Tuesday, November 29, 2016

தொலைக்காட்சியில் குடும்பத்தினருக்குள் இருக்கும் பிரச்சினைக்கு சமரசம்

சபாஷ் ஸ்ரீப்ரியா!உங்களின் நேர்மையான கருத்துக்கு....
.............................................................
இந்த பிரச்னையை State Human Rights Commissonக்கு கொண்டு
செல்ல வேண்டும் 
-------------------------------------
தற்போது தொலைக்காட்சியில் குடும்பத்தினருக்குள் இருக்கும் பிரச்சினைக்கு சமரசம் என்ற பெயரில் பல்வேறு சேனல்களில் பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகின்றன. சன் டி.வி.யில் குஷ்பு தொடங்கி ஜிடிவியில் லட்சுமி ராமகிருஷ்ணன், மலையாள டி வியில் ஊர்வசி, தெலுங்கு டி வியில் ரோஜா உள்ளிட்ட பலர் இதுபோன்ற நிகழ்ச்சிகளின் தொகுப்பாளர்களாக பணியாற்றி வருகிறார்கள்.

இந்நிலையில் இது போன்ற இந்நிகழ்ச்சிகள் குறித்து நடிகை ஸ்ரீப்ரியா குறித்து தன் ட்விட்டர் பேஜில் , “தம்பதிகளுக்கிடையே பிரச்சினை வந்தால் அதைத் தீர்த்து வைக்க குடும்ப நல நீதிமன்றம் இருக்கிறது. கிரிமினல் குற்றங்களை கையாள தனித்தனி சட்டப் பிரிவுகள் உள்ளன.தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் நம்மைப் போன்ற நடிகர்கள் உட்கார்ந்து மற்றவர்களின் பிரச்சினைகளுக்கும் வலிகளுக்கும் தீர்வு சொல்வதை என்னால் பார்க்க முடியவில்லை / ஜீரணிக்க முடியவில்லை. இதை தயவு செய்து நிறுத்தலாமே? நாம் கைப்பிடி அளவு கற்று வைத்திருக்கும் கலைகளுக்கு மட்டும் நடுவர்களாக இருப்போமே? ப்ளீஸ்” என்று  தெரிவித்திருக்கிறார் ஸ்ரீப்ரியா.

மேலும் அவர் ‘இது போன்ற பிரச்சனைகளை தீர்த்து வைக்க நாம் நீதிபதிகள் அல்ல என்பதை உணருங்கள். நிகழ்ச்சித் தொகுப்பாளர்கள், இரண்டுக்கும் வித்தியாசம் உள்ளது தயவு செய்து இப்படி செய்வதை நிறுத்துங்கள்’ என்று அவர் உரத்தக் குரலில் கேட்டுக்கொண்டுள்ளார்.

No comments:

Post a Comment

#விவசாயிகள் சங்க நிறுவன தலைவர் சி.நாராயணசாமிநாயுடு 40வது நினைவு நாள்.

———————————————————- தமிழக விவசாயிகள் சங்க நிறுவன தலைவர் சி.நாராயணசாமி நாயுடு (டிசம்பர் 6, 1925 - டிசம்பர் 20, 1984) தமிழக விவசாயிகள் சங்க ந...