Monday, March 11, 2019

கரிசல் காட்டு ராஜா (நாமக்கல் ராஜா பதிவு)




ஐயா Radhakrishnan KSபற்றி சிறு பதிவு! 

மறுக்கப்பட்ட (மறைக்க பட்ட ) மனிதர்
நாமக்கல்ராஜாவின் முகநூல் பதிவு 💐    
      காமராஜரின்  கரங்களை பிடித்து அரசியல் எனும் ஒரு  மக்கள் பணியில் அடி எடுத்து  வைத்த  எங்கள் பகுதியை சேர்ந்தவரை பற்றி என் எண்ண ஓட்டத்தில் இருந்தவைகளை   ஒரு குறுகிய வரலாறை எழுதியே ஆக வேண்டும்  .
 ஆம்  எங்கள் கரிசல் பூமியின் பொக்கிஷம் என்றே நான்  சொல்வேன் . அரசியலுக்கு அப்பாற்பட்டு தான் இதை எழுதுகிறேன் . தமிழகத்தின் அரசியல் களத்தில் 44 ஆண்டுகளாக களப்பணியாற்றுபவர், வழக்கறிஞர், மனித உரிமைகள் மற்றும் சுற்றுச்சூழல் ஆர்வலர், எழுத்தாளர், நூல் ஆசிரியர், கதைசொல்லியின் இணை ஆசிரியர், சமூக வலைதளங்களில் செயல்படுபவர், தமிழகத்தின் அரசியல் கட்சிகளிலேயே முதல் முதலாக செய்தி தொடர்பாளராக 23 ஆண்டுகளுக்கு முன்பு நியமிக்கப்பட்டவர், கர்மவீரர் காமராஜர், திமுக தலைவர் டாக்டர். கலைஞர், ஈ.வி.கே. சம்பத், கவிஞர் கண்ணதாசன், பழ.நெடுமாறன், விவசாயிகளின் தலைவர் சி. நாராயணசாமி நாயுடு, திரு. வைகோ ஆகியவர்களின் நன்மதிப்பைப் பெற்றவர்.முக்கியமான ஒரு நபருக்கு ராஜ்யசபை  உறுப்பினராக திரு நெடுமாறன் அவர்களிடம் ஓட்டு போட சொன்னவர் .அவரின் பெயரை இங்கே குறிப்பிட விரும்ப வில்லை .
குறிப்பாக தமிழ் நெஞ்சங்களில் நீங்கா இடம் பெற்ற மேதகு பிரபாகரன் முதன் முதலில் இவர் வீட்டில் தான் தங்கி இருந்தார் ..இவர் வீடு முதன் முதலாக அரசால் சோதனை என்ற பெயரில் பல பொக்கிஷங்களை இழந்துள்ளார் . கே.எஸ்.ஆர் என்ற அழைக்கப்படும் இவர், திருநெல்வேலி மாவட்டம் குருஞ்சாக்குளம் கிராமத்தில் ஒரு விவசாயக் குடும்பத்தில் பிறந்தார். சட்டப் படிப்பில் தனது முதுநிலைக் கல்வியை முடித்தபின்  தமிழ்நாடு வழக்கறிஞர் கழகத்தில் பதிவு செய்து கொண்டு, சென்னை உயர்நீதி மன்றத்தின் பல்வேறு சிவில், கிரிமினல் மற்றும் பொதுநல வழக்குகளில் வழக்குரைஞராக வாதாடியுள்ளார்.
திரு. கே.எஸ். இராதாகிருஷ்ணன் அவர்கள் புது தில்லியில் இயங்கி வரும் இந்திய சட்ட நிறுவனத்திலும், சர்வதேச சட்ட அமைப்பின் (இந்தியா பிரிவு) மற்றும் இந்தியா மத்தியஸ்த கவுன்சில் ஆகியவற்றில் ஆயுட்கால உறுப்பினராக இருந்து வருகிறார்.
இந்திய வழக்கறிஞர்கள் சங்கத்தின் தமிழகப் பிரிவின் இணைச் செயலாளராக இருந்து வருகிறார். பல்வேறு அரசு அமைத்த விசாரணை கமிஷன்களிலும் வழக்கறிஞராக ஆஜராகி உள்ளார்.
தமிழக அரசின் அறநிலையத் துறையின் சார்பாக பல்வேறு வழக்குகளில் வழக்கறிஞராகவும், தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகம் மற்றும் தமிழ்நாடு தொழில் கழகத்தின் சட்ட ஆலோசகராகவும் இருந்து வந்தார்.
கொச்சி துறைமுக கழகத்தின் மத்தியஸ்த அமைப்பின் நடுவராக இருந்தார்.
மத்திய திரைப்படத் தணிக்கைத் துறையின் உறுப்பினராக 12 வருடங்கள் இருந்தார்.
மத்திய அரசின் ரயில்வே அமைச்சகத்தின் பயணிகளின் நல வாரியத்தின் உறுப்பினர், மத்திய சுற்றுச் சூழல் அமைச்சகத்தின் ஆலோசனைக் குழு உறுப்பினராகவும் பொறுப்பில் இருந்தார்.
