சென்னிமலை ஒன்றியத்தில் நடந்த நிகழ்வில் ஓட்டுக்கு பணம் கொடுப்பதை பற்றி பேசியபோது, ஒரு ஓட்டுக்கு ரூ. 250/- கொடுத்தால் 5 ஆண்டுகளுளில் (1825 நாட்களுக்கு) ஒரு நாளைக்கு 13.6 பைசாவாகும். இதே ரூ. 500/- கொடுத்தால் 27.3 பைசாவாகும் என்ற கணக்கை சொல்லி உங்களின் 5 ஆண்டு தேவையை இந்த சில காசுகள் பூர்த்தி செய்துவிடுமா என்று சிந்தியுங்கள் என்றேன். இதை வைத்துக் கொண்டு நீங்கள் விரும்பும் பொருட்களையா வாங்கமுடியுமா? என்ற கேள்வி எழுந்தது.
உடனே ஒரு பெண்மணி, ஐயா இந்த காசை வச்சி ஒரு கருவேப்பிலையே வாங்க முடியாது என்றார். உடனே ஒரு விவசாயி இந்த பணத்துல ஒரு பீடி கூட வாங்கமுடியாது என்றார். இத்தகைய விழிப்புணர்வோடு கிராம மக்கள் இருப்பதை அறிந்து மகிழ்ச்சியாக இருக்கிறது.
#Vote_for_Money
#KSRadhakrishnanPostings
#KSRPostings
K S Radhakrishnan
கே.எஸ்.இராதாகிருஷ்ணன்.
13-02-2018
No comments:
Post a Comment