Thursday, March 7, 2019

விளாத்திகுளம்தொகுதியில்....

எதிர்வரும் நாடாளுமன்ற தேர்தல் மற்றும் சட்டமன்ற இடைத்தேர்தலில் #

 போட்டியிட வேண்டும் என்று நெருங்கிய கழகத் தோழர்களும், நண்பர்களும் என்னிடம் கூறினர். என் சார்பில் ,எனக்காக நாடாளுமன்றத் தேர்தல், குறிப்பாக சட்டமன்ற இடைத் தேர்தலிலும் போட்டியிட வாய்ப்பு கேட்டு மனுகள் செய்துள்ளனர். நாகம்பட்டி கே.ராமானுஜம்,  ப.மு.பாண்டியன் (முன்னாள் ஒன்றிய செயலாளர் மற்றும் பொதுக்குழு உறுப்பினர்), கழக அன்பர்கள் விளாத்திகுளம் சரவணன், எட்டயபுரம் சௌந்தரராஜன், சாத்தூர் வேலுச்சாமி, சிவகாசி தாமோதரக்கண்ணன், ரவி போன்றோர் என் மீது அன்பு காட்டி விருப்ப மனுக்களை வழங்கியதற்கு மகிழ்ச்சி,மிக்க நன்றி. 




தேர்தல் களங்களை 1972லிருந்து கண்டு வருகிறேன், வேட்பாளராகவும், வேட்பாளரின் முகவராகவும் களத்தில் இருந்ததெல்லாம் இன்றைக்கும் நினைவில் உள்ளது. தேர்தல் வாய்ப்புகள் ஒருபுறம் இருந்தாலும், பொது தளத்தில் நம்மால் இயன்றதை செய்ய வேண்டும் என்பதே எனது மனப்போக்கு. தேர்தலில் போட்டியிடுவதையும் அதை நெறிப்படுத்துவதும் தலைமைக் கழகம் தான் முடிவு செய்ய வேண்டும். 

விளாத்திகுளம்தொகுதியின் இடைத்தேர்தலில் போட்டியிட வேண்டி நண்பர்களும், என் சார்பில் அளிக்கப்பட்ட மனுவில் குறிப்பிட்டவாறு;
இது எனக்கு கிடைத்த சான்றிதழாக எண்ணி பெருமை கொள்கிறேன்......
(நான் என என் சார்பாக குறிப்பிட்டுள்ளனர்)

‘’நான் தேர்தல்களில் போட்டியிட்ட கோவில்பட்டி சட்டமன்ற தொகுதிகளில் இருந்து 50 சதவீத கிராமங்கள் மறு சீரமைப்பில் இன்றைய விளாத்திக்குளம் சட்டமன்ற தொகுதியில் சேர்க்கப்பட்டுள்ளது. 1972லிருந்து கோவில்பட்டி, விளாத்திக்குளம், சங்கரன்கோவில், சாத்தூர், சிவகாசி, ராஜபாளையம், ஒட்டப்பிடாரம் தேர்தல்களில் வேட்பாளர்களின் முகவராகவும், வேட்பாளராகவும் இந்த வட்டாரத்தில் போட்டியிட்டுள்ளேன். நல்ல அறிமுகம். இந்திய கம்யூனிஸ்ட் கட்சியை சேர்ந்த முன்னணி தலைவரும் சட்டமன்ற உறுப்பினருமான மறைந்த சோ. அழகிரிசாமிக்கு முகவராகவும், வைகோ அவர்களுக்கும் தேர்தலில் வேட்பாளர்களின் முகவராக பணியாற்றியுள்ளேன். இந்த பகுதியை பற்றிய நல்ல புரிதல் உண்டு. கட்சி சார்பற்ற விவசாய சங்கத்தை மறைந்த சி. நாராயணசாமி நாயுடு நடத்திய போது இந்த வட்டாரத்தில் இந்த போராட்டம் வலுவடைந்தபோது, 1970களிலிருந்து 1985வரை பொறுப்பேற்று நடத்தியவன். விவசாயிகளின் நலனுக்காக பொதுநல வழக்குகளையும் பல்வேறு நடவடிக்கைகளையும் பொது தளத்தில் செய்தவன். 48 ஆண்டு காலம் கள அரசியலில் இந்த வட்டாரத்தில் இருக்கின்றவன். வானம் பார்த்த இந்த கரிசல் மண் பகுதியில் நதிநீர் இணைப்பு, நீர்நிலைகள் பாதுகாப்பு, இயற்கை விவசாயம், கலை, இலக்கிய நிகழ்வுகளை நடத்தியுள்ளேன்.’’

#KSRadhakrishnanPostings 
#KSRPostings
K S Radhakrishnan
கே.எஸ்.இராதாகிருஷ்ணன்.
07-03-2019

No comments:

Post a Comment

*Learn in life for every inch of sadness lies a foot of happiness ahead*

*Learn in life for every inch of sadness lies a foot of happiness ahead*. Learn that the simplest of times brings the grandest of pleasures ...