Saturday, December 10, 2016

பாரதி பிறந்தநாள்

எட்டயபுரத்து கவிராஜன் முண்டாசு கவி பாரதி பிறந்தநாள் இன்று 11/12/2016

பாஞ்சாலி சபதம் 

நெட்டை மரங்களென நின்று புலம்பினார், 
பெட்டைப் புலம்பல் பிறர்க்குத் துணையாமோ? 
பேரழகு கொண்ட பெருந்தவத்து நாயகியைச் 
சீரழியக் கூந்தல் சிதையக் கவர்ந்துபோய்க் 
கேடுற்ற மன்னரறங் கெட்ட சபைதனிலே

..........
பாரதி ... 

கோபம் ,வீரம் ,பக்தி ,காதல், விடுதலை உணர்வு , சுயம் ஆகியவற்றின் உணர்ச்சி குவியல்...
...
பாதகம் செய்பவரைக் கண்டால் .. நீ
பயங்கொள்ளலாகாது பாப்பா..
மோதி மிதித்து விடு பாப்பா.. அவர் 
முகத்தில் உமிழ்ந்து விடு பாப்பா..
...
அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்பதில்லையே..
உச்சிமீது வானிடிந்து வீழுகின்ற போதிலும்
அச்சமில்லை அச்சமில்லை 
அச்சமென்பதில்லையே..
....
தீக்குள் விரலை வைத்தால் நந்தலாலா..
நின்னை தீண்டுமின்பம் தோன்றுதடா நந்தலாலா..
...
நல்லதோர் வீணை செய்தே அதை நலங்கெட புழுதியில் எறிவதுண்டோ..
சொல்லடி சிவசக்தி எனை சுடர் விடும் அறிவுடன் படைத்துவிட்டாய்..
...
உன்கண்ணில் நீர் வழிந்தால்
என் நெஞ்சில் உதிரம் கொட்டுதடி..
...
தேடிச்சோறு நிதம்தின்று
பல சின்னஞ்சிறு கதைகள் பேசி
மனம்வாடி துன்பம் மிக உழன்று
பிறர்வாட பல செயல்கள் செய்து
நரைகூடி கிழப்பருவமெய்தி
கொடுங்கூற்றுக்கிரையென
பின் மாயும்..
பல வேடிக்கை மனிதரைப் போல
நான் வீழ்வேனென்று நினைத்தாயோ? ...
...
கேட்டிலும் துணிந்துநில்
கொடுமையை எதிர்த்துநில்
சிதையா நெஞ்சுகொள்
சீறுவோர்ச் சீறு.
.........

எண்ணியமுடிதல்வேண்டும்

நல்லவையைஎண்ணல்வேண்டும்

திண்ணியநெஞ்சம்வேண்டும்

தெளிந்தநல் லறிவு வேண்டும்

பண்ணியபாவமெல்லாம்

பரிதிமுன்பனியைபோல

நன்னியநின்முன்இங்கு

நசிந்திடல்வேண்டும் 

...
கற்பதுவே கேட்பதுவே கருதுவதே
நீங்கள் எல்லாம் அர்ப்ப மாயைகளோ
உம்முள் ஆழ்ந்த பொருளில்லையோ
அர்ப்ப மாயைகளோ
உம்முள் ஆழ்ந்த பொருளில்லையோ
...
தமிழ் நாடு என்னும் பெயரை முதன்முதல் உரைத்த பாரதி....