மத்திய அரசின் தொழிலாளர் நல அமைச்சகத்தின் கீழ் அமைந்துள்ள குழந்தை தொழிலாளர் மற்றும் தொழிலாளர் கல்விக்கான மத்திய ஆலோசனை வாரியத்தின் உறுப்பினராகவும் இருந்தார்.
ஐ.நா. மன்றத்தில் நியூயார்க்கில் கிடைத்த பெரிய பொறுப்பை உதறி அரசியல் பணியில் ஈடுபட்டுள்ளார்.
இவருடைய சகாக்கள் இன்றைக்கு உச்சநீதிமன்ற, உயர்நீதிமன்ற நீதிபதிகள். இவரால் அரசியலுக்கு வந்தவர்கள், இவரால் உயர்ந்தவர்கள் எல்லாம் இன்றைக்கு முன்னாள், இந்நாள் நாடாளுமன்ற உறுப்பினர்கள், அமைச்சர்கள்.
மக்களுக்கான நீதி சேவை:
1. சென்னை உயர் நீதிமன்றத்திலும் உச்ச நீதிமன்றத்திலும் மக்கள் நலனுக்காக பல்வேறு பொது நல வழக்குகளை தொடர்ந்தவர். அதில் நாட்டில் உள்ள நதிகளை தேசியமயமாக்குதல், கங்கை-கிருஷ்ணா-காவிரி-வைகை-தாமிரபரணி-குமரி மாவட்டம் நெய்யாறோடு இணைத்தல், கேரளாவில் உள்ள அச்சன்கோவில்-பம்பை தமிழகத்தில் உள்ள வைப்பாறோடு இணைத்து மற்றும் மேற்கே கேரளாவில் மேற்கு நோக்கி பாயும் நதிகளின் உபரி நீரை தமிழகத்திற்கு திருப்பி விடக் கோரி என்று 1983 ஆம் ஆண்டு முதல் போராடி உச்ச நீதிமன்றத்தில் போராடி 27-02-2012ல் தீர்ப்பையும் பெற்றார். உச்சநீதிமன்றத்தில் சிறைக் கைதிகளுக்கான வாக்குரிமைக்காகவும் பஞ்சாயத்து ராஜ் அமைப்பில் மூன்றடுக்கு முறைக்காகவும் போராடினார். பல்வேறு ஊழலை ஒழிக்க தேர்தலில் சீர்திருத்தங்களை கொண்டுவரவும், வாகன போக்குவரத்தை ஒழுங்குபடுத்தவும் பொதுநல வழக்குகளையும் தொடுத்துள்ளார்.
சென்னை உயர்நீதி மன்றத்தில் அவர் தொடர்ந்த குறிப்பிடத்தக்க பொதுநல ரிட் மனுக்கள்:
2. விவசாயிகள் மீது ஜப்தி நடவடிக்கைகள், அவர்களுக்கு கடன் நிவாரண உரிமைகளைப் பெறவும் வழக்குகள் தொடுத்து உரிய ஆணைகளையும் உயர்நீதிமன்றத்தில் பெற்றார்.
3. தூக்குத் தண்டனை கூடாது என்று இன்றைக்கு எட்டு திக்கிலிருந்தும் குரல்கள் கேட்கின்றன. 1983 ல் உச்சநீதிமன்றம் நிராகரிக்கப்பட்டு, குடியரசுத் தலைவரிடம் வழங்கப்பட்ட கருணை மனுவும் தள்ளுபடி செய்யப்பட்டு, இனிமேல் வேறு வழி இல்லை. தூக்கு தண்டனைதான் என்ற நிலையில் 3 நாட்களில் தூக்கில் தொங்க இருந்த வீரபாண்டிய கட்டபொம்மனின் வாரிசு குருசாமி நாயக்கரை, வெறும் மூன்று வரி தந்தியில் சென்னை உயர்நீதிமன்றத்தில் தூக்கு தண்டனையில் இருந்து காப்பாற்றியதெல்லாம் கடந்த காலம். இது ஒரு உயர்நீதிமன்ற வழக்கறிஞர் என்ற முறையில் செய்த கடமையாகும்.
4. கம்பம் பள்ளத்தாக்கில் அமைந்துள்ள கண்ணகி கோவிலுக்கு தமிழ் நாட்டைச் சேர்ந்த பயணிகள் வருவதற்கு கேரள அரசு தடை விதித்தையடுத்து, சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து அங்கு காவல்துறை பாதுகாப்புடன் பக்தர்கள் வழிபாட்டை தொடர வழி செய்தார்.
5. விடுதலைப் புலிகள் இயக்கத் தலைவர் பிரபாகரனின் பாண்டி பஜார் துப்பாக்கிச் சூடு வழக்கு, ஏனைய வழக்குகளிலும் வழக்கறிஞராக வாதிட்டவர்.
