Wednesday, December 7, 2016

இறப்பு அவ்வளவு அலட்சியமானதா?

எழுபத்தாறு நாட்களுக்கு முன்பு வரை இடுப்பொடிய குனிந்து வணங்கிய கும்பிடுசாமிகள்..
ஹெலிகாப்டரைப் பார்த்து தலை தரையில் பட விழுந்து கிடந்தவர்கள்.. 
படத்தை நெஞ்சருகே பிடித்துக்கொண்டு படம்போட்டவர்கள்..
சிறைக்குப்  போனபோது கதறியழுது பதவியேற்றவர்கள் 
தங்கள் நாடகத்தை நேற்றே நிறுத்திவிட்டார்கள். 

இறப்பு அவ்வளவு அலட்சியமானதா?? 

பதவிக்காக, பணத்துக்காக, அதிகார போதைக்காக எப்படியெல்லாம் நடித்திருக்கிறார்கள்?? 

உண்மையான அன்புக்கும், பேணலுக்கும்  இங்கு பிற்காலத்தில் அல்லது இறப்பிற்குப் பின் மரியாதை இருக்கப் போவதில்லை என்பது தெரிந்தேதான் அவர்இவர்களையெல்லாம் குறுகி நிற்க வைத்தே நடத்தினார்களோ??

அட்டை டூ அட்டை விளம்பரம் கொடுத்து காரியம் சாதிக்க முயன்ற அத்தனை பேரும் இனி அடுத்த பெயரை அச்சுக்கோர்க்கும் வேலையிலிருப்பர். 

உண்மையான அன்பு ஒரு சொட்டுக் கண்ணீரில் இருக்கிறது என்பார்கள். அப்படிப் பார்த்தால் கோடிக்கணக்கான கண்கள் உங்கள் மறைவிற்காக அழுதிருக்கிறது. 

உண்மையான அன்பு மக்களிடம் மட்டுமே உள்ளது என்பது நேற்று கதறிய உணர்த்தியிருக்கிறது. 

எத்தனைதான் மறைத்தாலும் மீறி நிற்கும் புகழ் மக்கள் மனதில் நீங்கா இடம் பெற்றால் மட்டுமே கிடைக்கும். பணம் சம்பாதித்து என்ன பயன்?? அதிகாரம் இருந்து என்ன பயன்?? எல்லாம் ஓர் இரவில் மாறிவிடும். அல்லது பயனற்றுப் போய்விடும். 

தலைமைகளே.. இறந்தும் வாழ ஒரே வழி.. 
மக்கள் பக்கம் நில்லுங்கள். அவர்களுக்கு ஏதாவது செய்யுங்கள். 

 உடன் இருப்பவர்கள் எப்போதும் அரசியலில் வாய்ப்பை எதிர்பார்த்து  வாடி நடிக்கும் கொக்குகளே..

அமைச்சர்கள்  ராஜாஜி ஹால் கீழே...ஓரமாகஉட்கார்ந்துசோகத்தில் ...சிலர் மட்டும் எல்லாவற்றையும்  ஆக்கிரமிக்கலாம்.உடல் அருகில் உள்ள எவர் கண்ணத்திலும் ஒரு சொட்டு கண்ணீர்  இல்லை.....உயிரைக் கொடுத்து உழைப்பவர்களெல்லாம் மிகத் தள்ளி தலையிலும் வயிற்றிலும் அடித்துக்கொண்டு செல்கிறார்கள்.
அரசியலில் நேர்மை போக்கு இல்லை . அதுகேள்விகுறிஆகிவிட்டது...
நல்ல ஜனநாயகம்....!!??
அரசியல் எப்போதும் திறந்த
புத்தகம்; எனவே இந்த ஆரோக்கியமனா விவாதம்....

No comments:

Post a Comment

#கொடுக்காய்புளி - #அழகர்கோவில்

#கொடுக்காய்புளி காலம்(சீசன்) மதுரை- #அழகர்கோவில் சிலம்பாறுபாயும் தென் திருமாலிருச் சோலையே... -#பெரியாழ்வார் # அழகர்கோவில் #கேஎஸ்ஆர்போஸட் #ks...