Saturday, February 2, 2019

க்ரியாவின் ஆர்.கே.நாராயணின் தமிழில் வெளிவந்த மால்குடி மனிதர்கள்.


க்ரியாவின் ஆர்.கே.நாராயணின் தமிழில் வெளிவந்த மால்குடி மனிதர்கள்.
-----------------------------------------------
ஆர்.கே. நாராயணின் ஆங்கிலப்படைப்புகள் ஒரு வித்தியாசமானவை. நம் கலாச்சாரத்தை நாமே கேலியாக எடுத்துக் கொள்கின்ற இதில் தமாஷாக்கள் அதிகம். அவருடைய படைப்புகளை உன்வாங்கிக் கொண்டு மொழிபெயர்ப்பது என்பது சாதாரண செயல் அல்ல. அதை நாகேஸ்ரிவரி அண்ணாமலை சிரத்தை எடுத்து மொழிபெயர்த்துள்ளார். இதை க்ரியா வெளியிட்டுள்ளது. தமிழ் படைப்புலகில் இது முக்கிய வரவாகும்.

ஆர்.கே.நாராயணின் கதைகளில் பலரும் போற்றும் கதைசொல்லும் எளிமையையும் கிண்டல் தொனியையும் தமிழில் எப்படிக் கொண்டு வருவது என்பது சவால். அதற்கேற்ற தமிழ் நடையைக் தேர்ந்தெடுத்துக் பின்பற்றவேண்டும். இந்த நடை பேச்சுத் தமிழாக இருக்க முடியாது. ஏனென்றால் அதில் வட்டாரத்தின் அடையாளங்கள் இருக்கும். ஆர்.கே.நாராயணின் கதைகளோ எல்லோருக்கும் பொதுவானவை. சில இடங்களில் மட்டும் - பிச்சைக்காரனிடம் பேசுவது,  பள்ளி ஆசிரியரிடம் பேசுவது போன்றவை கருவேப்பிலை போல பேச்சு மொழியை தரப்பட்டுள்ளது. மணி என்ன ஆயிற்று என்னும் இடத்தில் மணி என்ன ஆச்சு என்பது ஒரு உதாரணம். கூறு, செல், அருகே, வீட்டிற்கு, எடுத்துவா, பேசினர் போன்ற வழக்குகளின் இடத்தில் முறையே சொல்லு, போ, பக்கத்தில், வீட்டுக்கு, எடுத்துக்கொண்டுவா, பேசினார்கள் என்ற வழக்குகளைப் பயன்படுத்தப்பட்டு உள்ளது.
ஆர்.கே.நாராயணின் கதைகள் நிகழும் காலத்திலிருந்து இன்றைய தமிழில் சொற்கள் மாறியிருக்கின்றன. முப்பது, நாற்பது ஆண்டுகளுக்கு முன் பரவலாக பேச்சு வழக்கில் இருந்த சொற்களை முடிந்தவரை பயன்படுத்தப்பட்டுள்ளது. பேச்சுத் தமிழில் ஆங்கிலக் கலப்பு மிகுதி. ஆங்கிலத்தில் இருந்து தமிழுக்கு கொண்டு வந்துள்ள இந்த கதைகளில் இயற்கையாக வரும் ஆங்கிலச் சொற்களைத் தவிர மற்றவற்றை தவிர்க்கப்பட்டுள்ளது. அவற்றுக்கு பதில் பயன்படுத்தியுள்ள தமிழ் சொற்களில் சில கதைகளில் காலத்துக்குப் பின்னால் இருக்கலாம். ஒரு உதாரணம், யூனிபார்ம் என்பதற்கு பதில் சீருடை.
ஆர்.கே.நாராயணின் ஆங்கில நடையில் அகராதியைப் புரட்டிப் பார்க்க வேண்டிய சொற்களும் பரவலாக இருக்கின்றன. இவற்றில் இணையான தமிழ் சொற்களை மனதை சிரமப்படுத்தி தேடவேண்டும். இதே பிரச்சனை புழக்கத்திலிருக்கும் ஆங்கில சொற்களுக்கும் இருந்தது. நம் தமிழில் ஆங்கிலத்தை கலப்பது இயற்கை போல் ஆகிவிட்டதால், ஆங்கிலச் சொல்லை உள்ளே தள்ளித் தமிழ்ச் சொற்களை காண வேண்டும்.