6. ஈழத் தலைவர்கள் பாலசிங்கம், சந்திரஹாசன், டாக்டர் சத்யேந்திரா எம்.ஜி.ஆர். ஆட்சிக் காலத்தில் தமிழகத்திலிருந்து நாடு கடத்தியபோது வழக்குத் தொடுத்து 24 மணி நேரத்தில் இந்தியாவிற்கு திரும்ப அழைக்கப்பட்டனர். இந்த வழக்கை சிறப்பு அனுமதி பெற்று நடத்தினார்.
7. 1983 ஆம் வருடம் விருதுநகர் மாவட்டம் ஆலங்குளத்தில் இயங்கி வந்த தமிழ்நாடு சிமெண்ட் ஆலையில் இருந்து வெளியேறிய நச்சுப் பொருட்களால் சுற்றுச்சூழல் மாசு ஏற்பட்டு வந்ததையடுத்து அந்த ஆலையினை மூட வேண்டி தொடர்ந்த வழக்கில் ஆலையை மூடுமாறு இடைக்கால உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. தமிழக அரசு 70 கோடி ரூபாய் செலவில் அந்த ஆலையை புதுப்பித்து சுற்றுச்சுழல் மாசுபடாமல் இருக்க செய்யுமாறு உயர் நீதிமன்றம் அறிவுறுத்தியது. இந்த உத்தரவால் ராஜபாளையம் மற்றும் சிவகாசி பகுதி மகிழ்ச்சியடைந்து திரு. கே.எஸ்.ஆர் அவர்களுக்கு தங்களது மனமார்ந்த நன்றியினை தெரிவித்துக் கொண்டனர்.
8. 1983 இவர் தொடர்ந்த ரிட் மனுவினால் திருநெல்வேலி மற்றும் தூத்துக்குடி மாவட்டத்தை தமிழக அரசு வறட்சி பாதிக்கபட்ட பகுதியாக அறிவித்தது
9. காவல் நிலையத்தில் இறந்த பலரது குடும்பங்களுக்கு பொதுநல வழக்கு தொடர்ந்து அதன் மூலம் இழப்பீட்டு தொகையை பெற்றுத் தந்துள்ளார்.
10. விவசாய மற்றும் சுற்றுச்சூழல் தொடர்பாக இவர் தொடர்ந்த ரிட் மனுக்கள் பல நிலுவையில் உள்ளன.
11. காவிரி பிரச்சினையிலும், முல்லைப்பெரியாறிலும் எடுத்துக்கொண்ட வழக்குமன்ற நடவடிக்கைகள்.
12. சென்னை உயர்நீதிமன்றத்தில் 1999ல் சட்ட மேலவை அமைக்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று உத்தரவு பெற்றார்.
13. தேசிய மனித உரிமை ஆணையத்திலும், மாநில மனித உரிமை ஆணையத்திலும் பல்வேறு வழக்குகள் தாக்கல் செய்துள்ளார். சந்தனக் கடத்தல் வீரப்பன் வழக்கில் அப்பாவி மக்கள் கர்நாடக அரசால் மைசூர் சிறையில் வாடியவர்களுக்கெல்லாம் குரல் கொடுத்தார்.
14. கூடங்குளம் அணுமின் நிலையத்திற்கு எதிராக முதல் முதலில் வழக்கு தொடர்ந்தார்.
இவருடைய சீனியர் முதுநிலை வழக்கறிஞர் ஆர். காந்தி, மறைந்த பிரபல முதுநிலை வழக்கறிஞர் என்.டி. வானமாமலை ஆகியோர் இவரை வழி நடத்தினர். வழக்குகளில் இவருக்கு வழிகாட்டினர்
ஆனால் நான் பார்த்தவரை யாரையும் இவர் பகைத்து கொண்டதில்லை .இவருக்கு வடசென்னை தொகுதியில் போட்டியிட வாய்ப்பு கிடைத்தும் கொடுக்காமல் போனது அப்போது அவர் சார்ந்து இருந்த கட்சியின் துரதிர்ஷ்டம் என்றே கூறலாம் .

இவருடைய அரசியல் வாழ்க்கையில் தகுதியே தடை ஆகிவிட்டது .

இழந்தது அதிகம் பெற்றது ஒன்றுமே இல்லை 

  மறக்க பட்ட (மறைக்க பட்ட மனிதனின் வரலாறு ) 

தொடரும் -
Namakkal Raja
நாயக்கர் சேனா
.அடுத்து மறக்க (மறைக்க பட்ட )மனிதர் சிவகாசி  திரு சீ ராமசாமி நாயுடு பற்றி தான்

No comments:

Post a Comment

#விவசாயிகள் சங்க நிறுவன தலைவர் சி.நாராயணசாமிநாயுடு 40வது நினைவு நாள்.

———————————————————- தமிழக விவசாயிகள் சங்க நிறுவன தலைவர் சி.நாராயணசாமி நாயுடு (டிசம்பர் 6, 1925 - டிசம்பர் 20, 1984) தமிழக விவசாயிகள் சங்க ந...