Sunday, November 27, 2016

காஸ்ட்ரோ...

காஸ்ட்ரோ கியூப மக்களை மனதார நேசித்தவர் எனப் பலரும் புகழ்கின்றனர். அதில்எந்தஐயப்பாடும்இல்லை.

தமிழீழத்தில் இந்தியமும் சிங்களமும் கைகோர்த்துக் கருவறுத்த போது கைகொட்டிச் சிரித்தவர் காஸ்ட்ரோ. 

2009 மே மாதம் தமிழீழத்தில் குருதிக் குளியல் நடைபெற்று முடிந்து அடுத்த மாதம் ஐநாவில் ஐரோப்பிய, அமெரிக்க உலகம் இலங்கையில் நடைபெற்ற அத்துமீறல்கள் குறித்து விவாதிக்கக் கோரிக்கை எழுப்பிய போது கொதித்துப் போனார் காஸ்ட்ரோ. கியூபா ஐநாவில் கூறியது. இது உலக வரலாற்றில் நடைபெற்ற மிக வெளிப்படையான போர். இதற்கு இலங்கையைப் பாராட்ட வேண்டும் என்றது காஸ்ட்ரோவின் கியூபா.

அருந்ததி ராய் உள்ளிட்டோர் தமிழீழத்தில் நடைற்றது சாட்சியற்ற போர் என வர்ணித்த போது, அதனை வெளிப்படையான போர் எனப் பாராட்டுகிறார் காஸ்ட்ரோ. 

அத்துடன் நிற்கவில்லை கியூபா. தமிழீழத்தில் நடைபெற்றது இனப்படுகொலையா என ஐநா இலங்கையில புலனாய்வு செய்ய வேண்டும் என்ற தமிழர்களின் அறக் கோரிக்கையைக் கூட இந்தியத்துடனும் சிங்களத்துடனும் கைகோர்த்து ஈவிரக்கமற்று எதிர்த்தது .
காஸ்ட்ரோ தன் மக்களுக்கு நேர்மையாளராக இருந்து அவர்களது பகைவரான அமெரிக்கரை எதிர்க்கிறார் என்றால், தமிழர்களுக்கு நேர்மையாக இருந்து, இந்திய வல்லாதிக்கத்தின் இனப்படுகொலையை ஆதரிக்கும் காஸ்ட்ரோவை எதிர்க்க வேண்டாமா? 

அமெரிக்க வல்லாதிக்கதிக்கத்தை எதிர்த்த காஸ்ட்ரோ கியூபர்களுக்குப் பெருந்தலைவர்.

ஆனாலும்,நாம்காஸ்ட்ரோவை மதிக்கிறோம் .அது நமது  நாகரிகம் .....

No comments:

Post a Comment

#கொடுக்காய்புளி - #அழகர்கோவில்

#கொடுக்காய்புளி காலம்(சீசன்) மதுரை- #அழகர்கோவில் சிலம்பாறுபாயும் தென் திருமாலிருச் சோலையே... -#பெரியாழ்வார் # அழகர்கோவில் #கேஎஸ்ஆர்போஸட் #ks...