Sunday, February 3, 2019

சட்டக் கல்லூரியின் கோபுரத்தில் செடிகள்.

சென்னை சட்டக் கல்லூரியின் கோபுரத்தில் செடிகளாக வளர்ந்து புராதணமான கட்டிடத்தை பாழ்படுத்துகிறது என்று ஏற்கனவே பதிவு செய்திருந்தேன். இது குறித்து சட்டக் கல்லூரி முதல்வரிடமும் 2017இல் நேரடியாக சந்தித்து பேசினேன். அவரும் பார்க்கலாம் என்றார். ஆனால் இதுவரை அந்த செடிகள் அகற்றப்படவில்லை. இப்போது சட்டக் கல்லூரியும் இடம் மாறிவிட்டது. பக்கத்தில் மெட்ரோ இரயில் கட்டுமானப் பணிகள் முடியும் தருவாய்க்கு வந்துவிட்டன. நேற்றைக்கு (01-02-2018) பாரிமுனைக்கு சென்றபோது, பழைய சட்டக் கல்லூரியின் கட்டிடத்தில் செடிகள் வளர்ந்துள்ளன. இதை கவனிக்க யாருக்கும் நேரமில்லை.
அதுபோலவே, கடற்கரை சாலையில் தலைமை செயலகம், தீவுத்திடலுக்கு அருகேயுள்ள போர்வீர்ர் நினைவிடக் கட்டிடத்திலும் சுவரில் வளர்ந்துள்ளன. அண்ணா சாலையில் உள்ள அண்ணா மேம்பாலத்திலும் இதே நிலைமை தான். இவையெல்லாம் பார்வையில் பட்டவை மட்டுமே.

#KSRadhakrishnanPostings
#KSRPostings
K S Radhakrishnan
கே.எஸ். இராதாகிருஷ்ணன்.
02-02-2019

No comments:

Post a Comment

july 1

  Good and deep meaningful aspects…  @narendramodi @nsitharaman @PawanKalyan @EPSTamilNadu @NainarBJP @annamalai_k @BJP4TamilNad...