மாவீரன் திப்பு சுல்தான்அரசர்தான்....
விடுதலைப்போராட்ட வீரர் இல்லை---கர்நாடக நீதிபதி.....திப்புவுடன் இணைந்து போராடிய வீரபாண்டிய கட்டபொம்மன்,மருது சகோதரர்கள்,விருப்பாச்சி கோபால் நாயக்கர்,கர்நாடகாவில் தூந்தாசிவா,கிருட்டிணப்பநாயக்கர்,மலபாரில் கேரளவர்மன்,மணப்பாறை லட்சுமி நாயக்கர்,இவர்களெல்லாம் விடுதலைப் போராட்ட வீரர்கள் இல்லையா,?வெறும் அரசர்கள் தானா,விடுதலைப் போராட்ட வரலாற்றை முழுவதும் படித்துப் பாருங்கள் ...
திப்புவின் ராணுவமே தீரன்சின்னமலை, வீரபாண்டிய கட்டபொம்மன், மருது சகோதரர்கள் போன்ற விடுதலைப் போராட்ட வீரர்களுக்குப் பயிற்சியளித்தது.
திப்புவோடு சேர்ந்து சீரங்கப்பட்டிணம் உட்பட வெள்ளையர்களுக்கு எதிராக வெற்றிக் களங்கள் கண்டது அவர்கள் மாவீரம்
வெல்லமுடியாத வீரர்களை இறுதியில் சூழ்ச்சியால் வீழ்த்தியது வெள்ளை அரசு.
கர்நாடக நீதிபதியின் கருத்துப்படி இவர்கள் யாரும் விடுதலைப்போராட்ட வீரர்கள் அல்ல. வெறும் பாளையக்காரர்கள். அதையும் நாம் கேட்டுக்கொண்டிருக்க வேண்டுமா?
No comments:
Post a Comment