Saturday, December 17, 2016

ஜனநாயகத்தின் தோல்வி

நம்மை நாமே ஆண்டு கொள்கிறோமா என்பது குறித்துப் பொதுவாக மக்கள் கவலைப்படாததாலேயே இவ்வாறு நிகழ்கிறது. 

-------------------------

ஜனநாயகத்தின் தோல்விக்கு தவறான சித்தாந்தத்தைவிட தவறான அமைப்பு முறையே காரணம். 

எல்லா அரசியல் சமுதாயங்களும் ஆள்வோர் ஆளப்படுவோர் என இரண்டு வர்க்கங்களாகப் பிரிந்துள்ளன. இது ஒரு தீமையாகும். இந்தத் தீமை இத்துடன் நின்றிருந்தால் பரவாயில்லை. ஆனால் இதில் துரதிர்ஷ்டவசமான விஷயம் என்னவென்றால் இந்தப் பிரிவினை கால வேறுபாடின்றி ஒரே மாதிரியானதாக படிநிலை அடிப்படையில் அமைந்து ஆள்வோர் எப்போதும் ஆளும் வர்க்கத்தைச் சேர்ந்தவர்களாகவும் ஆளப்படுவோர் ஒருபோதும் ஆளும் வர்க்கமாக மாற முடியாதவர்களாகவும் இப்போதேயாகும். நம்மை நாமே ஆண்டு கொள்கிறோமா என்பது குறித்துப் பொதுவாக மக்கள் கவலைப்படாததாலேயே இவ்வாறு நிகழ்கிறது. ஓர் அரசாங்கத்தை அமைப்பதோடு திருப்தியடைந்து அந்த அரசாங்கம் தங்களை ஆள்வதற்கு விட்டு விடுகிறார்கள்.

நாடாளுமன்ற ஜனநாயகம் மக்களது அரசாங்கமாக அல்லது மக்களால் நடத்தப்படும் அரசாங்கமாக என்றும் இல்லாதிருந்ததற்கும் உண்மையில் ஏன் அது பரம்பரை பரம்பரையாக ஒடுக்கப்பட்டு வந்த மக்களை வழிவழியாக ஓர் ஆளும் வர்க்கத்தால் ஆளப்பட்டு வந்த அரசாங்கமாக இருந்து வந்திருக்கிறது என்பதற்கும் இதுவே காரணமாகும்.

கே.எஸ் .இராதாகிருஷ்ணன்
17/12/2016
#ksrposting
#ksradhakrishnanposting

#நாடாளுமன்றம் #ஜனநாயகம் #அரசாங்கம்




No comments:

Post a Comment

#விவசாயிகள் சங்க நிறுவன தலைவர் சி.நாராயணசாமிநாயுடு 40வது நினைவு நாள்.

———————————————————- தமிழக விவசாயிகள் சங்க நிறுவன தலைவர் சி.நாராயணசாமி நாயுடு (டிசம்பர் 6, 1925 - டிசம்பர் 20, 1984) தமிழக விவசாயிகள் சங்க ந...