-----------------
காவிரி பிரச்சனையில் திரும்பவும் பேச்சுவார்த்தையில் ஈடுபடவேண்டும் என்று அப்பிரச்சினையை பற்றி முழுதாக தெரியாத சில ஞான சூனியங்கள் சொல்லுகின்றன .
44 ஆண்டுகளாக பேச்சுவார்த்தை நடத்தி எதுவுமே முடிவுக்கு வராத நிலையில் காவிரி நடுவர்மன்றம் அமைத்து அதன் இறுதி தீர்ப்பையும் ஏற்கவில்லை கர்நாடக அரசு
உச்சநீதிமன்ற தீர்ப்பின்படி மத்திய அரசும் மேலாண்மை வாரியத்தை அமைக்க தவறிவிட்டது ! கர்நாடகாவும் உச்சநீதிமன்ற தீர்ப்பு , நடுவர்மன்றம் பிறப்பித்த உத்தரவுகளையும் தீர்ப்புகளையும் கேட்க மறுத்துவிட்டது .
இதற்கு பின்புமா கர்நாடகா பேச்சுவார்த்தையில் கலந்துகொண்டு தமிழகத்திற்கு சாதகமான முடிவுகளை ஏற்கும் என்று நம்பிக்கை வரும்ர....?
ஆக காவிரி பிரச்சனையின் முழு தன்மைகளை தெரியாமல் இருப்பவர்கள் தான் மறுபடியும் பேச்சுவார்த்தைக்கு போகவேண்டும் என்று சொல்லுவார்கள் ?
முழு வரலாற்றையும் தெரியாமல் பேசி தமிழர்களின் உரிமைகளை காவு கொடுக்க கூடாது ?
காவிரி பிரச்சினையில்20ஆண்டுகளுக்கு முன்பு தேவகவுடா பிரதமராக இருந்த போது அவருக்கு எதிராக இந்த விவகாரத்தில் வழக்கு தொடுத்தவன் என்றவகையில்,என்னுடையசிற்றறிவுக்கு எட்டிய வகையில் தமிழகம் கர்நாடகா திரும்பவும் பேசி காவிரி பிரச்சனையில் தீர்வு வரும் என்பதில் கானல் நீர் தான்
உச்சநீதிமன்ற உத்தரவால் தீராத பிரச்சினை பேச்சுவார்த்தை மூலம் தீர்ந்துவிடுமா ?
ஆக போகிற போக்கில் எதாவது கருத்தை சொல்லிக்கொண்டு போனால் பிரச்சினைகளை தான் ஏற்படுத்தும் ! இது தமிழகத்திற்கு நல்ல நல்ல
ஒரே தீர்வு ?
மேலாண்மை வாரியத்தை மத்திய அரசு அமைக்க வேண்டும் அந்த வாரியத்தின் கட்டுப்பாட்டில் அனைத்து அணைகளையும் ஒப்படைக்க வேண்டும்
இதுதான் இப்போது ஏற்பட வேண்டிய தீர்வுக்கான வழி
#காவிரி #Cauvery
#ksradhakrishnanposting
No comments:
Post a Comment