Sunday, February 17, 2019

Unhrc 40th Session

#ஐநா மனித உரிமைகள் கவுன்சிலின் 40வது கூட்டத் தொடர்.....
————————————————
ஐ.நா.வின் அழைப்பிதழ் இன்று வந்துள்ளது. ஜெனீவாவில் நடைபெறவுள்ள மனித உரிமைகள் கவுன்சிலின் 40வது கூட்டத் தொடருக்கு பங்கேற்க வேண்டி கேட்டு எனக்கு முறைப்படி இந்த வருடமும் கடிதம் வந்துள்ளது. ஆனால் நாடாளுமன்ற தேர்தல் சூழல் உள்ளது. பணிகள் உள்ளன. என்ன செய்ய என தெரியவில்லை.

அப்பாவி ஈழத்தமிழர் மீது இலங்கையில் நடைபெற்ற மனித உரிமை மீறல்கள் குறித்தான பிரச்சனை குறித்த விவாதத்தில் பங்கேற்பது கடமை மட்டுமல்ல. அவசரம் அவசியமாகும். 

கிட்டத்தட்ட 9 ஆண்டுகளாக ஐ.நா. மனித உரிமை ஆணையத்தில் இந்த பிரச்சனை நிலுவையில் இருக்கிறது. பாதிக்கப்பட்ட இலங்கை தமிழருக்கு நீதி கிடைக்காமல் ஒவ்வொரு வருடமும் சிங்கள அரசு நீதிமன்றத்தில் வாய்தா வாங்குவதை போல நேரத்தை கேட்டு காலதாமதம் செய்து எல்.எல்.ஆர்.சி (LLRC) குழுவின் அறிக்கையையும் நிறைவேற்றவில்லை. சர்வதேச சுதந்திரமான விசாரணை பொறியமைப்பிற்கும் சிங்கள அரசு ஒத்துழைப்பும் தரவில்லை. பொது வாக்கெடுப்பு வேண்டுமென்று தமிழர்கள் கோரியும், எந்த நடவடிக்கையும் இல்லை. விவசாய நிலங்களை தமிழர்களிடம் சரியாக ஒப்படைக்கப்படவில்லை. காணாமால் போனவர்கள், கைது செய்யப்பட்டவர்களையும் குறித்தான பிரச்சனைகள் என பல பிரச்சனைகளும் கிடப்பில் போடப்பட்டுள்ளது.

இலங்கையின் அரசின் தலையீடு இல்லாமல் சர்வதேச அளவில் சுதந்திரமான விசாரணை மேற்கொள்ள முடிவெடுக்கும் இறுதிகட்ட நிலையில் உள்ளது. 

ஆனால் சூழல் எப்படி அமைகிறதோ சொல்வதற்கு இல்லை.

#ஜெனீவா_மனித_உரிமை_ஆணையம்
#UNHRC
#KSRadhakrishnanPostings 
#KSRPostings
K S Radhakrishnan
கே.எஸ்.இராதாகிருஷ்ணன்.
14-02-2019


No comments:

Post a Comment

Kerala