Tuesday, November 1, 2016

கன்னியாகுமரி தமிழகத்தோடு இணைப்பு போராட்டம்

கன்னியாகுமரி தமிழகத்தோடு 
இணைப்பு போராட்டம்
------------------------------------
#புதுக்கடைதுப்பாக்கிச்சூட்டில் இறந்தவர்கள்-11/8/1954.
**************************
தொடுவட்டி துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்தவர்கள் 
***********************
1. திரு. எஸ். ராமைய்யன், மேக்கன்கரை, ஆயிரம் பிறை
புத்தன்வீடு, நட்டாலம், விளவங்கோடு வட்டம்.
2. திரு. எ. பொன்னைய்யன் நாடார், அணைக்கரை,
தேமானூர், ஆற்றூர், செங்கோடி அஞ்சல், கல்குளம் வட்டம்.
3. திரு. எம். பாலைய்யன் நாடார், கொச்சுக் காரவிளை,
மணலி, சாரோடு், தக்கலை அஞ்சல், கல்குளம் வட்டம்.
4. திரு. எஸ் குமரன் நாடார், கோடிவிளை வீடு,
தோட்டவாரம், குன்னத்தூர் கிராமம், புதுக்கடை
அஞ்சல், விளவங்கோடு வட்டம்.
5. பெயர் தெரியாத ஒரு தாய், சந்தை வியாபாரம் செய்த
மூதாட்டி.
6. திரு. சி. பப்பு பணிக்கர், மரக்கறிவிளாகத்து புத்தன் வீடு,
காளைச்சந்தை, தொடுவட்டி, மார்த்தண்டம் அஞ்சல்,
விளவங்கோடு வட்டம்.

புதுக்கடை துப்பாக்கிச் சூட்டில் இறந்தவர்கள்
*************************************
1. திரு. எ. அருளப்பன் நாடார், வண்ணான்விளை வீடு,
பைங்குளம் கிராமம், புதுக்கடை அஞ்சல், விளவங்கோடு வட்டம்.
2. திரு. என். செல்லைய்யா பிள்ளை, (செக்காலை)
R.C.கிழக்குத்தெரு, புதுக்கடை அஞ்சல், விளவங்கோடு வட்டம்.
3. திரு. எஸ். முத்துசுவாமி நாடார், நாயக்கம் முள்ளுவிளை
வீடு, சடையன் குழி, கிள்ளியூர் அஞ்சல், விளவங்கோடு வட்டம்.
திரு. எ. பீர்முகமது, புதிய வீடு, அம்சி, தேங்காபட்டணம்
அஞ்சல், விளவங்கோடு வட்டம்.
5. திரு. முத்து கண்ணு நாடார், புதுக்கடை அஞ்சல்,
விளவங்கோடு வட்டம்.

1948-துப்பாக்கிச் சூட்டில் உயிர் துறந்தவர்கள் ்
******************************
1. எ. தேவசகாயம் நாடார், S.T. மங்காடு, விளவங்கோடு
வட்டம் (12.02.1948)
2. பி. செல்லைய்யன் நாடார், பெரியவிளை, கீழ்குளம்,
#விளவங்கோடு வட்டம் (14.02.1948).
ஆக பட்டம் தாணுபிள்ளை முதலமைச்சராக இருந்த
இரண்டு காலகட்டங்களிலும் 13 தமிழர்களின் உயிரைப் பறித்து அவரது தமிழர் குரோதத்தை நிறைவேற்றினார்.

குமரி தமிழ் பகுதிகள் தமிழ் நாட்டுடன் இணைந்த இந்த நன்னாளில் (1/11/56) மறைந்த தியாக செம்மல்களை நன்றியுடன் நினைவு கூர்வோம் ------------- 

