Tuesday, November 8, 2016

அரசியல் கணக்கு....

விழுந்து விழுந்து உழைப்பார்கள், ஆனால் பலனை இன்னொருவர் அனுபவத்துகொண்டிருப்பார்.
ஒரு சிலருக்கு வேறு மாதிரி அமைந்துவிடுகின்றது.

வரலாற்றில்  உதாரணங்கள் உண்டு....
 
பைபிளில் படாதபாடுபட்டு மோசே என்பவன் எகிப்தில் இருந்து இஸ்ரேலிய மக்களை வழிநடத்தி இன்றிருக்கும் இஸ்ரேலுக்கு கொண்டு சேர்த்தான், 
ஆனால் அவனுக்கோ இஸ்ரேலில் கால் வைக்கும் பாக்கியம் இல்லை. ஆனால் அவனே மூலம்மாவீரன் அலெக்ஸாண்டர் 20 வருடமாக போராடி அமைத்த பரந்த சாம்ராஜ்யத்தை அவரின் அற்பஆயுசுக்கு பின் நண்பர்கள் அதிகாரம் செலுத்தினர்.

சிம்பொனி பிதாமகனான பீத்தோவானுக்கு தன் இசையினை தானே கேட்காத அளவிற்கு காது செவிடானது.

தாஜ்மஹாலை ஆசை ஆசையாக கட்டிய  ஷாஜகான் பின்னாளில் அதனுள் நுழையாதபடி ஒரு சிறையிலே முடக்கபட்டார்.

உயிரைகொடுத்து பல தியாகம் செய்து இயக்கம்வளர்த்தனர்புலிகள்.
கால்நடையாக நடந்து இந்து மதத்தினை வளர்த்து சங்கர மடங்களை அமைத்தார் ஆதி சங்கரர்,இன்று அவை யாரால் அனுபவிக்கபடுகின்றன...?

பசியோடும் தாகத்தோடும் சிலுவையில் நிர்வாணமாக செத்துகிடந்தார் இயேசுநாதர், இன்று பகட்டாக உடை உடுத்தி, வித விதமாக தின்று தீர்க்கும் பென்ஸ் கார் கிறிஸ்தவ போதகர்களின் உல்லாசநிலைஉலகறியும்.
இயற்கையின் விசித்திரம் இது, எங்கோ மலையில் மழைபெய்ய எங்கோ யாரோ பயன்படுத்திகொண்டிருப்பார்கள் அல்லவா?

இப்படி பல விஷயங்கள் ; இவை எல்லாம் கூட்டி கழித்து பெருக்கி வகுத்து இன்னும் திரிகோணவியல், டிபரன்சியல் கால்குலஸ் வரை ...

இதுதான் இன்றய யதார்த்த அரசியல் அறிவியல்......!
அரசியல் கணக்கு....!!

No comments:

Post a Comment

#கொடுக்காய்புளி - #அழகர்கோவில்

#கொடுக்காய்புளி காலம்(சீசன்) மதுரை- #அழகர்கோவில் சிலம்பாறுபாயும் தென் திருமாலிருச் சோலையே... -#பெரியாழ்வார் # அழகர்கோவில் #கேஎஸ்ஆர்போஸட் #ks...