புரட்சித் தீ அணைந்தது...
"பிடல் காஸ்ட்ரோ மரணித்தார்"
Fidel castro passed away;Towering Personality
HEROES WILL NEVER DIE
வல்லரசு அமெரிக்காவின் காலடியில் ஒளிந்து கிடப்பது தான் கரும்புத் தீவு கியூபா. அதன் தன்நிகரற்ற தலைவர் தான் பிடல் காஸ்ட்ரோ. ஆப்கனிஸ்தான், ஈராக் போன்ற நாடுகளில் சின்ன ரிமோட்டுக்கள் மூலமே வன்முறையை தோற்றுவிக்கும் அமெரிக்காவால் தன் காலடியில் ஒளிந்து கிடக்கும் கியூபாவின் ஒற்றை முடியைக் கூட பிடுங்க முடியவில்லை. காரணம் காஸ்ட்ரோ. 50 வருடங்களாக அமெரிக்காவின் 9 ஜனாதிபதிகள் கியூபாவிற்கு எதிராகப் போராடித் தோற்று இருக்கிறார்கள். அமெரிக்காவின் உளவு நிறுவனமான C.I.A இதுவரை 638 முறை கணைகளைத் தொடுத்து தோல்வியுற்றிருக்கிறது. உடல்நிலை ஒத்துழைக்காததால் அரச நிர்வாகத்தில் இருந்து விலகுவதாக 2008 யில் காஸ்ட்ரோ அறிவித்தபோது அமெரிக்கா பட்டாசு கொளுத்திக் கொண்டாடாத குறை தான்!!.
மாவீரன் வேலுப்பிள்ளை பிரபாகரன் பிறந்த தினத்தில் மறைந்தார் மாவீரன் பிடல்காஸ்ட்ரோ இனி உலகெங்கும் நவம்பர் 26 மாவீரர்தினம் தான்....
No comments:
Post a Comment