தலைநகர் டில்லியில் உள்ள திஹார் சிறை, இந்தியாவிலேயே பெரியது. இங்கு, தினமும் கைதிகளின் எண்ணிக்கையை சரி பார்ப்பது, அவர்களின் நடவடிக்கைகளை கவனிப்பது, சிறை வளாகத்தில் அமைதியை காக்க, ரோந்துப் பணியில் ஈடுபடுவது உள்ளிட்ட பணிகளுக்காக, சிறை வார்டன்கள் நியமிக்கப்படுகின்றனர். சிறையில் காலியாக இருந்த, 59 வார்டன் பணியிடங்களை நிரப்ப, சமீபத்தில் போட்டித் தேர்வுக்கான விளம்பரம் வெளியானது. மாதச் சம்பளம், 5,200 - 20,200 ரூபாய் வரை வழங்கப்படும். இதற்கு விண்ணப்பிக்க, பிளஸ் 2 முடித்திருந்தால் போதும். இந்த பணியிடங்களுக்கு, 45 ஆயிரம் பேர் விண்ணப்பித்தனர். அதில் வெற்றி பெற்ற, 1,100 பேர் உடற்தகுதி தேர்வில் பங்கேற்றனர். அதிலும் வெற்றி பெற்ற, 104 பேர் மட்டுமே நேர்முகத் தேர்வுக்கு அழைக்கப்பட்டனர். இறுதியாக, 59 பேர் தேர்வு செய்யப்பட்டு, அவர்களுக்கு பணி ஆணை வழங்கப்பட்டது. அவர்களில், பெரும்பாலானோர், முதுநிலை பட்டதாரிகள்; நான்கு பேர், எம்.பி.ஏ., பட்டதாரிகள்; ஐந்து பேர், பி.இ., பட்டதாரிகள், எட்டு பேர், பி.எட்., பட்டம் பெற்றவர்கள்.
அடுத்து சமாஜ்வாதி கட்சியை சேர்ந்த, முதல்வர் அகிலேஷ் யாதவ் தலைமையிலான, உ.பி., மாநில தலைமைச் செயலகத்தில், 368 பியூன் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியானது. குறைந்தபட்சம், 10ம் வகுப்பு கல்வித் தகுதியே போதுமான இந்த பணியிடத்திற்கு, பிஎச்.டி., பட்டம் பெற்றவர்கள் உட்பட, 23 லட்சம் பேர் விண்ணப்பித்து உள்ளனர்.
No comments:
Post a Comment