மண் வாசப் படைப்புகள் ...வட்டார வழக்கு வார்த்தைகள் அல்லது விவரிப்புகள்
-------
ஆஹா....மழைத் துளி பட்ட மாத்திரத்தில் குபீரெனக் கமகமத்தெழும் மண் வாசனை இக் கணம் உங்கள் நாசியிலும் நினைவிலுமல்லவா..!! இதழின் அத்தனைப் படைப்புகளும் வாசகர்களை அந்தந்தப் பிரதேசங்களுக்கே கூட்டிச் செல்லும் பிரமைகள். கண்டிப்பாய் கிளர்ந்தெழும் வாசகனுக்கு! இப்படி மண் வாசத்துக்கென்றேயான ஒருஇதழ் தான் " கதை சொல்லி "..! இதழ் ஆசிரியர் எழுத்துலகப் பிரம்மா.." கோபல்லபுரம்." திரு.கி..ராஜநாராயணன் ஆயிற்றே! இணை ஆசிரியர் வழக்கறிஞரும் இயற்கை நேசப்
படைப்பாளருமான திரு.கே.எஸ்.இராதாகிருஷ்ணன் அவர்கள்..! சொல்லவும் வேண்டுமா மண் வாசத் ததும்பலை.! கிராமியம்..நகரச் சூழல்..இரு வகைப் படைப்புகளுமே அவற்றுக்கான பாரம்பரியச் செழுமைகளைக் காட்சிகளாய் முன் வைக்கும் பிரமிப்புகள்..தெறிக்கும்! " கதைசொல்லி'" இதழின் இத் தனித்துவ முத்திரைக்காக நெஞ்சு நிறைப் பாராட்டுகளும் வாழ்த்துகளும்.... என் சிறு கதை.
" போதராஜு '....(POTHARAJU... தெலங்கானாத் திருவிழாப் பின்னணியிலான கதை.) இதழில் இடம் பெற்றமைக்கு என் இதய நன்றியும்.!
Shantha Dutt

No comments:
Post a Comment