மார்ஷல் நேசமணி - வக்கீல் பி ராமசாமி பிள்ளை - சிதம்பரநாதன் - - வக்கீல் குஞ்சன் நாடார் - ரசாக் - லூர்தம்மாள் சைமன் - நூறு முகமது - பி எஸ் மணி - பொன்னப்ப நாடார் - - வக்கீல் சி கோபாலகிருஷ்ணன் - தாணுலிங்கம் நாடார் - கொடிக்கால் - சாம் நந்தாணியல் - - காந்திராம்- சிவ தாணு பிள்ளை - சிதம்பரம் - டி டி டானியல் - நெய்யூர் சிங்கராய நாடார் --- இவர்களுடன் குமரி எல்லை மீட்ப்பு போருக்கு உறு துணையாய் நின்ற அன்றைய தினமலர் நாளேட்டின் நிறுவனர் ராமசுப்பையர் என எண்ணிலடங்கா தியாக செம்மல்களை நன்றியுடன் நினைவு கூர்வோம் -------------
போராட்டங்களில் காவல்துறையினரால் கொன்று குவிக்கப்பட்ட மங்காடு தேவசகாயம்-, பைங்குளம் செல்லையன் -. , தேம்பனூர் பொன்னையன் -, மேக்கன்கரை ராமையன்,- மணலி எம்.பாலையன்,- தொடுவெட்டி பப்பு பணிக்கர் -. புதுக்கடை அருளப்பன் -, கிள்ளியூர் முத்துசுவாமி,- தோட்டவரம் குமாரன், - புதுக்கடை செல்லப்ப பிள்ளை -, தேங்காய்பட்டணம் பீர்முகம்மது ஆகியோரின் தியங்களுக்கு நமது வீர வணக்கம்----
அன்றைய குமரி விடுதலை போராளிகளின் போராட்டம் முழு வெற்றி அடைந்து தமிழர்கள் மிகக்கூடுதலாக இன்றும் வாழும் தேவிகுளம் - பீர்மேடு - நெய்யாற்றின்கரை எஞ்சிய பகுதி - தென்காசி   செங்கோட்டை    முழுப்பகுதி ஆகியவையும் தமிழ் நாட்டுடன் இணைக்கப்பட்டிருந்தால் இன்றைக்கு தமிழன் தண்ணீருக்காக கையேந்தும் நிலை வந்திருக்காது -திருவிதாங்கூர் தமிழ்நாடு காங்கிரஸ் 
************************
தமிழர்களின் நலம் காத்திட உருப்படியான அரசியல் கட்சி
எதுவும் அவ்வமையம் இல்லாதிருந்த நிலையில், நாகர்கோவில் வக்கீல் சங்கத்தில் மதிப்புமிக்க வழக்கறிஞர் திரு. சிதம்பரம்பிள்ளை, அதே சங்கத்தில் முன்னணி வழக்கறிஞராக விளங்கிய திரு. எ. நேசமணியை, திருவிதாங்கூர் தமிழர்களின் துயர் துடைக்க வருமாறு அழைப்பு விடுத்தார். இந்த அழைப்பை ஏற்ற திரு. நேசமணி 1947 செப்டம்பர் திங்கள் 8 ஆம் நாள், நாகர்கோவில் கிறிஸ்தவ வளாகத்தில் அமைந்திருந்த “ஆலன் நினைவு மண்டபத்தில்”  தமிழர்களின் ஆலோசனைக் கூட்டம் ஒன்று கூட்டப்பட்டு, “திருவிதாங்கூர் தமிழ்நாடு காங்கிரஸ்” என்ற அரசியல் அமைப்பை உருவாக்கினார். திரு. நேசமணியின் தலைமையில் இந்த இயக்கம் புயல் வேகவளர்ச்சியடைந்தது. மலையாளிகளுக்கும், மலையாள அரசுக்கும் சிம்ம சொப்பனமாக அமைந்தது இந்த இயக்கம். திருவிதாங்கூர் தமிழ் பிரதேசங்களின் தனி மாகாணம் அமைத்தே தீருவோம் என்ற மக்களின் கோஷம் வானைப் பிளந்தது.
.....................

