Monday, February 11, 2019

தமிழினப்படுகொலையாளி மகிந்தவை சிறப்பு விருந்தினராக அழைத்து மாலையிட்டு வரவேற்கும் காட்சி! என்ன சொல்ல...... காட்சிப்பிழையா?

தமிழினப்படுகொலையாளி மகிந்தவை சிறப்பு விருந்தினராக  அழைத்து மாலையிட்டு வரவேற்கும் காட்சி! என்ன சொல்ல......  
காட்சிப்பிழையா?

இந்து ராம் ஏன் இப்படி சிங்களவர்களுக்கு துனை போகிறார்.....?

‘The huddles’என்ற தலைப்பில் The Hindu ஆங்கில ஏடு,பெங்களூரில் பிப்ரவரி 9 அன்று நடைபெற்ற "இந்திய - இலங்கை உறவுகள்" என்ற தலைப்பில் நடைபெறும் அரசியல் கலந்துரையாடல் நிகழ்வுக்கு தமிழ் இனப்படுகொலையாளி ராஜ பக்‌ஷே அழைக்கப்பட்டு இருக்கிறார்.







இந்திய மேலாதிக்கங்களின் தலையீடுகள் தொடர்ச்சியாக தமிழின எதிர்ப்பு பகையுணர்வோடும் சிறிலங்கா ஆட்சியாளர்கள் கரங்கோர்ப்போடும் நிகழ்ந்து வருகின்றன.

தமிழின அழிப்புப் போரில் சிங்கள அரசு வெற்றி பெறுவதற்கு எல்லா வகையிலும் துணை நின்ற இந்திய ஆளும் வகுப்பின் ஊதுகுழலாக இன அழிப்புக் குற்றவாளிகளுக்கு துணையாக இருப்பது
ஏற்புடையதல்ல.

இறுதி அழிப்பு போர் வரை இலங்கை படையின் 58 வது படைப் பிரிவின் ஒரு அணியாக இருந்து சிங்கள அரசின் போருக்கு முழுவதுமாக துணைபோனது.

சிவசங்கர மேன்னும், எம்.கே நாராயணனும் , விஜய்நம்பியார், சதீஷ் நம்பியாரும் இன அழிப்புப் போரை வழி நடத்தினார்கள் எனில் தனக்கு இருக்கக் கூடிய முற்போக்கு முகமூடியை வைத்துக் கொண்டு இன அழிப்புப் போருக்கு எதிரான குரல்களை மடைமாற்றினார் இந்த என்.இராம்.

2006 நார்வேயின் அமைதி ஒப்பந்த முறிவுக்குப் பிறகு ஏற்படுத்தப்பட்ட கூட்டணியில் கணக்கச்சிதாக இணைத்துக் கொள்ளப்பட்டவர் இந்த என். இராம்.

58 வது படையணிக்கு தலைமையேற்ற சல்வீந்திரா சில்வாவை இனப்படுகொலைப் போரை உன்னிப்பாக கவனித்த சர்வதேச மனித உரிமைச் செயற்பாட்டாளர்கள் அந்தப் படையணி நடத்திய போர்க்குற்றங்களை ஆவணப்படுத்தி சல்வீந்திர சில்வா தண்டிக்கப்பட வேண்டும் என்கின்றார்கள்.

 ஆனால் அந்தப் படையணியோடு இறுதி வரை உடனிருந்த இந்துக் குழுமத்தின் பிரண்ட் லைன்  இதழின் ஆசிரியர் முரளிதர் ரெட்டி சிங்களத் தரப்பின் வெற்றிகளை மட்டும் ஒரு தலைப்பட்சமாக தமிழ்த்தரப்புக்கு எதிராக கட்டுரைகளை எழுதிப் பரப்பினார் என விமர்சனம் இருந்தது.

குறிப்பாக 58 வது ஆர்மி மருத்துவ மனைகள், பாதுகாக்கப்பட்ட பகுதிகள் என அறிவிக்கப்பட்ட பகுதிகள் மீது மனிதத் தன்மையற்ற முறையில் கொலைவெறித் தாக்குதல் நடந்தது.

இலங்கையில் நடந்த இனப்படுகொலை அதற்கு சர்வதேச விசாரணை வேண்டும் என்று கேட்டது  தமிழகம்.தமிழர் மத்தியில் பொது வாக்கெடுப்பு நடத்தவும் 
வலியுறுத்திப்பட்டது.

ராஜ பக்‌ஷேவுக்குஆதரவாக இந்து ராம் இயங்குவது நியாயமா....?


#KSRadhakrishnanPostings 
#KSRPostings
K S Radhakrishnan
கே.எஸ்.இராதாகிருஷ்ணன்.
11-02-2018

No comments:

Post a Comment

நம்பமுடியாதஎனதுநாட்குறிப்புகள் #எனதுபயணங்கள்

  #நம்பமுடியாதஎனதுநாட்குறிப்புகள் #எனதுபயணங்கள் ——————————————————- ‘நம்ப முடியாத எனது நாட் குறிப்புகள்’ என்ற தலைப்பில். என் வாழ்க்கைப் ப...