கழக மகளிரணி செயலாளர் கவிஞர். கனிமொழி அவர்கள் தூத்துக்குடி நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிடுவதற்காக விருப்பமனுவை நேற்று அறிவாலயத்தில் அளித்தார். அந்த நிகழ்வுக்கு என்னை அவர் அழைத்திருந்தார். அதன் பின்னர் தூத்துக்குடி தொகுதி கழக நிர்வாகிகளுக்கு சவேராவில் மதிய விருந்து எற்பாடு செய்யப்பட்டது. அதிலும் நான் கலந்து கொண்டேன்.
அங்கு வந்திருந்த தூத்துக்குடி மாவட்ட கழகத்தோழர்களை திருமண
நிகழ்ச்சிகளில் அவ்வப்போது சந்தித்ததுண்டு. ஏறத்தாழ 14 ஆண்டுகளுக்கு பின்னால் தூத்துக்குடி மாவட்ட கழக நிர்வாகிகளை கழக நிகழ்ச்சியில் சந்திக்க ஒரு வாய்ப்பு அமைந்தது. கடந்த காலங்களில் அப்படியான சூழலில் என்னோட சொந்த ஊர் அரசியல் இருந்தது.
அதில் சிலர், "அண்ணாச்சி, எப்டி இருக்கீக? நீண்ட இடைவெளிக்கு பின்னர் உங்களுடன் இணைந்து களப்பணியாற்ற இருப்பது மட்டற்ற மகிழ்ச்சு, சீக்கிரம் தொகுதிக்கு வந்துருக அண்ணாச்சி என ஆவலுடன் பேசியதும், வாஞ்சையுடன் நலம் விசாரித்ததும் மகிழ்ச்சியாக இருந்தது.
என்னை நன்கு அறிந்த, என்னுடன் களப்பணி ஆற்றிய பலருக்கும் என் பலம் அறிவர். ஆனால் சிலரோ என்னை ஊடக எழுத்தாளராகவும் மட்டுமே கருதி வருகின்ற வேளையில் இந்த சந்திப்பு எனக்கு கடந்தகாலத்தில் ஆற்றிய களப்பணிகள் இன்னும் வீண்போகவில்லை என்பது தான் உணர்த்தியது. அடுத்து தேர்தல் களப்பணிகளை கவனிக்க வேண்டியது தான்.
#தூத்துக்குடி_நாடாளுமன்ற_தொகுதி
#கழக_வேட்பாளர்_கனிமொழி
#KSRadhakrishnanpostings
#KSRpostings
*கே.எஸ்.இராதாகிருஷ்ணன்*
05-03-2019
No comments:
Post a Comment