Monday, December 19, 2016

கி.ரா வுக்கு ஞானபீடம் விருது

கி.ரா வுக்கு ஞானபீடம் விருது வழங்க வேண்டும் 
-------------------------------------
தமிழ் இலக்கிய படைப்புகளுக்கு ஞான பீட விருதுகள் அகிலன் , ஜெயகாந்தனுக்கு பிறகு வழங்கபடவில்லை என்பது வேதனையான விடயம் .

ஞான பீட விருதை தொடர்ந்து தமிழ் படைப்புகளுக்கு வழங்காமல் சாகித்திய அகாடமி மாற்றான் தாய் மனபோக்கோடு இருப்பது கண்டனத்துக்குறியது .

ஞான பீட விருதினை திரு கி.ரா அவர்களுக்கு எப்போதோ வழங்கி இருக்க வேண்டும் .அற்க்கான எல்லா தகுதியும் அவருக்கு உள்ளது .கரிசல் இலக்கியத்தின்  முன்னத்தி ஏர் ,  பாடுபடும் சம்சாரி , பொதுவுடமைவாதியாக அரசியல் பணியை செய்தவர் , நடுத்தர வர்க்கத்தை சார்ந்தவர் , விவசாயிகளின் போராட்டத்தை முன்னெடுத்தவர் , மக்கள் நலனுக்காக சிறை சென்றவர், தகழியை போல கிராமத்தில் , மர நிழலில் உள்ள கயிற்று கட்டிலில் இருந்து இலக்கியத்தை படைத்தவர்  ,  , நல்ல இசை ஞானி , ஆசிரியர் - கதைசொல்லி,ரசிகமணி டி கே சி , விளாத்திகுளம் சாமிகள் ,பொதுவுடமை கட்சி தலைவர் ஜீவா ,என பலரோடு நெருக்கமான நட்போடு இருந்தவர் .   கற்க கலாசாலைக்கு செல்லாமல் மழைக்கு தான் பள்ளிக்கு  ஒதுங்கியவர் . படிக்காத மேதையாக  புதுவை பல்கலைக்கழகத்தில் பேராசிரியராக நியமிக்கப்பட்டார். 

மறைந்த கவிஞர் மீரா அவர்கள் என்னிடத்தில் அடிக்கடி சொல்லுவார் 
'தம்பி ! எல்லாம் படிக்காமலேயே முனைவர் பட்டம் வாங்குகிறார்கள் நம்ம கிராவுக்கு ஏன் இதுவரை எந்த பல்கலைக்கழகமும் டாக்டர் பட்டம் கொடுக்கவில்லை 'என்று வருத்தத்தோடு பார்க்கும் போதெல்லாம் சொல்லிக்கொண்டு இருப்பார் . நான் ஒருமுறை அவரிடம் பதில் சொல்லும்போது படிக்காத ஆங்கில அறிஞரும்,ஆங்கில அகராதியை (dictionary) முதன் முதலில் எழுதிய சாமுவேல் ஜான்சனுக்கு ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழம் டாக்டர் பட்டம் வழங்கியது . அவரை போல எல்லா தகுதிகளும் சிறப்புகளும் பெற்ற கிராவுக்கு எந்த பல்கலைக்கழகம் முந்திக்கொண்டு டாக்டர் பட்டம் வழங்க முந்திக்கொள்வதோ  என்று பார்ப்போம் என்றேன் . 
கவிஞர் மீரா மறைந்தே 14 ஆண்டுகள் ஆகிவிட்டது அவர் தான் கிராவின் மணிவிழாவை  மதுரையில் நடத்தினார்.  அதன்பின்பு கிரா 80 ,85 சென்னையிலும் கிரா 90டெல்லி தமிழ்சங்கத்தில் நான் நடத்தினேன் .  இப்படியாக ஒவ்வொரு நிலையிலும்  #கிரா வோடு நெருக்கமாக இருந்து வந்தவன் என்ற நிலையில் இந்த கோரிக்கையை வைக்கின்றோம் .

நிறைவான வாழ்கை வாழ்பவர் . இப்படியான தகுதிகளை கொண்ட  95 வயதை கடந்த  தமிழ் மூத்த படைப்பாளிக்கு ஞானபீடம் விருதை வழங்க ஏன் தயங்குகிறது . 

இதற்கான முன்முயற்ச்சிகளை எடுக்க வேண்டும் என்று திட்டமிட்டுள்ளோம் . இதில் அக்கறை உள்ளவர்கள் எங்களோடு  கரம் சேர்க்க அழைக்கின்றோம் .

கே.எஸ் .இராதாகிருஷ்ணன்
19/12/2016
#ksrposting
#ksradhakrishnanposting

No comments:

Post a Comment

#விவசாயிகள் சங்க நிறுவன தலைவர் சி.நாராயணசாமிநாயுடு 40வது நினைவு நாள்.

———————————————————- தமிழக விவசாயிகள் சங்க நிறுவன தலைவர் சி.நாராயணசாமி நாயுடு (டிசம்பர் 6, 1925 - டிசம்பர் 20, 1984) தமிழக விவசாயிகள் சங்க ந...