கீழடியை வஞ்சிக்கும் மத்திய அரசு
------------------------------------
மதுரை அருகே சிவகங்கை மாவட்டம் கீழடியில் 110 ஏக்கர் பரப்பளவில் அகழ் ஆய்வு செய்து சங்க கால தமிழ் நாகரீகம் கண்டறியப்பட்டது . உறைக்கின்று , ஊது உலை , கழிவுநீர் வடிகால் , போன்றசான்றுகள்கிடைத்தன.
நெருக்கமான அப்பகுதிகள் பண்டைய காலத்தில் நகரமாக இருந்திருக்க கூடும் . இந்த ஆய்வு பணிகளை மேலும் விரிவாக்கி அகழ் ஆய்வு செய்ய வேண்டும் என்று கோரிக்கை எழுந்தது . இதற்கான ஐந்து பேர் அடங்கிய குழுவும் அமைக்கப்பட்டது .ஆனால் மேலும் ஆய்வு செய்ய மத்திய அரசு ஒப்புதல் கிடைக்கவில்லை . காபா என்ற மத்திய தொல்லியல் குழுவும் அமைதிக்காக்கின்றது .ஏற்கனவே தாமிரபரணி கரையில் கண்டறிப்பட்ட ஆதிச்நல்லூர் அகழ் ஆய்வு சத்திய மூர்த்தியின் அறிக்கையை 10 ஆண்டுகளாக மத்திய அரசு கிடப்பில் போட்டுவிட்டது . காவிரிப்பூம்பட்டினம் , உறையூர் , கரூர் , இந்த படுக்கைகளில் அகழ்ஆய்வுகள் அதற்கான முழுமையான ஆய்வு அறிக்களைகளை முறைபடுத்தவில்லை .ஆனால் மத்திய அரசு குஜராத்தில் வாடுநகரில் , ராஜஸ்தானில் சிஞ்சூர் , பிகாரில் ஊரைன் ,ஆகிய இடங்களுக்கு அகழ் ஆய்வு பணிகளுக்கு அனுமதி கொடுத்துள்ளது . ஆனால் தமிழக அகழ் ஆய்வு பணிகளுக்கு மட்டும் அனுமதி தராமல் அகழாராய்ச்சி பணிகள் அனைத்தையும் புறக்கணிக்கின்றது .
இந்திய வரலாற்றை தமிழகத்தில் இருந்து தான் எழுதப்படவேண்டும் .தமிழர்களின் தொண்மையையும் வரலாற்றையும் வடபுலம் தொடர்ந்து புறக்கணித்து வருகிறது அதற்கு எடுத்துக்காட்டே கீழடி ஆகழய்வுக்கு அனுமதி வழங்காதது ஆகும் .இன்றைக்கு உள்ள தமிழக கொந்தளிக்காமல் ,இதைக்குறித்து யாரும் வய்திறக்காமல் இருப்பது வேதனையை தருகிறது .நமக்கே இதுகுறித்து அக்கரை இல்லையெனில் டெல்லி பாதுஷாக்களை குற்றம் சொல்லி என்ன நடக்கப்போகிறது
#கீழடிஅகழ்ஆய்வு
#ஆதிச்கநல்லூர்
#தொல்பொருளியல்துறை
கே.எஸ் .இராதாகிருஷ்ணன்
27/12/2016
#ksrposting
#ksradhakrishnanposting
உலக வரலாற்றை தமிழகத்தில் இருந்து தான் எழுதப்படவேண்டும்
ReplyDelete