தமிழ் சமூகத்தின் 30 ஆண்டுகளுக்கு முந்திய வாழ்க்கையை பிரதிபலிக்கும் வகையில் இந்த முடிவு செய்யப்பட்டது. அம்மா, ‘நீ என்றும் அழைக்கப்படுகிறார். தெரு ஜோசியன், ‘அவன்’ என்றே குறிப்பிடப்படுகிறான். நாராயணனின் பிரதிப்பெயர் பயன்பாட்டில் சில தனிப்பட்ட தன்மைகள் உள்ளன. பாத்திரம் மற்றவரிடம் பேசுவது, தனக்குள் பேசுவது அல்லது நினைப்பது, ஆசிரியர் பாத்திரத்தில் புகுந்து பேசுவது என்று கதையாடலில் கலந்து வருகிறது. சில இடங்களில் குழப்பத்தையும் தருகிறது. இதனால் அவன், தான், நான் என்ற சொற்களின் பிரயோகத்தில் கவனம் செலுத்தப்பட்டுள்ளது. ஆங்கிலத்துக்கும் தமிழுக்கும் இலக்கணம் பயன்பாட்டில் சில வித்தியாசங்கள் உள்ளன. இறந்தகாலத்தை ஆங்கிலத்தில் நடந்து முடிந்ததை சொல்லவும், எப்போதும் நடப்பதை சொல்லவும் ஆசிரியர் பயன்படுத்தி இருக்கிறார். தமிழில் முன்னதற்கு இறந்தகாலத்தையும், பின்னதற்கு எதிர்காலத்தையும் பயன்படுத்தப்பட்டுள்ளது. உதாரணம் கடவுளும் செருப்பு தைப்பவனும் என்னும் கதையிலிருந்து,
ஒன்றையொன்று முந்திக் கொண்டு ஓடுவதைப் போன்ற ஒரு தோற்றத்தை உருவாக்கின. எப்போதாவது அந்த வழியாகப் போகிற ஒருவன் இருமி எச்சிலைத் துப்புவான்.’ ஆங்கிலத்தில் Occasionally a passerby gurgled and spat out into the air.
ஆர்.கே.நாராயண் வீட்டில் தமிழ் பேசியவர். ஆனால், தமிழில் எழுதவில்லை. இந்த கதைகளை படிக்கும் தமிழ் வாசகர்கள் தமிழில் எழுதப்பட்ட கதைகள் போல் உள்ளன.
///////////////////////////////////////////
அப்படி அது சேர்ப்பவற்றையும் பார்த்து அதை நம் வசத்துக்குக் கொண்டு வரலாம். அல்லது அதை கழித்துவிட நாம் முயலலாம். நாம் எழுதும்போதும், பேசும்போதும் இந்த முயற்சி நமக்குள் தொடர்ந்து நடந்து கொண்டிருக்கும். நம் ஊரில் நடப்பவற்றை நாராயண் ஆங்கிலத்தில் எழுதும் போது அந்த விஷயங்களுக்கு ஆங்கில மொழியின் பங்களிப்பு இல்லாமல் இருக்காது. சொல்லின் பொருள் அந்த சொல்லிலிருக்கும் மொழியின் படைப்பு. நம் மொழியிலேயே அதை படிப்பதற்கும் ஆங்கிலத்தில் நாம் அதை படிப்பதற்கும் இந்த வகையில் ஒரு வேறுபாடு உருவாகும்.  தான் சொல்பவற்றை ஆங்கிலம் எப்போதும் அடக்கமாகவே சொல்லும் என்பது நமக்குத் தெரிந்ததுதானே.
ஆர்.கே.நாராயண் தென்னிந்தியச் சம்பவங்களை வேறு ஒரு கலாச்சாரத்தின் மொழியில் கதைகளாகப் படைக்கிறார். அப்போது நம் இலக்கிய ரசனைக்குத் தெரிந்தும், தெரியாமலும் வரும் ஆதாயம் என்ன என்று தெரிந்து கொள்ளும் முயற்சியில் இன்னொன்றையும் கவனிக்க வேண்டும். கதைகளில் வரும் மால்குடி சம்பவங்கள் கொஞ்சம் விநோதம்தான். நான் இப்படிச் சொல்லும்போது பழக்கமானவற்றையும் புதிதாக காட்டும் இலக்கியத்தின் அடிப்படைத் திறனைச் சொல்லவில்லை. கதைகளின் நிகழ்வுகள் வழக்கமானவற்றில் இருந்து