Wednesday, December 21, 2016

நாராயணசாமி நாயுடு

விவசாயிகளின் எழுச்சிதலைவர்
நாராயணசாமி நாயுடு நினைவு நாள் இன்று.......

21/12/1984

விவசாய போராட்டங்களை முன்னெடுத்து அவர் நடத்தியபோது,கல்லூரிகளில்  மாணவர் அமைப்புகளை   அடியேன் ஏற்படுத்தினேன் .சென்னைக்கு வந்தால் சுவாகத், Old woodlands ஹோட்டலில் தான் அவர்  தங்குவார் . மாலையில் என்னுடைய இருப்பிடமான 39 ,சாலைத்தெரு மயிலாப்பூர்க்கு வருவார் . அங்கு என்னொடு தங்கி இருந்த விடுதலை புலிகளின் தலைவர் #பிரபாகரனும் இவரும் சுவாரஸ்யமாக பேசிக்கொள்வார்கள. கொங்கு மண்டல  கிராமப்புற  மொழியில் இவர் பேசுவதை பிரபாகரன் ரசித்து கேட்ப்பார் .

தம்பி எனக்கு ஒரு நல்ல துப்பாக்கி ஒன்றை குடு  என்று பிரபாகரனை கேட்டுக்கொண்டே இருப்பார் . சில சமயங்களில் மறைந்தபத்திரிக்கையாளர் சோலையும்  அங்கு வருவார்  . 

என்னுடைய சமயல்காரர் சீனி செய்துகொடுக்கும் அடையும் வடையும் அவருக்கு பிடிக்கும் . அப்போது நான் பயண்படுத்தும் தொலைப்பேசி எண் 75159 STD வசதியோடு  இருந்தது . அதையும் அங்கே இருக்கும் போது அதை பயன்படுத்திக்கொள்ளவும் அவருக்கு வசதியாக  இருந்தது.  மூத்தபத்திரிக்கையாளர்கள் ஏ.என் . சிவராமன் , கல்கி ஆசிரியர் கி.ராஜேந்திரன் ,விகடன் குழும தலைவர் பாலசுப்பிரமணியம் ,இந்து என் ராம் போன்றோர்களிடம் இவரை துவக்ககட்டத்தில்  அழைத்து சென்றதுண்டு , விவசாய சங்க போராட்டத்தின் காரண காரியங்களை அவர்களிடம் தெளிவாக எடுத்து சொன்னார் . 

விவசாயசங்க வழக்குகளை உயர்நீதிமன்றத்தில் கவனித்துக்கொண்டேன் .விவசாயிகள் மீது ஏவபட்ட #ஜப்தி நடவடிக்கைகளை தடுத்தும் , #விவசாயிகளின் கடன் நிவாரண சட்டங்களில்  உரிமைகள் கிடைக்க கூடிய வகையில் வாதாடி விவசாயிகளுக்கு நிவாரணம்  அடியேன் 1970,80களில் பெற்று தந்தேன் . கோவில்பட்டி பயணியர் விடுதியில் மாரடைப்பால் நாராயணசாமி நாயுடு  இறந்த காலத்தில் (1984)அங்கு அவரோடு இருந்தவன் .கோவில்பட்டி பயணியர் விடுதிக்கு செல்லும்போது எல்லாம் பின் பக்கம் உள்ள வடக்கு பார்த்த அறையை பார்த்தாலே நாராயணசாமி நாயுடு  நினைவு வரும் .

#கோவில்பட்டியில் அவர் மறைந்ததால் அங்கு அவரின் முழு உருவ சிலையை வைக்க நடவடிக்கை மேற்கொண்டுள்ளோம்  . அவர்குறித்தான முழு வாழ்க்கை குறிப்புகளை என் சமுகவளைதளத்தில் பலதடவை ஏற்கனவே பதிவு செய்துள்ளேன் .
#விவசாயபோராட்டங்கள்
#நாராயணசாமிநாயுடு  
கே.எஸ் .இராதாகிருஷ்ணன்
14/12/2016
#ksrposting
#ksradhakrishnanposting

No comments:

Post a Comment

#விவசாயிகள் சங்க நிறுவன தலைவர் சி.நாராயணசாமிநாயுடு 40வது நினைவு நாள்.

———————————————————- தமிழக விவசாயிகள் சங்க நிறுவன தலைவர் சி.நாராயணசாமி நாயுடு (டிசம்பர் 6, 1925 - டிசம்பர் 20, 1984) தமிழக விவசாயிகள் சங்க ந...