Monday, February 11, 2019

விதுபாலா

#விதுபாலா

இவர் 1970களில் SIET Collegeயில் படித்தார் என்று நினைவு.அப்போது அறிமுகம். இவரோடு என்.டி. ராமராவ் புதல்வி புரந்தரிஸ்வரி,மத்திய
முன்னாள் அமைச்சரும் அங்கு படித்தவர்.
அந்த கல்லூரி  ஆசிரியர்கள நடத்திய
போராட்டத்தை நாங்கள் நடத்தினோம்.
அன்றைய கவர்னர் பிரபு தாஸ் பட்வாரியை இது குறித்து சந்தித்தோம்
தமிழில் ‘பொண்ணுக்குத் தங்க மனசு [1973], ’எங்கம்மா சபதம்’ [1973], ராசி நல்ல ராசி [1977], ஒரே வானம் ஒரே பூமி [1978]  100-க்கும் மேற்பட்ட மலையாளம் மற்றும் தமிழ் படங்களில் நடித்தவர் விதுபாலா.




தமிழில் ஒரே வானம் ஒரே பூமி” படத்தில் அனுதாபம் பெரும் பாத்திரத்தில் நடித்து இருப்பார். இது ஐ.வி சசி இயக்கி  ஜெய்சங்கர், கே ஆர் விஜயா, சீமா ஆகியோர் நடித்துள்ளனர்.

இவரது தந்தை கே.பாக்யநாத் .அவர் நல்ல மேஜிக் மேன்.தாயார் சுலோச்சனா.  22.5.1954 அன்று பிறந்தவர். 3-ஆவது வயதிலேயே நடிக்க வந்தவர். முதல் படம் நெட்டோணி இயக்கிய ‘ஸ்கூல் மாஸ்டர்’ [1964]; இதில் குழந்தை நட்சத்திரமாக நடித்தார் தொடர்ந்து பல படங்களில் பேபி நட்சத்திரமாக நடித்தார். ’விருந்துக்காரி’ என்ற மலையாளப் படத்தின் மூலமாக முன்னணி நடிகையானார். 10-ஆவது வயதில் ஹரிஹரன் இயக்கிய ‘காலேஜ் கேர்ள்’ படத்தில் பிரேம் நசீருடன் நடித்தார். 

’சர்ப்பம்’ படப்பிடிப்பின் போது தயாரிப்பாளர் முரளி குமாருடன் காதல் கொண்டு திருமணமும் செய்துகொண்டார். இவர்களுக்கு ஒரே மகன் அர்ஜுன். தற்போது அம்ருதா தொலை காட்சியில் ‘கதையல்ல இது ஜீவிதம்’ நேரடி நிகழ்ச்சியை வழங்கி வருகிறார்.

இவர் மலையாள திரையுலகின் முன்னணி ஒளிப்பதிவாளர் மது அம்பட் அவர்களின் சகோதரி ஆவார்.(தமிழில் மணிரத்னம் இயக்கிய அஞ்சலி படத்தின் ஒளிப்பதிவாளர்)

No comments:

Post a Comment

#விவசாயிகள் சங்க நிறுவன தலைவர் சி.நாராயணசாமிநாயுடு 40வது நினைவு நாள்.

———————————————————- தமிழக விவசாயிகள் சங்க நிறுவன தலைவர் சி.நாராயணசாமி நாயுடு (டிசம்பர் 6, 1925 - டிசம்பர் 20, 1984) தமிழக விவசாயிகள் சங்க ந...