மேடை பேச்சு
----------------
மேடை பேச்சு பொதுவாழ்வுக்கு அவசியம்.ஆனால் இன்றைக்கு மேடைபேச்சு தான் அரசியலை பாழ்படுத்துகிறது ! வாய் சொல் வீரர்களால் எந்த பயனும. கிடையாது.
வெட்டி பேச்சைவிட மக்கள் களப்பணியும் செயல்பாடுதான் முக்கியம் . இதுவரை ஆரோக்கியமாக கருதப்பட்ட மேடை பேச்சு தரம் தாழ்ந்து வருகிறது . கடந்த காலத்தில் மேடை பேச்சு சதுக்கங்களை மாலை நேரம் கல்லூரிகள் என்று
சொல்லப்பட்டது . தவமாக கருதப்படும் மேடை பேச்சு இன்றைக்கு பொருள் தேடும் பிரதான தொழில் ஆகிவிட்டது .
நாட்டையும் , மக்களையும் வெட்டி சவடால் பேச்சு தான் பாழ்படுத்துகிறது .இதுவும் கவணிக்க வேண்டிய விடயமாகும் . #மேடைபேச்சு மட்டும் நாட்டை நலமாக்கிவிடாது !
கே.எஸ் .இராதாகிருஷ்ணன்
14/12/2016
#ksrposting
No comments:
Post a Comment