Tuesday, November 22, 2016

லூர்துநாதன்...

பாளையங்கோட்டை புனித சேவியர் கல்லூரியின்  ரசாயன பேராசிரியர் எ. சீனிவாசன் 1972 இல் காவல் துறையால் தாக்கப்பட்டார்.அதை கண்டித்து அப்போது மாணவர்கள் கொதித்து எழுந்தோம் ! பேரணியாக மாவட்ட ஆட்சியர் அலுவலகம் சென்ற போது கொக்கிரகுளம் சுலோசனா முதலியார் தாமிரபரணி பாலத்தில் சேலத்தை சேர்ந்த,பிகாம் பட்டதாரி மாணவர் #லூர்துநாதன் தாக்கபட்டு பாலத்தில் இருந்து கீழே தள்ளப்பட்டு கொல்லப்பட்டார்.

அந்த மாணவருடைய நினைவாக அவருடைய சிலையை #பாளை,தெற்கு பஜாரில் மேற்கில் முனையில் உள்ள உள்ளாட்சி அலுவலகத்தில் சிலையை நிறுவினோம்.அச்சிலையை பெருந்தலைவர் காமராசர் திறந்து வைத்தார் .அந்த நிகழ்ச்சியில் 
பழ .நெடுமாறன் , செல்லப்பாண்டியன் ஆகியோர் பங்கேற்னர்.லூர்து நாதன் நினைவு நாள் நேற்று !
சிறந்த கிதார் இசைக் கலைஞன்..
என்றும் நினைவில் நிற்பாய்!

அவருடைய நினைவு வந்தவுடனே இந்த பதிவை பதிவு செய்யவேண்டும் என்று விருப்பபட்டேன்.காலசக்கரங்கள் ஓடிவிட்டன.தியாகம் செய்த சிலரை கூட இந்த நாடு நினைத்து பார்க்கவில்லையே ?

No comments:

Post a Comment

#கொடுக்காய்புளி - #அழகர்கோவில்

#கொடுக்காய்புளி காலம்(சீசன்) மதுரை- #அழகர்கோவில் சிலம்பாறுபாயும் தென் திருமாலிருச் சோலையே... -#பெரியாழ்வார் # அழகர்கோவில் #கேஎஸ்ஆர்போஸட் #ks...