Wednesday, February 6, 2019

விவசாயிகளின் போராளி சி. நாராயணசாமி நாயுடுவின் மணி மண்டபம்.


விவசாயிகளின் போராளி சி. நாராயணசாமி நாயுடுவின் மணி மண்டபம்.
----------------------------------
விவசாயிகள் சங்கத் தலைவர் சி. நாராயணசாமி நாயுடுவின் மணி மண்டபம் அவருடைய கிராமமான கோவை மாவட்டம் வையம்பாளையத்தில் இன்று திறக்கப்படுகிறது. அவருடைய இந்த மணி மண்டபம் கட்ட முதல் செங்கலை மாண்புமிகு கழகத் தலைவர் எம்.கே.எஸ் அவர்கள் கடந்த 16-12-2017அன்று சென்னையில் அவருடைய பேரன் பிரபுவிடம் வழங்கினார். நேரடியாக அவர் குடும்பத்தார் தளபதியை சந்தித்தபோது அக்கட்டிடத்திற்கான அடிக்கல் வழங்கப்பட்டது.




ஏற்கனவே நமக்கு நாமே பயணத்தின்போது, வையம்பாளைத்தில் உள்ள அவரது நினைவிடத்திற்கு கழகத் தலைவர் சென்றிருந்தார். அவருடைய சிலையை கோவில்பட்டியில் நிறுவ பல தடைகள் இருப்பதால், நீதிமன்றத்தில் உத்தரவை எதிர்பார்த்து இருக்கிறோம். கழக ஆட்சி அமைந்தால் அவருடைய சிலையை அவர் மறைந்த கோவில்பட்டி நகரில் நிறுவப்படும்.


#சிநாராயணசாமி_நாயுடு
#விவசாயிகள்_சங்கத்_தலைவர்
#Farmer_Leader
#c_narayanasamy_naidu
#KSRadhakrishnanPostings
#KSRPostings
K S Radhakrishnan
கே.எஸ். இராதாகிருஷ்ணன்.
06-02-2018

No comments:

Post a Comment

#விவசாயிகள் சங்க நிறுவன தலைவர் சி.நாராயணசாமிநாயுடு 40வது நினைவு நாள்.

———————————————————- தமிழக விவசாயிகள் சங்க நிறுவன தலைவர் சி.நாராயணசாமி நாயுடு (டிசம்பர் 6, 1925 - டிசம்பர் 20, 1984) தமிழக விவசாயிகள் சங்க ந...