Monday, November 28, 2016

SEMINAR

இந்தியாவின் வரலாற்று அறிஞராக போற்றப்படும் ரொமிலா தாப்பரின் செமினார் மாத இதழ் மிகவும் பழமையானது  ! அந்த இதழில் ஒரு தலைப்பை பற்றி பலவித கோணங்களில் ஆராய்ந்து,ஆய்வு கட்டுரைகளை  வெளியிட்டு வருகிறது . இவ்வாறு கீர்த்தி மிக்க அந்த ஏட்டின் அலுவலகம் டெல்லி ஜன்பத்தில் உள்ள மல்கோத்ரா பில்டிங்கில் உள்ளது.

அந்த அலுவலகத்திற்கு பல முறை சென்றுள்ளேன்.அங்கு இந்த கணினி யுகத்தில் இன்னும் தட்டச்சு செய்யும் டைப்பிரேட்டர்களை பயன்படுத்துகிறார்கள்.மூடபழக்க
வழக்ங்களை நீக்கி புதுமையை உருவாக்கும் செமினார் நாளிதழ் அலுவலகத்தில் கணினி தட்டச்சு இல்லாமல் பழைய காட்ரேஜ் மிசினை வைத்து  இருப்பது வியப்பாகதெரிகிறது .

பழமையான அழகையும்,உண்மையான புதுமையையும் நேசிக்கும் செமினார் இதழை போற்ற வேண்டாமா ? செமினாரோடு ஆய்வு கட்டுரைகளை வழங்கும் Economic and political Weekly(EPW) , Social Scientist , Main Stream என்ற இதழ்களை என் மாணவ பருவத்தில் இருந்து தொடர்ந்து படித்து வருகிறேன் .இந்தஇதழ்கள் லாப
நோக்கில்இல்லாமல்பிரச்சினைகளையும்,தீர்வுகளையும்அலசிஆராயும்ஏடுகளாகும் .
இந்த நினைவுகளோடு சென்னையில் வெளிவந்த ஆங்கில மாலை ஏடு The Mail ஏடும்  அற்புதமான நடுபக்க கட்டுரைகளை வழங்கும் .அண்ணா சாலையில் POR & Sons  இந்து நாளிதழ் அலுவலகத்தை தாண்டி தி மெயில் இதழ் அலுவலகத்தை கடக்கும் போது 1 நிமிடம் The Mail ஏட்டின் நினைவுகள்  மனதில் வந்து செல்லும்.

Still leading radical monthly SEMINAR 
using manual typewriters even after 
Computers era. It was founded by
Great scholar, late Raj and Ramesh Thapar. Romila Thapar did her the best for SEMINAR.

No comments:

Post a Comment

#கொடுக்காய்புளி - #அழகர்கோவில்

#கொடுக்காய்புளி காலம்(சீசன்) மதுரை- #அழகர்கோவில் சிலம்பாறுபாயும் தென் திருமாலிருச் சோலையே... -#பெரியாழ்வார் # அழகர்கோவில் #கேஎஸ்ஆர்போஸட் #ks...