவசாயி கடன் தொல்லையால் தற்காலை செய்துள்ளார் என்பது மிகவும் அதிர்ச்சியை அளிக்கிறது. ஆடம்பர வாழ்வில் அனுதினமும் மூழ்கி எழுந்த 
விஜய மல்லையா 9000 கோடி கடனாளியாக உலகம் சுற்றும் வாலிபனாக வலம் வருகிறார்.
ஆனால் சில ஆயிரம் கடன் பெற்று கட்ட முடியாமல் தற்கொலை செய்துள்ள ராமசாமி உழைத்து உழைத்து உருக்குலைந்து போய் மானம் காக்க உயிர் நீத்து விட்டார்.
உழுபவனும், உழைப்பவனும் இந்த மண்ணில் நிம்மதியாக வாழும் நாளில் தான் இந்தியாவை வல்லரசாக்க முடியும்.
ராமசாமியின் மறைவால் ஏற்பட்டுள்ள துயரத்திற்கு ஆட்பட்டிருப்பது அவரது குடும்பம் மட்டுமல்ல ஒட்டு மொத்த உழவர்களும் தான்.
அவரது மரணத்திற்கு நிதி கேட்பதை விட நீதி கேட்போம்.

No comments:

Post a Comment

#விவசாயிகள் சங்க நிறுவன தலைவர் சி.நாராயணசாமிநாயுடு 40வது நினைவு நாள்.

———————————————————- தமிழக விவசாயிகள் சங்க நிறுவன தலைவர் சி.நாராயணசாமி நாயுடு (டிசம்பர் 6, 1925 - டிசம்பர் 20, 1984) தமிழக விவசாயிகள் சங்க ந...