Wednesday, November 23, 2016

தூக்கு கயிற்றை தூக்கிலிடுவோம்

தூக்கு கயிற்றை தூக்கிலிடுவோம் 
---------------------------------------
கடந்த 17,18 /11/2016 ஆகிய இரண்டு நாட்கள் ஐநா பொது அவையில் (general council ) மரண தண்டனையை ஒழிக்கும் தீர்மானம்  வந்த போது இந்தியா அதை எதிர்த்து வாக்களித்துள்ள செய்தி வேதனையை தருகிறது .
உலகில் உள்ள மொத்தம் 195 நாடுகளில் 102 நாடுகள் மரண தண்டனை அறவே ஒழிக்கப்பட்டுவிட்டது. 39 நாடுகளில் மரண தண்டனை செயல்பாட்டில் இல்லை . ஆகமொத்தம் 141 நாடுகளில் மரணதண்டனை முற்றிலும்  ஒழிக்கப்பட்டுவிட்டது .   48 நாடுகளில் மரண தண்டனை முற்றிலும் ஒழிக்கப்படவில்லை.  மேலும் 6 நாடுகளில் சாதாரண குற்றங்களுக்கு  மரண தண்டனை கிடையாது .இந்தியா , சீனா , அமெரிக்கா, பாகிஸ்தான்  போன்ற வரிசையில் மீத 48 நாடுகளில் மரணதண்டனை ஒழிக்கப்படவில்லை இந்த 48 நாடுகளை மரணதண்டனை ஒழிக்கவேண்டும் என்று உலக சமுதாயம் கேட்டுக்கொண்டும்  இந்த நாடுகள் செவி சாய்க்கவில்லை .

உலகமெங்கும் தூக்கு கயிற்றை தூக்கிலிட்டு மரணதண்டனையை ஒழிக்க வேண்டும் என்று போராட்டங்கள் வலுவடைந்துள்ளது . 2007 லிருந்து ஐநா மன்றத்தில் இதுவரை 6 மரணதண்டனை ஒழிப்பு தீர்மானங்கள் வந்துள்ளன  6 முறையும் இந்தியா எதிர்த்து வாக்களித்துள்ளது . 

தற்போதைய  தீர்மானத்தில் இந்திய பிரதிநிதி மாயாங் ஜோஷி இந்த தீர்மானத்தை எதிர்த்து பேசியபோது மரணதண்டனையை ஒழிக்கும் முடிவை ஐநா ஒரு நாட்டின் மீது திணிக்க கூடாது . அந்த நாட்டின் இறையான்மைக்கு எதிரானது எனவும் . ஒவ்வொரு நாட்டிற்கும் சொந்த சட்ட வடிவமும் தண்டனை வழங்கும் அதிகாரமும் உள்ளது .இதில் யாரும் தலையிட முடியாது என்றும் பேசியுள்ளார் . 

இவ்வாறு  ஐநா தீர்மானத்தில் இந்தியா நடந்து கொண்டது மிகவும் வேதனை அளிக்கிறது .
கடந்த ஜுலை மாதம் நாடாளுமன்றத்தில் பேசிய மத்திய உள்துறை இணைஅமைச்சர் கிரண் ரிஜிஜு தூக்குதண்டனையை ஒழிப்புக்கான சூழ்நிலை இன்னமும்    இந்தியாவில் வரவில்லை  என்று கூறியுள்ளார் !
கொல்லாமை போதித்த புத்தரும், உத்தமர் காந்தியும் பிறந்த நாடே தூக்கு தண்டனையை ஆதரிக்கிறது என்பது வேதனையை தருகிறது ! தூக்கு தண்டனை இருந்திருந்தால் குற்றங்கள் குறையும் என்று வாதம் வைத்தாலும்  இந்தியாவில்   குற்றங்கள் இதுவரை குறையவில்லையே ?

No comments:

Post a Comment

#விவசாயிகள் சங்க நிறுவன தலைவர் சி.நாராயணசாமிநாயுடு 40வது நினைவு நாள்.

———————————————————- தமிழக விவசாயிகள் சங்க நிறுவன தலைவர் சி.நாராயணசாமி நாயுடு (டிசம்பர் 6, 1925 - டிசம்பர் 20, 1984) தமிழக விவசாயிகள் சங்க ந...