Saturday, December 24, 2016

தமிழகம் எங்கே போகிறது ?

தமிழகம் எங்கே போகிறது ?

அதிகம் ஊதியம் பெற்றும் பிச்சைக்காரர்கள் போல ஊரை அடித்து உலையில் போட்டு லஞ்சம் வாங்கிய மானங்கெட்ட அரசு உயரதிகாரிகள் , காசுகொடுத்து பிச்சைக்காரார்கள் போல ஓட்டை பொறுக்கி வெள்ளையும் சொள்ளையுமாக இருக்கும் மானங்கெட்ட மாண்புமிகுக்கள் , இயற்க்கைவளங்களைசுரண்டி ,
மானங்கெட்டமாண்புமிகுக்களையும்,
அரசு உயரதிகாரிகளின் காலை தங்கள் நாக்கால் நக்கும் சில சமுக விரோத கும்பல்கள் .இன்றைய  (22/12/2016)டைம்ஸ் ஆப் இந்தியா ஆங்கில ஏட்டில் for politicians , gold lies in sand என்று குறிப்பிட்டு உள்ளனர் . பலருக்கு  தங்கம் மணலில் விளைகின்றது என்று குறிப்பிட்டுள்ளது .  மக்களுக்கு விரோதமான இந்த முன்று பேர்களும் செய்கின்ற அடவாடித்தனங்களை  கேட்டால்வெட்டுகுத்து ,தாக்குதல் .
இதற்கு எல்லாம் காரணம் தகுதியானவர்களை தகுதியான இடத்தில் வைக்காதது தான் .

தகுதியே தடையென்று பொதுவாழ்க்கையில் விஷத்தனமான  நெறியாகிவிட்டது . இப்படி என்றால் மக்களாட்சி மக்கள் நல அரசு  என்பதற்கு முரணாக மக்கள் விரோத புஜபல பெற்ற ஆதிக்கவாதிகளின் ஆட்சியாகத்தான் இருக்கும் . இன்றைக்கு ஓட்டுக்கு பணம் வாங்கிகொண்டு புஜபலம்  , ஜாதி பலத்தின் மூலம் தேர்தலில் வெற்றிபெறுகின்ற தகுதியற்றவர்கள் வந்தால் இன்றைக்கு  நிலவும் தமிழகத்தின் நிலைமை தான் ஏற்படும் .

ஒருகாலத்தில் தேர்தல் வெற்றியை ஜாதி தீர்மானித்தது அல்ல ; சென்னையை சேர்ந்த அய்யங்கார் ,டி.டி.கே திருச்செந்தூர்  நாடாளுமன்ற தேர்தலில் வெற்றிபெற்றார் . வடநாட்டை சேர்ந்த ராம்நாத் கோயங்கோ திருக்குறள்  முனுசாமியை எதிர்த்து திண்டிவனம் நாடாளுமன்ற தொகுதியில் போயட்டியிட்டார் . பொள்ளாச்சி நாடாளுமன்ற   தொகுதியில் கவுண்டர்  சமுதாயம்  மக்கள் அதிகமாக வாழும் நிலையில்  நாயுடு  சமுதாயத்தை  சேர்ந்த ஜி .ஆர். தாமோதரன் வெற்றிபெற்றார் . இப்படி எல்லாம் பல நிகழ்வுகள் நடந்துள்ளன . 
இன்று இதை நினைத்து தான் பார்க்க முடியுமா?

எம்.எல்.ஏ , எம்பிக்கள் , ஆக எந்தவித உழைப்பும் , கல்வி தகுதி ,அரசியல் களப்பணி,தியாகம்,அரசியல் கட்சியின்  அடிப்படை உறுப்பினர்  ஆகாமலேயே பணம் பலம் ஜாதிபலமும்  மட்டும்  இருந்தால் போதும்.எம்.எல்.ஏ , எம்.பி  ஏன் அமைச்சர்கள் கூட ஆகிவிடுலாம் . உலகத்தின்ஜனநாயகமுறைகளையும, அரசியலமைப்பு  முறைகளையும்  நன்கு படித்தவன் என்ற முறையில் இந்த கேடுகெட்ட நிலைமை இங்குதவிர எங்கும் இல்லை .

கேரளா அரசியலை பாருங்கள் எவ்வளவு எளிமை ,அங்கு தமிழகத்தை போல் சினிமா அரசியல் இல்லை . தமிழகத்தில் தான் சினிமா வெறி அதிகமாகி சினிமாக்காரர்களை அரசியலுக்கு  அழைத்துக்கொண்டு இருக்கின்றோம் .  சினிமா அரசியல் தமிழகத்தை தவிர்த்து  ஆந்திராவில் என்.டி ராமாராவ்க்கு பிறகு சினிமாக்காரர்களால்  வெற்றிபெறமுடியவில்லை .கர்நாடகத்திலும் ராஜ்குமாரின் ரசிகர்கள் எவ்வளவோ முயன்றும்  அங்கும் சினிமா அரசியல் எடுபடவில்லை . மிகவும் பின்தங்கிய பிகாரில் சத்ருகன் சிங்காவும் முயன்று பார்த்தார் அங்கும் மாநில மக்கள் அரசியலில் சினிமாவை புறக்கணித்துள்ளனர்  .

இன்று நாம் சினிமாவையும் கேடுகெட்ட தொலைக்காட்சி சீரியலையும் பார்த்துக்கொண்டு நம்மை நாமே ஏமாற்றிக்கொண்டு வருகிறோம் . நாம் என்று திருந்துவோம் என்று தெரியவில்லை ?  இந்திய துணைகண்டத்தில் முதன் முதலாக மாநில சுயாட்சி என்ற உரிமை குரலை முரசு கொட்டிய மாநிலத்தின் தலைமை செயலகத்திலேயே மத்திய அரசின் கை நீண்டுவிட்டது .இது தமிழர்களுடைய உணர்வுகளை உரசிபார்த்துவிட்ட வெட்கேடானநிலைஆகிவிட்டது.
இதற்கு காரணமான தமிழகத்தின் தலைமை செயலாளர் ராமமோகன் ராவால் ஒவ்வொரு தமிழனும் தலை குனிய வேண்டிய நிலைமையில் தளப்பட்டுள்ளோம் ! இதற்க்கு காரணமான அத்தனை  பேரையும் அரசியல் , அரசு நிர்வாக தளத்தில் இருந்து அப்புறபடுத்துவோம் !

கே.எஸ் .இராதாகிருஷ்ணன்
21/12/2016
#ksrposting
#ksradhakrishnanposting
#தமிழகஅரசியல்

No comments:

Post a Comment

#விவசாயிகள் சங்க நிறுவன தலைவர் சி.நாராயணசாமிநாயுடு 40வது நினைவு நாள்.

———————————————————- தமிழக விவசாயிகள் சங்க நிறுவன தலைவர் சி.நாராயணசாமி நாயுடு (டிசம்பர் 6, 1925 - டிசம்பர் 20, 1984) தமிழக விவசாயிகள் சங்க ந...