Sunday, February 17, 2019

இப்படியும்சிலமனிதர்கள்...

#இப்படியும்சிலமனிதர்கள் ......
——————————————-

மறவற்க மாசுஅற்றார் கேண்மை துறவற்க 
துன்பத்துள் துப்பாயார் நட்பு.

இன்று காலை ஒருவர் என்னிடம் உதவி வேண்டி அணுகினார். அவர் பொதுவாழ்வில் உள்ளவர் அல்ல ஆனால் பொதுவெளி பிரபலம் ஆவார். தற்போது அணுகியது மட்டுமன்று இதற்கு முன்னரும் உதவிக் கேட்டு பெற்றுள்ளார். 

நீங்கள்  என்னிடம் உதவி கேட்கின்றீர்களே, நீங்கள் யாருக்காவது உதவி செய்திருக்கின்றீர்களா? அல்லது ஆதரவாக இருந்துள்ளீர்களா? இந்த வாழ்க்கை என்பது நிரந்தரமல்ல. இதுவும் பிம்பம்தான். இதற்க்கும் முடிவுண்டு. ஒருவர் தன்னுடைய வாழ்நாளுக்கு பின்னரும் அவர் செய்த உதவியால் , அவரால் நன்மை அடைந்தவர்கள் அவரை நினைவில் வைத்துக் கொள்ளும் அளவிற்கு வாழ வேண்டும் அல்லது தான் பெற்ற உதவியை மறவாது இருக்க வேண்டும். இவரை உயர்த்தி விட்டவர்களையும் புறம் தள்ளயும் விட்டுள்ளார். இவரை செல்பேசி மூலமாக தொடர்புக்கொண்டாலும் எடுக்கமாட்டீங்க.

நன்றி மறப்பது நன்றுஅன்று நன்றுஅல்லது 
அன்றே மறப்பது நன்று.

என்பதை நினைவில் கொண்டு  இந்த உதவியையும் செய்கின்றேன் என சொல்லி அனுப்பி வைத்தேன் .

#KSRadhakrishnanPostings 
#KSRPostings
K S Radhakrishnan
கே.எஸ்.இராதாகிருஷ்ணன்.
17-02-2019

No comments:

Post a Comment

கனிமொழிக்கும் டி ஆர் பாலுவிற்கும் சிவகங்கையில் ப. சிதம்பரம் மகனையும் போட்டியாக வலுவற்ற வேட்பாளர்களை நிறுத்தி வைத்ததன் மூலம் எதிர்க்கட்சிகளே வெற்றி வாய்ப்பையே வழங்கி விட்டார்கள்

இன்று மாலை  டில்லி மூத்த பத்திரிக்கையாள நண்பர்  தொலைபேசியில் என்னைத் தொடர்பு கொண்டு தூத்துக்குடியில் கனிமொழி அவர்களின் வெற்றி எப்படி இருக்கி...