Sunday, November 13, 2016

சிலநேரங்களில் சில மனிதர்கள்

ஒரு  பதிவு 
...................
சிலநேரங்களில் சில மனிதர்கள் . 
-------------------------------------
திரைத்துறையை சேர்ந்த ஒருவர் திரைப்படம் எடுத்து நஷ்டம் ஆகிவிட்டது  என்றசெய்திஇன்றைக்குவெளிவந்துள்ளது .  ஆனால் முற்பகலில்  செய்யும்  வினை பிற்பகலில் தானே வரும் என்பது இயற்க்கையின் நீதி இப்படி நடக்க வேண்டும் என்று யாரும் விரும்புவதும் இல்லை .ஆனால் என்ன செய்வது ? இது கடந்த கால நிகழ்வுதானே என்று இப்பொழுது என்ன அவசியம் என்று நினைக்கலாம் .ஆனால் சில உண்மைகளையும் ,நேர்ந்த தீங்குகளையும் சொல்லிதானே ஆகவேண்டும் . அது தான் காலத்தின் கட்டாயம் .

1996 சட்டமன்ற தேர்தலில் கிட்டத்தட்ட 33 ஆயிரம் வாக்குகள் வாங்கி வெற்றி வாய்ப்பினை இழந்தேன் 1998ம் ஆண்டு நடந்த நாடாளுமன்ற தேர்தலில் அப்போது நான் சார்ந்த கட்சியின் தலைமை தோழமை கட்சியின் தலைமையிடம் எனக்காக வடசென்னை நாடாளுமன்ற தொகுதியில் நான் போட்டியிட ஏதுவாக கேட்டுப்பெறப்பட்டது .நான் தான் அந்த தொகுதியின் வேட்ப்பாளர் என்று நண்பர்கள் பலர் வாழ்த்தும் கூறினர் .
அந்த தொகுதியின் வேட்ப்பாளர் அறிவிப்பு செய்தி ஏடுகளுக்கு கொடுக்கும் போது சிதரம்பரம் நகரத்தை சார்ந்த வேறு ஒருவர் போட்டியிடுவார் என்றுஅறிவிப்புசெய்யப்பட்டது .ரௌத்திரம் பழகு என்ற பாரதியின் சொல்லுக்கு ஏற்ப என் சுயமரியாதைக்கு களங்கம்  என்று கொதித்து எழுந்தேன் 1993 ம் ஆண்டு  ஐநாமன்றத்தில் பணியாற்ற நியூயார்க் நகரம் செல்ல வாய்ப்பு கிடைத்தும் தவிர்த்தேன் .

தேர்தல் காலத்தில் எனக்கு தேர்தல் பணியாற்றிய என் ஜீனியர்கள் எல்லாம் உச்சநீதிமன்றம் நீதிபதிகளாகவும் , உயர்நீதிமன்ற தலைமைநீதிபதியாகவும் நீதிபதிகளாகவும்  ஆகிவிட்டனர் அந்த வாய்ப்பும் கிட்டிருக்கும் அரசியல் களத்தித்திற்க்காக மறுத்துவிட்டேன் . 44 ஆண்டுகள் அரசியலில் வாழ்வில் கழித்துவிட்டேன் . இன்றைக்கு அந்த திரைத்துறையை சேர்ந்த நபர்  தொழில் சிரமம் ,கஷ்டம் ,நஷ்டம் என்று புலம்புகிறார் இவரால் எத்தனை பேர் பாதிக்கப்பட்டனர் என்று எனக்கு தெரியும் . வெறும் திறைத்துறையில் இருந்துக்கொண்டு சட்டாம்பிள்ளைதனமாக செய்ததால் 
பலருடைய வாழ்வில் ரணங்கள் ஏற்பட்டது .

