போபால் கார்பைடு விஷ வாயு விபத்து -இன்று 34வருடம்;
...........................................................
டிசம்பர் 2,1984 ஆம் தேதி யூனியன்
ஏற்பட்ட விஷ வாயுக் கசிவில் ,அடுத்த இரண்டு வாரங்களில் 6000 பேர் செத்து விழுந்தனர். 558125 பேர் மிகக் கடுமையான பாதிப்புக்குள்ளானார்கள். இவை,அரசின் புள்ளி விபரங்கள் தாம்.உண்மையில்,இதற்கு மேலும் இருக்கும். அன்று,ஜிடி எக்ஸ்பிரஸ்இல் டெல்லி சென்றபோது #போபால் ரயில் நிலையம் ஒரே அழுகையும் சோகமாக இருந்து.
காங்கிரஸ்ஆட்சியில்அர்ஜுன்சிங்உதவியில் கார்பைடுநிறுவனத்தின் தலைவர் #ஆண்டர்சன் பாதுகாப்பாய் அமெரிக்காவிற்கு தனி விமானத்தில் அனுப்பி வைக்கப்பட்டார்.
பாதிக்கப்பட்ட மக்களுக்கு இன்னமும் நிவாரணம் கிடைத்தபாடில்லை. அடுத்தடுத்த இரண்டு தலைமுறைகளும் வந்து விட்டன.
கம்பெனி கை மாறி விட்டது. டவ் கெமிக்கல்ஸ் என்ற நிறுவனம் அதை விலைக்கு வாங்கியது.
#யூனியன்கார்பைடு நிறுவனம் மீது தவறு ஏதும் இல்லை என்று வாதாடியவர் வழக்கறிஞர் நிதியமைச்சர் அருண் ஜெட்லீ தான்.
No comments:
Post a Comment