-------------------------------------
ஆலங்குளம் சிமெண்ட் ஆலையை தனியாருக்கு விற்க போவதாக திட்டமிட்டது அதிமுக தலைமையிலானதமிழக அரசு.
2014 இறுதி முதல. 2015 மார்ச் வரை திமுக ,காங்கிரஸ்,மதிமுக,புதியதமிழகம் போன்ற அரசியல் கட்சிகளும் தொழில் சங்கங்களும் தொடர்ந்து 6 மாதம் காலம் தமிழ்நாடு அரசு சிமெண்ட் ஆலையை தனியாருக்கு விற்பதை எதிர்த்து பல்வேறு போராட்டங்களையும் முன்னெடுத்தது அனைவரும் அறிவர்
இந்நிலையில் அதிமுக அரசு தனியாருக்கு விற்கப்படுவதை எதிர்த்து நான் இரண்டாவது முறையாக சென்னை உயர்நீதிமன்றம் மதுரை கிளையில் பொதுநல ரிட் மனுவை கடந்த மார்ச் மாதம் 2015 அன்று தாக்கல் செய்தேன் !
ஏற்கனவே,எம்ஜிஆர்தமிழகமுதலமைச்சராக இருந்த போது 1983 ஆம் ஆண்டு காலத்தில் ஆலங்குளம் தமிழ்நாடு அரசு சிமெண்ட் ஆலையை தனியாருக்கு விற்க முயன்ற போது அப்போது அதை எதிர்த்துநான்சென்னைஉயர்நீதிமன்றத்தில் பொதுநல ரிட் மனுவை தாக்கல் செய்து தனியாருக்கு தாரைவார்ப்பதை தடுத்து நிறுத்தினேன் !
இந்நிலையில் என்னுடைய பொதுநல ரிட் மனு எண் 4696/15 கடந்த 31/03/2015 அன்று சென்னை உயர்நீதிமன்றம் மதுரை கிளையில் விசாரணைக்கு வந்தது அவ்வழக்கில் தமிழக அரசு சார்பில் வாதாடிய அரசு வழக்கறிஞர் திரு புகழேந்தி இந்த #ஆலங்குளம்சிமெண்ட்ஆலை நஷ்டத்தில் இயங்குகின்றது மேற்கொண்டு இந்த ஆலையை அரசு நடத்திட இயலாது ஆகவே தனியாருக்கு விற்பனை செய்ய முடிவு செய்துள்ளோம் என்று நிறைந்த நீதிமன்றத்தில் தெரிவித்தது உண்மையா ? இல்லையா ?
தற்போது தமிழக அரசு ஆலங்குளம் தமிழ்நாடு சிமெண்ட் ஆலையை தனியாருக்கு விற்பதற்கு அப்பகுதி மக்களின் எதிர்ப்பு அதிகமாக இருப்பதாலும்இதுமக்கள்போராட்டமாக மாறிவிடும! சூழ்நிலை இருப்பதையும் அறிந்து கொண்டு தனியாருக்கு விற்க்கும் எண்ணத்தில் இருந்து பின்வாங்கி ,சென்னை உயர்நீதிமன்றம் மதுரை கிளையில் இந்த ஆலையை தனியாருக்கு விற்கமாட்டோம் எனவும் தொடர்ந்து தமிழக அரசே நடத்தும் என்றும் உறுதிமொழியைஎன் பொதுநல ரிட் மனுவிற்க்கு பதில் மனுவாக தாக்கல் செய்துள்ளது .
இந்த ஆலை பிரச்சனை குறித்து அறிந்தவர்களும் விருது நகர் மாவட்டத்தைசார்ந்தவர்களுக்கும்,என்ன நடந்தது என்ற உண்மை தெரியும் .இந்த ஆலை பிரச்சனையில் நடந்தது இது தான் ;உண்மையும் இது தான்.
No comments:
Post a Comment