US elections
Madam President or Mr President
.......
Highest number of votes will not make American President - Why - How - அதிக ஓட்டுக்கள் வாங்கினாலும் அமெரிக்க அதிபர் ஆக முடியாது.....உலகில் மிக அதிகமாக எதிர்பார்க்கபடும் அமெரிக்க தேர்தல் ஒவ்வொரு முறையும் லீப் ஆண்டு எனும் நாலு வருடத்திர்க்கு ஒரு முறை வரும் பிப்ரவரி 29 வரும் ஆண்டில் தான் அமெரிக்க தேர்தல் நடக்கும். அது போக ஒவ்வொரு முறையும் முதல் திங்கட்கிழமை அடுத்து செவ்வாய் என்னும் தினத்தில் தான் ஒவ்வொரு முறையும் நடக்கும்.
உலகத்தின் பழைய ஜனநாயக நாடான #அமெரிக்காவின்தேர்தல் இந்த முறை எவ்வாறு நாறியது என எல்லோருக்கும் தெரிந்தாலும் இதை பற்றி நாம் விவாதிக்கபோவதில்லை. நம்ம ஊர் போல அதிக ஓட்டு பெற்றால் ஏன் வெற்றி பெற முடியாது என்றால் அமெரிக்க தேர்தல் முறை சற்று புதுமையானது. அமெரிக்காவில் மொத்தம் 50 மானிலங்கள் உள்ளது. அப்படி இருக்கும் மானிலத்தில் அம்மானில மக்கள் தொகைக்கு ஏற்ப அதிபர்களுக்கு சீட்ஸ் கிடைக்கும். உதாரத்திர்க்கு பெரிய மானிலமான கலிஃபோர்னியாவில் 3.8 கோடி பேர் வசிக்கின்றனர். இதனால் இந்த மானிலத்திர்க்கு 55 சீட்கள் இருக்கிறது. அதே போல மிக சிறிய மானிலமான டெலாவேரில் 9,36,000 பேர் கொண்ட மானிலத்திர்க்கு வெறும் 3 சீட்களே. ஆனால் ஒன்று மானில பரப்பளைவை கொண்டு இது கணக்கிடபடுவதில்லை. உதாரணத்திர்க்கு அலாஸ்கா எம்மாம் பெரிசு என்றூ என்று தெரிந்ததே அம்மானிலத்திர்க்கு வெறூம் 3 சீட்களே. அலாஸ்கா மானிலத்தை விட 8 மடங்கு சிறிதான நியூயார்க் மானிலத்துக்கு 29 சீட்கள்.
அதனால் ஒவ்வொரு மானிலத்தில் உள்ள சீட்களை வெல்வதே அதிபராகும் சான்ஸ் கிடைக்கபெறும். எல்லா அதிபர் வேட்பாளர்களும் முக்கியமா எதிர் நோக்கும் இரு பெரிய மானிலங்களான கலீஃபோர்னியா (55 சீட்கள்) மற்றூம் ஃப்ளோரிடா மற்றூம் நியூ யார்க் மானிலங்கள் (29 சீட்கள்). இந்த மூன்றில் இரு மானிலங்களை வின் பண்ணினாலே அதிபர் வெற்றி இலக்கை நோக்கி செல்கிறார் என்று அர்த்தமாகும். இந்த மானிலத்தில் இந்த சீட்களை வெல்லும் முறைக்கு பேர் எலக்ட்ரல் காலேஜ் Electoral College system என்பதாகும். இந்த முறை யார் அந்த மானிலத்தில் பிரபலமோ அவருக்கு அத்தனை உள் தொகுதி வோட்டுக்கள் அவருக்கு சென்று விடும். இதனால் இல்லை நான் அதிக ஒட்டு இந்த தொகுதியில் வாங்கினேன் அதனால் நான் தான் வின்னர்னு சொல்லமுடியாது. இந்த எலக்ட்ரல் காலேஜ் குழப்பம் பல் முறை நடந்தாலும் கடைசியாக 2000 ஆம் ஆண்டு ஜார்ஜ் புஷ் மற்றும் அல்கோர் போட்டியிட்ட போது வெறும் 1784 ஓட்டுக்கள் பிரித்து ஜார்ஜ் புஷ் வெற்றி பெற செய்தது.
தற்போதைய அதிக நிலை ஓட்டுக்கள் பெறுவது டொனால்ட் ட்ரம்ப்தான் என்றாலும் அதை வைத்து அவர் அதிபராக முடியாது. எலக்ட்ரால் காலேஜ் சிஸ்டத்தின் மூலம் பிரபலமாக இருந்து பெரிய மானிலங்களை மொத்தமாக கைப்பற்றினால் மட்டுமே அமெரிக்க அதிபர் ஆக முடியும். 270 சீட்கள் அல்லது அதற்க்கு மேல் பெறும் மெஜாரிட்டி வின்னரே அதிபர் ஆக முடியும். இன்னும் எலக்ட்ரால் காலேஜ் சிஸ்டம் புரியலைனா சிம்பிளா சொல்றேன்.... கலிஃபோர்னியா மானிலத்தில் உள்ள 55 சீட்களில் 28 சீட்களை ஒரு வேட்பாளரும் 27 சீட்களை இன்னொரு வேட்பாளர் பெற்றாலும் மொத்த 55 சீட்களும் 28 சீட்களை பெற்ற கட்சிக்கு 55 சீட்களை அலாட் செய்யும் முறை தான்.
U hv 2 get 270 electoral votes. In 2000, Gore polled more popular votes than Bush but Bush was declared the winner as he had 271 electoral votes
#uselections
No comments:
Post a Comment