Sunday, December 11, 2016

எட்டயபுரத்து கவிராஜன் பாரதி

எட்டயபுரத்து கவிராஜன் பாரதி பிறந்தநாள் நினைவுகளோடு...
-------------------------------------
அச்சமும் பேடிமையும்
    அடிமைச் சிறுமதியும்
உச்சத்தில் கொண்டாரடீ - கிளியே
    ஊமைச் சனங்களடீ.

ஊக்கமும் உள்வலியும்
    உண்மையில் பற்றும்இல்லா
மாக்களுக்கு ஓர்கணமும் - கிளியே
    வாழத் தகுதி உண்டோ?

மானம் சிறிது என்று எண்ணி
    வாழ்வு பெரிது என்று எண்ணும்
ஈனர்க்கு உலகம்தனில் - கிளியே
    இருக்க நிலைமை உண்டோ?

நாட்டில் அவமதிப்பும்
    நாண் இன்றி இழிசெல்வத்
தேட்டில் விருப்பும் கொண்டே - கிளியே
    சிறுமை அடைவாரடீ.
.....

அக்கினிக் குஞ்சொன்று கண்டேன், அதை
அங்கொரு காட்டிலோர் பொந்திடை வைத்தேன்!
வெந்து தணிந்தது காடு; தழல்
வீரத்தில் குஞ்சென்றும் மூப்பென்றும் உண்டோ?
....

என்னை மதிகாதவர்களை நானும் மதிப்பதில்லை, அதற்கு நீங்கள் வைக்கும் பெயர் தலைக்கனம் என்றால் நான் வைக்கும் பெயர் தன்மானம்...

ஆனால்,

இன்றைய நிலை...
............................

புரட்சியென்கிற வார்த்தையின் அர்த்தம் தெரிய வேண்டிய அவசியமற்ற ஆட்களிடம் சிக்கி விழிக்கிறது அந்த மானுட அன்பின் உச்சமான வீரியமிக்க  வார்த்தை.
...

நேருக்கு நேர் நின்று ஏதிர்ப்பவனைக்கூட நம்பிவிடு. குழைந்து கூழைக்கும்பிடு போடுபவனை நம்பாதே... பல அழிந்துபோன சாம்ராஜியங்களின் அஸ்திவாரம் இவர்களே..
...
எவர் காலென்று பாராமல் விழு
அதுவே உன் கடமை.
-அடிமைகுறள்
...
RIP - சுயமரியாதை 
அவ்ளோ;முடிஞ்சிடுச்சு

No comments:

Post a Comment

july 1

  Good and deep meaningful aspects…  @narendramodi @nsitharaman @PawanKalyan @EPSTamilNadu @NainarBJP @annamalai_k @BJP4TamilNad...