 வடசென்னையில்  நான் போட்டியிட தடுத்தவரும் இவர் தான் .18 ஆண்டுகளுக்கு முன்பு எனக்கு கிடைத்த வாய்ப்பை தடுத்துவிட்டேன் என்று மகிழ்ச்சியோடு நெல்லை மாவட்டத்தை சேர்ந்தசட்டமன்றமுன்னாள்உறுப்பினரிடம் கூறியுள்ளார் . இதை தெரிந்து கொண்டபிறகு ,அதன்பிறகு ;நான் சொன்னேன் அட பைத்திய காரா ? என் உதவியாளர்கள் எல்லாம் எம்.பி அமைச்சர்கள் ஆகிவிட்டனர் .எனக்கு எதற்கு அந்த பதவி என்று நேரிடையாகவே அந்த நபரிடம் சொல்லியுள்ளேன் . என்னை பாழ்படுத்திவிட்டாய் என்று நீ நினைக்கலாம் அதனால் எனக்கு ரணங்களோ வலிகளோ இல்லை !பெருந்தலைவர் காமராசர் , தலைவர், கலைஞர் , லோக் நாயக் ஜெயப்பிரகாஷ் நாராயண் , நெடுமாறன் , விடுதலை புலிகளின் தலைவர் பிரபாகரன் , வைகோ , உழவர் பெருந்தலைவர் நாராயணசாமி,இலக்கிய கர்த்தாக்கள் நா.பார்த்தசாரதி , கி .ரா  போன்றோரோடு நெருங்கி பழகிய முகவரியும் எனக்குண்டு .

தமிழக உரிமைக்காக 1975 ம் ஆண்டு முதல் உச்சநீதிமன்றம் , சென்னை உயர்நீதிமன்றங்களில் நதிநீர் பிரச்னைகள் , விவசாயிகளுக்கான கடன் நிவாரணம் , மனித உரிமைகள் , சுற்றுச்சூழல் , கண்ணகி கோட்டம் என்று பல வழக்குகளை தொடுத்து உரிமைகளை நிலைநாட்டியதை விட பதவிகள் பெரிது ? 18 ஆண்டுகளுக்கு முன்பு என்னை அழித்துவிட்டாய் என்று மகிழ்ச்சியோடு சொன்னாய். நான் அழிந்தா விட்டேன ? 

எனவே ,இயற்க்கையின் நீதி என்பது வலியது , வீரியமானது , நேர்மையானது , யார்தவறு செய்தாலும் தப்ப முடியாது ! இந்த உண்மையை இட்டுகட்டி சொல்லவில்லை இந்த உண்மை தெரிந்த பலரும் இன்றைக்கும் இருக்கின்றனர் . அவர் மனசாட்சியை திறந்து பார்த்தால் நான் சொல்வது உண்மைதான் என்று ஒப்புக்கொள்வர் . யாரையும் எளிதாக நினைத்துக்கொண்டு ஒழித்துவிடலாம் என்று போகிற போக்கில் தங்கள் விருப்பத்திற்கு ஏற்றவாறு எந்த தகுதியும் எந்த உழைப்பும் இல்லாமல் நேர்மையற்ற செயலுக்கு இயற்க்கையாக நீதி தண்டனை வழங்ப்படும் .இது கதறலால் சொல்லவில்லை .இது ஒரு சாதாரண நிகழ்வில் ஏற்படும் செய்தியும் தகவல்கள் தான் .இதற்க்காக அலட்டி கொள்வதும் இல்லை !  இதற்க்காக வேதனை கொள்வதும் இல்லை சில நேரங்களில் சிலமனிதர்கள் .

“You will never reach your destination if you stop and throw stones at every dog that barks.”

― Winston Churchill

No comments:

Post a Comment

#விவசாயிகள் சங்க நிறுவன தலைவர் சி.நாராயணசாமிநாயுடு 40வது நினைவு நாள்.

———————————————————- தமிழக விவசாயிகள் சங்க நிறுவன தலைவர் சி.நாராயணசாமி நாயுடு (டிசம்பர் 6, 1925 - டிசம்பர் 20, 1984) தமிழக விவசாயிகள் சங்க ந...