தமிழகத் திருநாள் - 60..        
தமிழக எல்லை மீட்பு போராளிகளுக்கு வீரவணக்கம்..  கேரள அரசின் துப்பாக்கி சூட்டிற்கு பலியான தெற்கெல்லைப் போர் ஈகியருக்கு வீர வணக்கம்!
திருவிதாங்கூர் கொச்சி சமஸ்தானப் பகுதிகளில் வாழ்ந்த தமிழர்கள் தமது தாயகப் பகுதிகளை தாய்த்தமிழகத்தோடு இணைக்கக் கோரி 1946ஆம் ஆண்டு முதல் மார்சல் நேசமணி தலைமையில் போராடி வந்தனர்.
1954இல் பிரஜா சோசலிஸ்ட் கட்சியின் பட்டம் தாணுப்பிள்ளை என்பவர் முதல்வராக இருந்தார். 
தீவிர மலையாள இனவெறி கொண்ட பட்டம் அவர்கள் தேவிகுளம், பீர்மேடு வட்டங்களில் வாழும் தமிழர்கள் மீது கடும் ஒடுக்குமுறையை மேற்கொண்டார். அதுமட்டுமின்றி, மலையாள குடியேற்றத்தை அதிகரித்து தமிழர் தாயகத்தை இல்லாதொழிக்கவும் முற்பட்டார்.
1954ஆம் ஆண்டு தேர்தலில் நேசமணியின் திருவிதாங்கூர் தமிழ்நாடு காங்கிரசு கட்சி தேவிகுளம் பீர்மேடு தொகுதியில் வெற்றது. இந்த வெற்றியை பொறுத்துக் கொள்ள முடியாத பட்டம் தாணுப்பிள்ளை அரசு 650க்கும் மேற்பட்ட தேயிலைத் தோட்ட தமிழ்த் தொழிலாளர்கள் மீது பொய்வழக்கு போட்டு சிறையில் அடைத்தது.
அவரின் ஏவல்துறையான காவல் துறை செய்த அட்டூழியங்கள் கொஞ்ச நஞ்சமல்ல. தொழிற்சங்க செயலாளர் ஆர்.குப்புச்சாமி என்ற இளைஞரை செவிப்பறை கிழியும் வரை காதில் அடித்து துவைத்து எடுத்தது. அதன் பிறகு அவரோடு சேர்த்து, சுப்பையா நாடார் என்பவருக்கும் கைவிலங்கு மாட்டி மூணாறு நகர கடைவீதிகளில் கொட்டும் மழையில் இழுத்துக் கொண்டு சென்றது. இதைக் கண்ணூற்ற பொதுமக்கள் உயிருக்கு அஞ்சி மதுரை மாவட்ட சிற்றூர்களுக்கு ஓடினார்கள்.
மார்சல் நேசமணிக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர் உடனடியாக பாதிக்கப்பட்ட தமிழர்களுக்கு குரல் கொடுக்க மூணாறு வந்தார். பீர்மேடு, வண்டிப்பெரியாறு, வண்டல் மேடு பகுதிகளுக்குச் சென்று காவல்துறையின் அடக்குமுறையை கடுமையாக கண்டித்துப் பேசினார். அவருடன் சேர்ந்து அப்துல் ரசாக் என்பவரும் பேசுகையில், "போலீஸ் ஜவான்கள் சண்டியர்களைப் போல நடந்து கொள்வதால், அப்படிப்பட்டவர் கையில் துவக்குகளை விட்டு வைப்பது ஆபத்தானது" என்று குறிப்பிட்டார்.
இதனை வன்முறைப் பேச்சாக மலையாள ஏடுகள் சித்தரித்தன. 'மலையாளி' என்றொரு இதழ் அரசாங்கத்திற்கு எதிராக தொடுக்கப்பட்ட ஒரு 'வெல்லுவிளி' என்று வர்ணித்தது. 'கேரளகோமதி' இதழ், "நேசமணி எந்தா இங்ஙனம் ஆயிப்போயி?" என்று ஏளனம் செய்தது.
மலையாள இனவெறி கூச்சல் ஓங்கி ஒலித்ததன் காரணமாக மார்சல் நேசமணி, அப்துல்ரசாக் சிதம்பர நாதன் ஆகியோர் கைது செய்யப்பட்டு திருவனந்தபுரம் சிறையில் அடைக்கப்பட்டனர்.
இந்தச்செய்தி உடனடியாக காட்டுத் தீயாகப் பரவியது. அப்போது நாகர்கோயில் பகுதியில் தென் தமிழர்களின் போராட்டம் தீவிரமடைந்தது.
பட்டம் தாணுப்பிள்ளையின் அடக்குமுறைக்கு எதிராக நேசமணிக்கு அடுத்த கட்டத் தலைவர்கள் போராட்டத்தில் குதித்தனர். ஆகஸ்ட் 11ஆம் நாளை தமிழர் விடுதலை நாளாக (Deliverance Day) கொண்டாடுமாறு குஞ்சன் நாடார் வேண்டு கோள் விடுத்தார்.
அன்று முழுகடையடைப்பு பேரணி, பொதுக்கூட்டம், மறியல் என்று அனைத்து தமிழர்களும் போர்கோலம் பூண்டனர். அப்போது பட்டம் அரசின் காவல் துறை தமிழர்களை நர வேட்டையாடியது. நூற்றுக்கணக்கானோர் காவல் துறையினரின் தடியடியால் காயம் பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். மேலும் அப்பாவி பொது மக்கள் மீது வெளியே வரமுடியாத வகையில் வழக்குப் பதிவு செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.
