Tuesday, November 1, 2016

இந்தியாவும் மாநிலங்களும்

இந்தியாவும் மாநிலங்களும்...

விடுதலைக்குப் பிறகு 1950 ஆம் ஆண்டுவரை இருந்த மாநிலங்கள்

பார்ட் A  மாநிலங்கள் : பிரிட்டிஷ் ஆளுகைக்கு உட்பட்ட பகுதிகள்..

9 மாநிலங்கள்
அஸ்ஸாம் , பிஹார், மும்பை, கிழக்கு பஞ்சாப், மத்திய பிரதேஷ், மெட்ராஸ், ஒரிஸ்ஸா,  உத்திர பிரதேஷ், மற்றும் மேற்கு வங்காளம்

பார்ட் B  மன்னராட்சிக்கு உட்பட்டிருந்து இந்தியாவுடன் இணைக்கப்பட்ட மாநிலங்கள் :

9 மாநிலங்கள்
ஐதராபாத், ஜம்மு-காஷ்மீர், மத்திய பாரத், மைசூர், பாட்டியாலா மற்றும் கிழக்கு பஞ்சாப், ஸ்டேட் யூனியன், ராஜஸ்தான், சௌராஷ்டிரா, திருவிதாங்கூர்-கொச்சி, விந்திய பிரதேஷ்

பார்ட் C சமஸ்தானங்களாக இருந்து இந்தியாவுடன் இணைந்த மாநிலங்கள் :

10 மாநிலங்கள்
அஜ்மீர், கூர்க், கொச்சின்-பெஹார், போபால், பிளாஸ்பூர், டெல்லி, ஹிமாச்சல பிரதேஷ், கட்ச், மணிப்பூர், மற்றும் திரிபுரா

பார்ட் D  யூனியன் பிரதேசம் :

அந்தமான் மற்றும் நிக்கோபார் தீவுகள்

1956 நவம்பர் 1 நிலவரப்படியான மாநிலங்கள்

1. ஆந்திர பிரதேஷ் 
2. அஸ்ஸாம்
3. பிஹார்
4. பம்பாய்
5. ஜம்மு-காஷ்மீர்
6. கேரளா
7. மத்திய பிரதேஷ்
8. மெட்ராஸ்
9. மைசூர்
10. ஒரிஸ்ஸா
11. பஞ்சாப்
12. ராஜஸ்தான்
13. உத்ர பிரதேஷ்
14. மேற்கு வங்கம்

யூனியன் பிரதேசம்
1.  அந்தமான் மற்றும் நிக்கோபார் தீவுகள்
2. டெல்லி
3. மணிப்பூர்
4. திரிபுரா
5. ஹிமாச்சல பிரதேஷ்
6. லட்சத் தீவு, மினிக்காய் மற்றும் அமிந்திவி தீவுகள்

1956க்கு பிறகும் பல மாநிலங்கள் உருவாக்கப்பட்டன...

1960 மே 1 ஆம் தேதி பம்பாய் மாகாணம் பிரிக்கப்பட்டு குஜராத், மகாராஷ்ட்ரா மாநிலங்கள் உருவாகின...

1963 டிசம்பர் 1 ஆம் தேதி நாகாலாந்து மாநிலம் உருவானது...

1966 நவம்பர் 1 ஆம் தேதி பஞ்சாப் மாநிலம் பிரிக்கப்பட்டு ஹரியானா மாநிலம் உருவானது...

பஞ்சாபின் வடக்கு மாவட்டங்கள் ஹிமாச்சல பிரதேஷுடன் இணைக்கப்பட்டது...

சண்டிகார் யூனியன் பிரதேசமாக்கப்பட்டு, பஞ்சாப் மற்றும் ஹரியானாவுக்கு பொதுவான தலைநகராக மாற்றப்பட்டது...

1968ல் மதராஸ் மாநிலம் தமிழ்நாடு என்று பெயர்மாற்றம் செய்யப்பட்டது...

1972 ஜனவரி 21ம் தேதி மணிப்பூர், மேகாலயா, திரிபுரா ஆகிய வடகிழக்கு மாநிலங்கள் உருவாக்கப்பட்டன...

1973ம் ஆண்டு மைசூர் மாநிலம் கர்நாடகா என்று பெயர்மாற்றம் செய்யப்பட்டது...

1975 மே 16ம் தேதி சிக்கிம் மாநிலம் இந்தியாவின் 22வது மாநிலமாக உருவானது. அதுவரை அங்கு இருந்த மன்னராட்சி முறை ஒழிக்கப்பட்டது.

1987 பிப்ரவரி 20ம் தேதி அருணாச்சல பிரதேசம், மிஜோரம் மாநிலங்கள் உருவாகின.

1987 பிப்ரவரி 30 ஆம் தேதி கோவா மாநிலம் உருவாக்கப்பட்டது. 

இதையடுத்து, டாமன், டையு, தாத்ரா, நாகர் ஹவேலி ஆகியவை தனி யூனியன் பிரதேசங்களாக மாறின...

2000 நவம்பரில் உத்தரப்பிரதேசத்தின் வடமேற்கு பகுதியும், மத்தியப்பிரதேசத்தின் கிழக்குப்பகுதியும் பிரிக்கப்பட்டு சத்தீஷ்கர் மாநிலம் உருவானது... பின்னர் இது உத்தரகாண்ட் மாநிலம் என்று பெயர்மாற்றப்பட்டது...

இதே ஆண்டு, இதே நாளில் பிகாரின் தெற்குப் பகுதிகள் பிரிக்கப்பட்டு ஜார்கண்ட் மாநிலம் உருவானது...

2011ல் ஒரிஸா மாநிலம் ஒடிஸா என்று பெயர் மாற்ப்பட்டது...

2014 ஜூன் 2ம் தேதி ஆந்திரப் பிரதேசத்தின் வடகிழக்கில் உள்ள 10 மாவட்டங்கள் பிரிக்கப்பட்டு தெலங்கானா மாநிலம் உருவாக்கப்பட்டது...

No comments:

Post a Comment

#விவசாயிகள் சங்க நிறுவன தலைவர் சி.நாராயணசாமிநாயுடு 40வது நினைவு நாள்.

———————————————————- தமிழக விவசாயிகள் சங்க நிறுவன தலைவர் சி.நாராயணசாமி நாயுடு (டிசம்பர் 6, 1925 - டிசம்பர் 20, 1984) தமிழக விவசாயிகள் சங்க ந...