Sunday, February 17, 2019

இதுதான்அரசியலா......

#இதுதான்அரசியலா......
———————————————
பொதுவாக அரசியலில் உடை அணிவதில் சில மரபுகள்,நெறிமுறைகள் உண்டு. கைத்தறி மற்றும் கதர் வெள்ளுடை வேட்டி சட்டையில் துவங்கி இன்று வண்ணங்களில் பேண்ட் சட்டை போட்டு மேடை ஏறுவதும் உண்டு. அதில் குறைகான  முடியாத அளவிற்கு முறையானதாக இருக்கும். கல்லூரிகளில் கூட முறையான( Formal dress)  உடைக் கட்டுப்பாடுகள் உண்டு.  

ஆனால் உலகறிவு பேசும் மக்கள் நீதிமய்யத்யின் தலைவர்  கமல்ஹாசனுக்கு முறையான உடை அணியவேண்டும் என்ற அறிவு மட்டுமல்ல. முட்டிக்கு கீழ் கிழிந்த ஜீன்ஸ் அணிந்துக் கொண்டு கேரள முதல்வர் பினராய் விஜயனை சந்தித்துள்ள படத்தை காண நேர்ந்தது. சமூக வளைத்தளங்களில் இருந்தது.இது உண்மையான....?

அரசியலில் பின்நவீனத்துவம், விமர்சனம், எதிர்வினைகள் என்பது ஏற்கத்தக்கது. ஆனால் கமல்ஹாசனின் உளறல்கள் அத்தகைகதயது அல்ல. அபூர்வராகங்கள் திரைப்படத்தில் காட்சி அமைப்பு ஒன்று நினைவுக்கு வருகின்றது. அதாவது அப்பா மகளை அடைய விரும்புவதும் , மகன் தாயை அடைய விரும்புவதுமாக இருக்கும். இது அரசியல் தத்துவார்துக்கு முரண் ஆகும்.அவரது சினிமாக் காட்சிகள் எவ்வாறு ஏற்க முடியாயததோ அப்படித்தான் அரசியல் உளறல்களும் உள்ளன. 

அவரது தந்தையார் பரமக்குடி வழக்கறிஞர்   சீனிவாசன் அவர்களை அறிவேன். மிகவும் மென்மையானவர் மட்டுமின்றி தீர்க்கமாக சிந்தித்து பேசுகின்றவர். 1970களில் நெடுமாறன் மதுரையில் நடத்திய நிகழ்ச்சிகளுக்கு வருவார். அவர் எனக்கு நல்ல பழக்கம்.அவரது மகனா இப்படி குழம்பிப் போய் தன் ரசிகர்களையும் குழப்பி வருகின்றார்? அரசியலில் அதிகம் உழைத்து தியாகம் செய்து நேர்மையான பலர் ரணப்பட்டு காணாமல் போன துயரங்களும் உண்டு. சில ஞானசூனியங்கள் எந்த களப்பணி இல்லாமல் தீடிர் அதிஷ்டத்தில் கோபுரத்தில் உச்சியில் ஒட்டிக் கொண்ட குப்பைகளும் உண்டு என்பதை நினைவூட்டக்கடமைப்
பட்டிருக்கின்றேன்.

#KSRadhakrishnanPostings 
#KSRPostings
K S Radhakrishnan
கே.எஸ்.இராதாகிருஷ்ணன்.
17-02-2019


No comments:

Post a Comment

கனிமொழிக்கும் டி ஆர் பாலுவிற்கும் சிவகங்கையில் ப. சிதம்பரம் மகனையும் போட்டியாக வலுவற்ற வேட்பாளர்களை நிறுத்தி வைத்ததன் மூலம் எதிர்க்கட்சிகளே வெற்றி வாய்ப்பையே வழங்கி விட்டார்கள்

இன்று மாலை  டில்லி மூத்த பத்திரிக்கையாள நண்பர்  தொலைபேசியில் என்னைத் தொடர்பு கொண்டு தூத்துக்குடியில் கனிமொழி அவர்களின் வெற்றி எப்படி இருக்கி...