நவ 26அரசியலமைப்புச் சட்டத்தின் தினம் (Constitution Day) :
#இந்தியஅரசியல்அமைப்பு சாசனத்தில் கடந்த 16/09/2016 வரை 101சட்டதிருத்தங்களை கடந்த 68 ஆண்டுகளில் கொண்டுவந்துள்ளோம் !
உலகத்திலேயே பிரிட்டனிலும் இஸ்ரேலிலும் அரசியல் அமைப்பு சட்டம் கிடையாது .அங்குமரபுகளையும்,பழக்கவழக்கங்களையும் கொண்டு தான் அரசியல் அமைப்பு நிர்வாகம் நடக்கிறது .
240 ஆண்டுகள் கடந்த சுதந்திர அமெரிக்காவின் அரசியல் சாசனம் வெறும் 25 பக்கங்களில் அடங்கிவிடும் .ஆனால் இந்திய அரசியல் சாசனமோ உலகிலேயே மிக அதிக பக்கங்களை கொண்ட அரசியல் அமைப்பு சட்டமாகும் . அமெரிக்காவில் இதுவரை ஒரு 20 க்கும் மேலான திருத்தங்கள் தான் என்பதும் குறிப்பிடதக்கது .
இந்திரா காந்தி பிரதமராக இருந்த போது அரசியல் சாசனத்தில் 42 வது திருத்தம்அனைவராலும்விமர்சிக்கப்பட்டு இருந்தாலும் ;நாட்டின் நடைமுறை படுத்த வேண்டிய கொள்கைகள் (Directive principles of the State policy ) என்பது ஒரு முக்கியமான வரவேற்கபட வேண்டிய முடிவாகும் .
திரு அடல்பிகாரி வாஜ்பாய் அவர்கள் பிரதமராக இருந்த காலத்தில் நீதிபதி வெங்கடாசலய்யா தலைமையில் ஒரு குழு சில பரிந்துரைகளை
வகுத்து தந்தன.
கே.எஸ்.இராதாகிருஷ்ணன்
26-11-2016
#constituionofindia
No comments:
Post a Comment