கம்யூனிஸ்டு தலைவர் #கோவில்பட்டி சோ.#அழகர்சாமி அவர்கள்.
மார்ச்சு மாதம் 6 ஆம் தேதி, அவரது நினைவு நாள். கம்யூனிஸ்டுகள் நினைவு நாள்.
எங்கள் கரிசல் பூமியின் கேந்திர நகரமான கோவில்பட்டி நகரின் அடையாளம் இவர். பலமுறை சட்டமன்றத்திற்கு தேர்ந்தெடுக்கப்பட்ட நேர்மையான, எளிமையான கம்யூனிஸ்ட் தலைவர்.சட்டக் கல்லூரியில் படிக்கும்போது இவரோடு தேவி திரையரங்கம், பிராட்வே உள்ள ஜனசக்தி அலுவலகம் பாலன் இல்லம் என சென்னையின் பல பகுதிகளுக்கு, ஆட்டோவில் உடன் பயணம் செய்ததுண்டு.
அவரை எதிர்த்தே 1989 பொதுத் தேர்தலில் தி.மு.க வேட்பாளராக கோவில்ப்பட்டியில் களங்கான வேண்டிய நிலையில் இருந்தேன். அப்போதும் தேர்தல் கழத்தில் என்னை தட்டி கொடுத்து, நீ ஜெயித்தால் என்ன? நான் ஜெயித்தால் என்ன? என்று பெருந்தன்மையோடு பேசியது இன்றும் காதில் ரீங்காரமிடுகிறது.
எட்டயபுரத்தில் வாக்கு சேகரிக்க இவர் வீட்டுக்கு சென்றபோது, என்னை வரவேற்று, அங்கு அம்மா அவர்கள் தேநீர் கொடுத்ததெல்லாம், எவ்வளவு பெரிய அரசியல் நாகரிகம் என்று மெச்சக்கூடிய நிலை அன்று இருந்தது.
மேன் மக்கள் மேன் மக்கள் தான்.
#சோஅழகர்சாமி
கே.எஸ். இராதாகிருஷ்ணன்
06.03.2017
No comments:
Post a Comment