Tuesday, December 20, 2016

கிராவுக்கு ஞானபீட விருது

கிராவுக்கு ஞானபீட விருது 
-------------------------
கிராவுக்கு ஞானபீட விருது வழங்க வேண்டும் என்ற நேற்றைய என்னுடைய பதிவைகுறித்து அன்புக்குரிய #மாலன் அவர்கள் சில தகவல்களை சொல்லியுள்ளார். #கிரா உள்ளிட்ட சில பெயர்களை #ஞானபீட விருந்துக்காக பரிந்துரைத்தாக அவர் கூறியுள்ளார் .அவருக்கு  நன்றி  . கிராவின் படைப்புகள் ஆங்கிலம், இந்தி , தெலுங்கு ஆகிய மொழிகளில் மொழிபெயர்ப்பு செய்யப்பட்டுள்ளன என்பதையும் அவருக்கு தெரிவித்துக்கொள்கிறேன் .
தனியார் விருது வழங்கினாலும் சாகித்திய அகாடமிக்கு ஒரு சில பங்களிப்பு இருப்தாக அறிந்தேன் . அதனால்  #சாகித்தியஅகாடமிக்கு கோரிக்கை வைத்தேன் .

மாலன் அவர்களின் தகவலுக்கு நன்றி.

மாலன்:
...........
ஞானபீடம் பரிசுகள் சாகித்ய அகாதமியால் வழங்கப்படுவதில்லை. அவை ஒரு தனியார் அமைப்பால் வழங்கப்படுகின்றன. ஆண்டுதோறும் அதற்கான பரிந்துரைகள் கோரி ஒரு படிவம் அனுப்பப்படும். எனக்கு அனுப்பப்படும் படிவத்தில் நான் கி.ரா.உட்பட பல தமிழ் எழுத்தாளர்களை பரிந்துரைத்த்திருக்கிறேன். கி.ரா.விஷயத்தில் ஒரு நடைமுறைச் சிக்கல் இருக்கிறது. அகில இந்திய பரிசுகளுக்கு மொழி பெயர்ப்பு  தேவை. கி.ரா.வை மொழி பெயர்ப்பது எளிதல்ல.
கே.எஸ் .இராதாகிருஷ்ணன்
20/12/2016
#ksrposting
#ksradhakrishnanposting

No comments:

Post a Comment

உதயச்சந்திரன், முருகாநந்தம் என பல அதிகாரிகள் கவனிக்க வேண்டிய விடயம்…

  உதயச்சந்திரன், முருகாநந்தம் என பல அதிகாரிகள் கவனிக்க வேண்டிய விடயம்…