செந்தமிழ் நாடெனும் போதினிலே - இன்பத் 
தேன் வந்து பாயுது காதினிலே - எங்கள் 
தந்தையர் நாடென்ற பேச்சினிலே - ஒரு 
சக்தி பிறக்குது மூச்சினிலே (செந்தமிழ்) 

வேதம் நிறைந்த தமிழ்நாடு - உயர் 
வீரம் செறிந்த தமிழ்நாடு - நல்ல 
காதல் புரியும் அரம்பையர் போல் - இளங் 
கன்னியர் சூழ்ந்த தமிழ்நாடு (செந்தமிழ்) 

காவிரி தென்பெண்ணை பாலாறு - தமிழ் 
கண்டதோர் வையை பொருனை நதி - என 
மேவிய யாறு பலவோடத் - திரு 
மேனி செழித்த தமிழ்நாடு (செந்தமிழ்) 

முத்தமிழ் மாமுனி நீள்வரையே - நின்று 
மொய்ம்புறக் காக்குந் தமிழ்நாடு - செல்வம் 
எத்தனையுண்டு புவிமீதே - அவை 
யாவும் படைத்த தமிழ்நாடு (செந்தமிழ்) 

நீலத் திரைக்கட லோரத்திலே - நின்று 
நித்தம் தவஞ்செய் குமரிஎல்லை -வட 
மாலவன் குன்றம் இவற்றிடையே - புகழ் 
மண்டிக் கிடக்குந் தமிழ்நாடு (செந்தமிழ்) 

கல்வி சிறந்த தமிழ்நாடு - புகழ்க் 
கம்பன் பிறந்த தமிழ்நாடு - நல்ல 
பல்விதமாயின சாத்திரத்தின் - மணம் 
பாரெங்கும் வீசுந் தமிழ்நாடு (செந்தமிழ்) 

வள்ளுவன் தன்னை உலகினுக்கே - தந்து 
வான்புகழ் கொண்ட தமிழ்நாடு - நெஞ்சை 
அள்ளும் சிலப்பதி காரமென்றோர் - மணி 
யாரம் படைத்த தமிழ்நாடு (செந்தமிழ்) 

சிங்களம் புட்பகம் சாவக - மாதிய 
தீவு பலவினுஞ் சென்றேறி - அங்கு 
தங்கள் புலிக்கொடி மீன்கொடியும் - நின்று 
சால்புறக் கண்டவர் தாய்நாடு (செந்தமிழ்) 

விண்ணை யிடிக்கும் தலையிமயம் - எனும் 
வெற்பை யடிக்கும் திறனுடையார் - சமர் 
பண்ணிக் கலிங்கத் திருள்கெடுத்தார் - தமிழ்ப் 
பார்த்திவர் நின்ற தமிழ்நாடு (செந்தமிழ்) 

சீன மிசிரம் யவனரகம் - இன்னும் 
தேசம் பலவும் புகழ்வீசிக் - கலை 
ஞானம் படைத் தொழில் வாணிபமும் - மிக 
நன்று வளர்த்த தமிழ்நாடு (செந்தமிழ்)

..........

வாழ்க நிரந்தரம் வாழ்க தமிழ்மொழி
வாழிய வாழியவே!

வானமளந்த தனைத்தும் அளந்திடும்
வண்மொழி வாழியவே!

ஏழ்கடல் வைப்பினுந் தன்மணம் வீசி இசைகொண்டு வாழியவே!

எங்கள் தமிழ்மொழி எங்கள் தமிழ்மொழி என்றென்றும் வாழியவே!

சூழ்கலி நீங்கத் தமிழ்மொழி ஓங்கத் துலங்குக வையகமே!

தொல்லை வினைதரு தொல்லை யகன்று சுடர்க தமிழ்நாடே!

வாழ்க தமிழ்மொழி! வாழ்க தமிழ்மொழி! வாழ்க தமிழ்மொழியே!

வானம் அறிந்த தனைத்தும்
அறிந்து
வளர்மொழி வாழியவே!

*
பாரதி

No comments:

Post a Comment

#விவசாயிகள் சங்க நிறுவன தலைவர் சி.நாராயணசாமிநாயுடு 40வது நினைவு நாள்.

———————————————————- தமிழக விவசாயிகள் சங்க நிறுவன தலைவர் சி.நாராயணசாமி நாயுடு (டிசம்பர் 6, 1925 - டிசம்பர் 20, 1984) தமிழக விவசாயிகள் சங்க ந...