வேறுபட்டவை என்ற பொருளில் சொல்கிறேன். இப்படி வேறுபட்டவற்றை அடையாளம் காட்டும் ரசனை து? இந்த கலாச்சாரத்திலேயே இருக்கும் நமக்கு இந்த வேறுபாடு அவ்வளவாக புலனாகாது. இன்னொரு கலாச்சாரத்தின் வழியாகப் பார்க்கும்போது, வேறுபாடு தெளிவாக தெரியும். சம்பவங்களுக்கும், அவற்றை விவரிப்பதற்கும் இந்த வழியில் வரும் செறிவு தொகுப்பில் உள்ள கதைகள் சிறப்பு. இவற்றைப் பேசிய பிறகு இப்போது கதைகளின் மொழிபெயர்ப்பு பற்றி பேசும் கட்டத்திற்கு வந்து விட்டோம்.
மொழிபெயர்ப்பை இரண்டு மொழிகளுக்கு இடையில் நிகழ்வதாக மட்டுமல்லாமல், இரண்டு கலாச்சாரங்களுக்கு இடையே நிகழும் ஒன்றாகவும் பார்ப்பது வழக்கம். மொழிபெயர்ப்பாளர் இரண்டு மொழியும் தெரிந்தவராக மட்டுமல்லாமல் 2 கலாச்சாரத்திலும் காலூன்றியவராக இருக்கவேண்டும்.
நாராயணின் கதை சொல்லும் மொழியில் ஒரு கிண்டல் இருக்கும். ஆங்கிலத்தில் இது கொஞ்சம் ஆழப்படும். ஆனால், சொற்களின் மேற்பரப்பிலேயே கிடந்த தானாகவே காதில் விழுவதாக இருக்காது. இதை தமிழில் கொண்டுவருவதை முதல் சவாலாக உணர்ந்ததாகச் சொல்கிறார் மொழிபெயர்ப்பாளர். எனக்கு ஒரு அனுபவம் உண்டு. ஒரு ஜோசியன் அதிர்ஷ்ட நாள் என்ற கதையும், ரோடு எஞ்சின் என்ற கதையும் கல்லூரியில் மாணவர்களுக்கு பாடமாக இருந்தது. இவற்றை பாடம் சொல்வதற்கு மிகவும் சிரமம். பாடங்கள் சொல்லையும், வரிகளையும் மாற்றாமல் படித்து விளக்கவேண்டிய பனுவல் (text) என்பது மாணவர்களுக்கு புரிந்திருக்கவில்லை. அதோடு, அவர்கள் கதை சொல்லும் முறையைவிட, கதை என்ன என்பதில் தான் அதிகம் ஆர்வம் காட்டினார்கள்.  
ஆர்.கே.நாராயணன் தென்னிந்திய சூழலுக்கேற்ப தனக்கென்று ஒரு பாணியை வகுத்துக்கொண்டு இரசிக்கக்கூடிய வகையில் எழுதுகின்ற ஒரு ஆளுமை. மனித இயல்பை நகைச்சுவை உணர்வோடு சித்தரித்தார். இவருடைய ஆங்கில இலக்கியம் உலகப் பார்வைக்கு உலகத்தின் கவனத்திற்கு வந்தது.
Swami and Friends
The Guide
The Bachelor of Arts
The English Teacher
ஆகியவற்றோடு பிரபலமான அவருடைய Malgudi Days என்ற படைப்பை இராமநாதபுரத்தை சேர்ந்த நாகேஸ்வரி அண்ணாமலை தற்போது அமெரிக்காவில் இருந்தாலும் தமிழில் மொழிபெயர்த்துள்ளார். சமூகவியலில் முனைவர் பட்டம் பெற்றுள்ளார். அவருக்கு பாராட்டுக்கள்.

#மால்குடி_மனிதர்கள்
#RKNarayan
#Malgudi_Days
#KSRadhakrishnanPostings
#KSRPostings
கே.எஸ்.இராதாகிருஷ்ணன்.
02-02-2019

No comments:

Post a Comment

*Every situation in life is temporary*

*Every situation in life is temporary*. Don't be afraid, your fate can't be taken from you, it is a gift. Life will always move in t...