'தேடுதல் வேட்டை' என்ற பெயரில் பெண்கள் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டனர். குலசேகரம் அந்திச் சந்தையில் எட்டு மாத கர்ப்பிணிப்பெண் காவல்துறையின் அடிக்கு பயந்து ஓடியதால் கீழே விழுந்தாள். அவள் மீது பலரும் மிதித்ததால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிறிது நேரத்தில் உயிர் துறந்தாள்.
சங்கரன் நாடார், மடிச்சல் சங்கு நாடார் ஆகியோர் கொலை செய்யப்பட்டு கிணற்றில் வீசப்பட்டனர். மொத்தம் 36 பேர் பலியானார்கள். காவல்துறையின் துப்பாக்கிச் சூட்டிற்கு ஒன்பது பேர் மட்டுமே பலியானதாக பட்டம் தாணுப்பிள்ளை அரசு அறிவித்தது. அந்த ஒன்பது தமிழர்கள் பெயர் மின் வருமாறு:
1.எம்.முத்துசாமி நாயகம் 
2.என்.குமரன் நாடார் 3.ஏ.பீர்முகம்மது 4.ஏ.அருளப்பன் நாடார் 5.ஏ.பொன்னையன் நாடார் 
6.என்.செல்லப்பா பிள்ளை 7.எஸ்.இராமையன் நாடார் 
8.ஸ்ரீ பப்பு பணிக்கர் 9.எம்.பாலையன் நாடார்
இவர்களுக்கு முன்னர் 8.2.1948 அன்று தமிழரசு கழகத்தைச் சேர்ந்த தேவசகாயம் நாடார், செல்லையா நாடார் ஆகிய இருவரும் தாயக மண் மீட்பு போராட்டத்தில் முதல் களப்பலியானார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
தமிழர்களின் கடும் போராட்டத்தின் காரணமாக சிறையை விட்டு விடுவிக்கப்பட்ட மார்சல் நேசமணி பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு நேரில் சென்றார். பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஆறுதல் தெரிவித்து மிக உருக்கமாக பேசினார். அதுவருமாறு:
"தேவிகுளம், பீர்மேடு தாலுக்காக்கள் இன்று கண்ணுக்கினிய தோட்டங்களாக மிளிருவதற்கு தமிழன் உழைப்பும் அந்த உழைப்பின் கடுமையால் கொட்டப்பட்ட வியர்வை முத்துக்களுமே காரணமாகும். மனிதன் செல்ல முடியாத இந்த மலைமுகடுகளில் தேயிலைத் தோட்டம் வளர்த்த பெருமை முழுவதும் தமிழனுக்கே சொந்தம்" என்றார்.
(மேலே உள்ள படம் நேசமணி ஆறுதல் தெரிவிக்கும் காட்சி.)
1956 நவம்பர் 1ஆம் நாளில் மொழிவழி மாகாணம் அமைந்த போது உயிர்நீத்தவர்களின் ஈகம் வீண் போகவில்லை. கன்னியாகுமரி உள்ளிட்ட தென்பகுதிகள் தமிழகத்தோடு இணைக்கப்பட்டது. ஆனால் தமிழர்கள் அதிகமாக வசிக்கும் தேவிகுளம், பீர்மேடு வட்டங்கள் மட்டும் தமிழகத்தோடு இணைக்கப்பட வில்லை. அதன் காரணமாக தமிழர்கள் சொல்லொண்ணக் கொடுமைகளை அனுபவித்து வருகின்றனர்.
பட்டம் தாணுப்பிள்ளை வழியில் அச்சுப்பிசகாமல் காங்கிரசும் கட்சியும், கம்யூனிஸ்ட் கட்சியும் தற்போது செயல்பட்டு வருகின்றன. அங்குள்ள தமிழர்கள் அன்னிய நாட்டில் வாழும் ஏதிலிகளைப் போல் வாழ்ந்து வருகின்றனர். அங்குள்ள தமிழ்க் குழந்தைகள் .கல்வியைக் கூட கற்க முடியாத அவல நிலை தொடர்கிறது. முல்லைப் பெரியாறு பிரச்னையை காரணம் காட்டி மலையாளிகள் மிரட்டி வருவதால் அங்கு வாழும் தமிழர்கள் அச்சத்தோடு தான் வாழ்ந்து வருகின்றனர். 

#கன்னியாகுமரி
#கன்னியாகுமரிஇணைப்புபோராட்டம்
#ksrposting
#ksradhakrishnanposting

No comments:

Post a Comment

#கொடுக்காய்புளி - #அழகர்கோவில்

#கொடுக்காய்புளி காலம்(சீசன்) மதுரை- #அழகர்கோவில் சிலம்பாறுபாயும் தென் திருமாலிருச் சோலையே... -#பெரியாழ்வார் # அழகர்கோவில் #கேஎஸ்ஆர்போஸட் #ks...