Sunday, March 31, 2019

உத்தமர்காந்தி

#உத்தமர்காந்திக்கு உயர்ரத்த அழுத்தம் இருந்ததாக தகவல்கள் வெளிவந்துள்ளன. தேசப்பிதா உத்தமர் காந்தியின் மருத்துவ அறிக்கை முதன்முறையாக வெளிவந்துள்ளது. அதில் அவருக்கு உயர் ரத்த அழுத்தம் இருந்ததாக கூறப்பட்டுள்ளது. அவருக்கு 1938ஆம் ஆண்டில் எடுக்கப்பட்ட மருத்துவ ஆய்வின்படி அவரது உடல் எடை 46.7 கிலோ என்றும், உயரம் 5 அடி 5 அங்குலம் ஆக இருந்ததாக ஒரு தகவல் தெரிவிக்கிறது. அவர் முறையே 1925, 1936, 1944 என மூன்று முறை மலேரியாவால் பாதிக்கப்பட்டிருந்தார். மேலும் 1919, 1924 ஆகிய ஆண்டுகளில் அறுவை சிகிச்சையும் மேற்கொண்டிருந்தார். IJMR - Indian Journal of Medical Research வெளியிட்ட Gandhiji and Health 150 என்ற பெயரில் அறிக்கை வெளியானது. 

அதில் காந்தி எப்படி சுகாதாரம், தூய்மை ஆகியவற்றின் மீது முக்கியத்துவம் கொடுத்தார். உடல்நலம், மனநலம் என இரண்டையும் ஒருசேர பேணி வந்தால் தான் ஆரோக்கியமான வாழ்வு வாழ முடியும் என்பதை உணர்ந்திருந்ததாக குறிப்பிடுகிறது. ஒரு நாளைக்கு 18 கிலோமீட்டர் தூரம் நடப்பாராம். அவர் 1913 முதல் 1948 வரை மட்டும் சுமார் 79 ஆயிரம் கிலோமீட்டர் நடந்து உள்ளார். இந்த தூரமானது பூமியை இரண்டு முறை சுற்றி வந்ததிற்கு சமம். அவர் தேநீர், காபி, புகையிலை, போதை வஸ்துக்கள், மது ஆகியவற்றை தவிர்த்துவிட்டு இயற்கை முறையிலான உணவு பழக்கத்தை கடைபிடித்தார். ஆரோக்கியமான மனநிலையே ஆரோக்கியமான உடல் நலத்திற்கு உதவும் என்ற கொள்கையைக் கொண்டிருந்தார்.




#உத்தமர்_காந்தி
#Mahatma_Gandhi_Health
#KSRadharkrishnanPostings
#KSRPostings
கே. எஸ். இராதாகிருஷ்ணன்.
29-03-2019

No comments:

Post a Comment

#விவசாயிகள் சங்க நிறுவன தலைவர் சி.நாராயணசாமிநாயுடு 40வது நினைவு நாள்.

———————————————————- தமிழக விவசாயிகள் சங்க நிறுவன தலைவர் சி.நாராயணசாமி நாயுடு (டிசம்பர் 6, 1925 - டிசம்பர் 20, 1984) தமிழக விவசாயிகள் சங்க ந...