இன்று தினமணி நாளிதழ் நடத்திய மகளிர் தினம் பழம் பெரும் நடிகைகள் கலந்து கொள்ள கலைவாணர் அரங்கில் சிறப்பாக நடந்தது.
1960-70களில் தமிழ் வெள்ளித்
திரையில் ஜொலித்த தாரகைகள் வைஜயந்தி மாலா பாலி, சௌகார் ஜானகி, ஜமுனா, ராஜஸ்ரீ, காஞ்சனா,கே ஆர் விஜயா, சாரதா, வெண்ணிற ஆடை நிர்மலா, குமாரி சச்சு, போன்ற திரை தாரகைகள் பங்கேற்ற நிகழ்வில் கலந்து கொள்ள வாய்ப்பு கிட்டியது. இந்த நிகழ்ச்சியில் தமிழக ஆளுநரும் தினமணி ஆசிரியர் வைத்தியநாதனும் பங்கேற்றனர்.வைஜயந்தி மாலா பாலி, ஜமுனா, சாரதா முன்னாள் நாடளுமன்ற உறுப்பினர்கள்.
நிகழ்ச்சியில் திரையிசைப் பாடல்களோடு அந்த ஆவணப்படத்தை பார்க்கும் பொழுது பள்ளிப் பருவத்திற்கும் கல்லூரி காலத்திற்கும் மலரும் நினைவுகளாக அழைத்துச் சென்றது. அப்போது திரைவானில் கோலோச்சிய இந்த நாயகிகளை தூரத்திலிருந்து வெள்ளித் திரையில் பார்த்தபோது இப்படியான ஒரு சூழல் கிடைக்கும் என்று அந்த காலங்களில் எதிர்பார்க்கவில்லை.
தமிழக ஆளுநர் பன்வாரிலால் மகளிர் தின விழாவில் பேசும்போது மேடையில் அமர்ந்திருந்த வைஜயந்திமாலாவைப் புகழ்ந்து தள்ளிவிட்டார்.நாக்புரில் படிக்கும்போது வகுப்புக்கு கட் அடித்துவிட்டு வைஜயந்திமாலா நடித்த ஹிந்தித்திரைப்படத்தைப் பார்த்ததாக ரசனையுடன் சொன்ன பன்வாரிலால் ஒரு ஹிந்திப்பாடலின் இரு வரிகளை ராகமில்லாமல் பாடியும் காட்டியபோது எண்பத்தெட்டு வயதிலும் என்னவொரு வெட்கம் வைஜயந்திமாலா முகத்தில்!
#பழம்பெரும்நடிகைகள்
#KSRadhakrishnanPostings
#KSRPostings
K S Radhakrishnan
கே.எஸ்.இராதாகிருஷ்ணன்.
08-03-2019
No comments:
Post a Comment