எச்சரிக்கை புயல் கூண்டுகளும்... அதன் குறியீடுகளின் விவரங்களும்..
பொது மக்களுக்கு புயல் எச்சரிக்கை விடுக்க துறைமுகங்களில் ஏற்றப்படும் புயல் கூண்டுகள் மற்றும் அதன் குறியீடுகள் குறித்த விளக்கங்களை பற்றிய தகவல்களை காண்போம்.
எண் 1 - வெகு தூரத்தில் காற்றழுத்த தாழ்வு நிலை ஒன்று உருவாகி உள்ளது.
எண் 2 - தூரத்தில் புயல் மையம் கொண்டிருக்கிறது, துறைமுகத்தில் இருந்து வெளியேறும் கலன்கள் மிகுந்த கவனத்தோடு இருக்க வேண்டும்.
எண் 3 - மோசமான வானிலை, காற்றின் வேகம் அதிகம்.
எண் 4 - புயல் பின்னர் துறைமுகப் பகுதியை தாக்கலாம்.
எண் 5 - புயல் துறைமுகத்தின் வலதுபக்கக் கரையைக் கடக்கும்.
எண் 6 - புயல் துறைமுகத்தின் இடது பக்கமாகக் கரையைக் கடக்கும்.
எண் 7 - புயல் துறைமுகம் இருக்கும் பகுதி வழியாக அல்லது மிக அருகே கரையைக் கடக்கும்.
எண் 8 - வலிமை நிறைந்த புயலானது துறைமுகத்தின் வலதுபக்கக் கரையைக் கடக்கும்.
எண் 9 - வலிமை நிறைந்த புயலானது துறைமுகத்தின் இடது பக்கக் கரையைக் கடக்கும்.
எண் 10 - மிகக் கடுமையான புயல் துறைமுகம் இருக்கும் பகுதி வழியாகவோ மிக அருகிலோ கரையைக் கடக்கும்.
எண் 11 -புயல் எச்சரிக்கை மையத்துடனான தொடர்பு துண்டிக்கப்பட்டுள்ளது.
தற்போது சென்னை, எண்ணூர் துறைமுகங்களில் 10ஆம் எண் புயல் எச்சரிக்கைக் கூண்டு மற்றும் நாகை, காரைக்கால், புதுச்சேரி, கடலூரில் 8 ஆம் எண் புயல் எச்சரிக்கைக் கூண்டும் ஏற்றப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது
"அலைகடல் கொந் தளிக்கையிலே
அகக்கடல்தான் களிப்பதுமேன்?
நிலமகளும் துடிக்கையிலே
நெஞ்சகந்தான் துள்ளுவதேன்?
இடி இடித்து எண்திசையும்
வெடிபடும் அவ்வேளையிலே
நடனக் கலைவல்லவர்போல்
நாட்டியந்தான் ஆடுவதேன்?"
No comments:
Post a Comment